பயனர் பேச்சு:Sivam29

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வேண்டுகோள்![தொகு]

வணக்கம் சிவம். பொதுவாக நான் இங்கு விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. காரணம் : கட்டுரைகளை எழுதுவதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை – வாழ்க்கையின் சூழல் அம்மாதிரி! இங்கு செய்யவேண்டிய முன்னேற்றங்கள் எவ்வளவோ உள்ளன. நான் எழுதும் கருத்துக்களை பொறுமையாக படிக்கவும்.

  1. உங்கள் துறையான பொறியியல் குறித்து நிறைய எழுதுங்கள்
  2. தமிழ் பற்றி எழுதுங்கள்
  3. இலங்கையின் இடங்கள் குறித்து எழுதுங்கள்
  4. நீங்கள் தற்போது வாழும் நாட்டின் இடங்கள் குறித்து எழுதுங்கள்
  5. சாதி, சமயம் குறித்து எழுதவேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால், மற்றவரின் நம்பிக்கைகளையும் மனதையும் துன்புறுத்தும் வகையில் எழுதுவதை நாம் எல்லாரும் தவிர்க்கவேண்டும்.
  6. யாரையும் எத்தருணத்திலும் மரியாதைக் குறைவாக பேசவேண்டாம். எவரேனும் பேசினாலும் நீங்கள் அப்படி நடக்காதீர்கள். நீங்கள் பொறுமையாக செயல்பட்டால், மற்றவர் உங்களுக்கு துணை செய்வர்.
  7. நீங்கள் குறிப்பிட்டீர்களே... மூத்த விக்கிப்பீடியர்கள் குறித்து...எவரும் இங்கு பதக்கங்களுக்காகவோ, பேர் புகழுக்காகவோ எழுதவில்லை. தமிழுக்காக எழுதுகிறார்கள். அனைவரும் நிறைய படித்த, திறமை நிரம்பிய அறிஞர்கள்! தங்களின் பொன்னான நேரத்தை தமிழுக்காக செலவிடுகிறார்கள். அவர்களை பழிக்காதீர்கள்.
  8. ஆக்கம் கடினமானது; அதனை செய்துவிட்டு தயவுசெய்து அழிக்காதீர்கள். உங்களின் சொந்த ‘மெயில் பாக்ஸ்’ உள்ளடக்கங்களை அழிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் இங்கு எழுதிய கட்டுரைகளை அழிக்காதீர்கள்.
  9. இறுதியாக ஒன்று சொல்லுகிறேன்: (எனது கூற்றினை இனவாதமாக யாரும் கருதவேண்டாம்) நம் தமிழினம் குறிப்பிட்ட சில விசயங்களில் வெல்ல இயலாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் – நம்மிடையே ஒற்றுமை இல்லாததுதான்!

நட்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:49, 23 செப்டெம்பர் 2012 (UTC) 👍 விருப்பம் இதை எனக்குக் கூறியதாகவும் எடுத்துக் கொள்கிறேன். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:07, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

எனது கருத்து[தொகு]

வணக்கம் செல்வசிவகுருனாதன் மற்றும் தமிழ்க்குரிசில். நான் உண்மையை சொல்கிறேன், அதேவேளை என்னில் தவறு இருந்தால் எனக்கு தண்டனை குடுங்கள். உண்மையில் நான் தமிழன். ஆனால் நான் சிறுவயதில் இருந்து யேர்மனி நாட்டில் வசித்துவருகிறேன் அதனால் எனது தமிழ் கட்டுரையில் சில எழுத்துபிலையோ அல்லது விக்கிக்கு ஏற்ற கட்டுரை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் பொறியியல் சார் பல விடையங்கள் மற்றும் மருத்துவம் சார் விடயங்களை தமிழ் விக்கியில் மேன்படுத்தவேண்டும் என்ற ஆசையினாலும், தமிழ் விக்கியை மேன்பட வைக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் தமிழ் விக்கியில் நுழைந்தேன். அதேவேளை எனக்கு தெரிந்த எனது தமிழ் மருத்துவ நண்பர்கள் பொறியியல் துறை நண்பர்களை தமிழ் விக்கிக்கு நம்பி அழைத்து வந்தேன், ஆனால் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. விக்கியின் வளர்ச்சிதான் எனக்கு அவசியம் என்று உங்களை போலதான் நானும் நினைத்தேன். ஆனால் எனது தமிழ் பிழை, சும்மா பிசத்துகிறார், தமிழே தெரியாதவர், உருப்படியாக ஒரு கட்டுரையையும் எழுதவில்லை, பொய்யர், என்று பல குற்ற சாட்டுகள் மற்றவர்களால் என் மேல் வைக்கப்பட்டது. அதை முன்கூட்டியே ஆலமரத்தடியில் கூறியிருந்தேன். ஆனால் ஆரம்பத்தில் நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை, ஆனால் விக்கி நண்பர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் தாக்கி உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களோ தெரியவில்லை. அதனால் நானும் சிறிய அளவில் தாக்கினேன் அது உண்மைதான். அதேவேளை நான் எழுதும் கட்டுரைக்கு தகுந்த ஆதாரங்கள் குடுத்தேன் அதை யாரோ நீக்கிவிட்டு மீண்டும் ஆதாரம் கேக்கிறார்கள். அப்போ நான் என்ன செய்வது?? என் தமிழ் கட்டுரையை ஆங்கில கட்டுரையோடு ஒப்பிட்டு பார்த்து பிழை என்றார்கள், ஆனால் அது பிழை இல்லை என்பது எழுதிய எனக்குத்தான் தெரியும். காரணம்:காற்றுச் சுழலி என்பது ஒரு பொறியியல் கட்டுரையாகும். அதை எடுத்த உடனேயே பொறியியல் கட்டுரையாக எழுதுவதனால் தமிழ் வாசகர்கள் யாருக்கும் பலன் இல்லை அதேவேளை புரியப்போறதும் இல்லை அதனால் ஆரம்ப விளக்கத்துடன் அதனை நான் ஆரன்பித்தேன். காரணம்: அதுதான் முறை, அப்போதுதான் கட்டுரையை பார்க்கும் பாமர மக்களுக்கு புரியும். அந்த கட்டுரை மேலும் பல பொறியியல் சார் தொகுப்புகள் தொகுக்க இருந்தன, ஆனால் இப்போ அவைகள் தேவை இல்லை என்ற நிலைமைக்கு சிந்திக்க வேண்டியவனாக நான் உள்ளன.

குறிப்பு: உங்கள் வேண்டுகோளுக்கு நான் தலை வணங்கி நன்றி கூறுகிறேன். விக்கி நண்பர்களை வேதனை படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும். நான் வேணும் என்று அப்படி பேசவில்லை. என்னையும் , எனது கட்டுரையையும் இழிவாக மற்று நண்பர் பேசியதனால் அதை கண்டு கொள்ள யாரும் இல்லை என்ற நிலையில் கொபப்ட்டுள்ளேன். நன்றி அனைவருக்கும்.--சிவம் 07:26, 23 செப்டெம்பர் 2012 (UTC)

உங்கள் அன்பான வேண்டுகளை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். சாதி , மற்றும் சமையம் சார் கட்டுரையில் எதிர்வரும் காலங்களில் நான் கலந்துகொள மாட்டேன். அவை எனக்கு ஏற்புடையதும் இல்லை என்பதை நான் அறிந்தேன். நன்றி.--சிவம் 08:00, 23 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் சிவம்! உங்கள் மறுமொழியை படித்தேன். உங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு எனக்கு தகுதி இல்லை. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். நாம் எல்லோரும் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காகவே இங்கு கூடியுள்ளோம். நம் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால் ஒன்றாயிருந்தால் தானே சாதிக்க முடியும்? சில இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுவது இயல்பே. அதற்காக கோபப்பட்டு சாடுவதோ குறை கூறுவதோ சான்றோர்க்கு அழகல்ல. பிழை செய்யாதோர் யார் உளர்? தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளுங்கள். பிறரிடம் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். முடிந்தவரை ஆதரங்களுடன் உரையாடுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:51, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழக்குரிசில். கண்டிப்பாக முன்னேடுக்கின்றேன். நன்றி.--சிவம் 08:56, 23 செப்டெம்பர் 2012 (UTC)

👍 விருப்பம்--Nan (பேச்சு) 09:30, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:04, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

--சிவம் 14:04, 23 செப்டெம்பர் 2012 (UTC)== நன்றி! ==

வணக்கம், சிவம்! புரிந்து கொண்டமைக்கு நன்றி!

  1. இங்கு அனைவரிடமும் கண்ணியத்துடன் நடந்து கொண்டால்... நமது மொழியை வளர்ப்பதோடு நாமும் நமது தொண்டில் தன்னிறைவு அடையலாம்.
  2. நீங்கள் இங்கு கட்டுரைகளை எழுதும் அதே தருணத்தில்... இங்கு நிறைய கட்டுரைகளைப் படியுங்கள். இதன் மூலம் உங்களின் உரைநடைத்திறனை வளர்ப்பதோடு, எழுத்துப்பிழை, சொற்பிழை மற்றும் வாக்கியப்பிழைகளின்றி எழுதக் கற்றுக்கொள்ள இயலும். (நான் இங்கு எழுதும் நேரத்தைவிட, இங்கு கட்டுரைகளை படிக்கும் நேரமே அதிகம்)
  3. சிறிது காலத்திற்கு நீங்கள் பேச்சுப் பக்கங்களில் பங்கு பெறுவதைத் தவிர்த்து படிப்பதிலும், கட்டுரை ஆக்கங்களிலும் கவனம் செலுத்துதல் நல்லது என்பது என் எண்ணம். இதன் மூலம் உங்களை பட்டை (வைரம்) தீட்டிக் கொள்ள இயலும்.
  4. உங்களுக்கு தேவைப்படும் உதவிகளை எவரிடமும் கேட்கலாம்; உதவுவார்கள்.
  5. நீங்கள் கேட்காமலேயே உங்களின் கட்டுரைகள் உரிய முறையில் மற்ற பயனர்களால் திருத்தங்கள் பெறும். எனவே பிழைகள் குறித்து வருந்தவேண்டாம்.
  6. மற்ற பயனர்கள் செய்யும் திருத்தங்கள் குறித்து மனவருத்தமோ சங்கடமோ தேவையில்லை. எனது ஆரம்பகால கட்டுரைகளை அனைவரும் திருத்தித் தந்தார்கள்; என்னைவிட 15 வயது குறைவான ஒரு இளைஞர் ஒரு சொல்லை நீக்கியபோது சிறிய சங்கடம் ஏற்பட்டது உண்மை... யோசித்தபோது அச்சொல், தகவல் களஞ்சியத்தில் எழுதத் தகுந்ததன்று என்பது புரிந்தது. நான் அன்று கோபப்பட்டிருந்தால்? யாருக்கு என்ன பயன்? இன்றும் எனக்கு ஏதும் உதவி தேவைப்படின்... என்னை விட 22 வயது குறைந்த ஒரு இளைஞரையே நான் கேட்பேன். ஆக, இங்கு நாம் எதுவும் பார்க்க தேவையில்லை... நமது நோக்கம் – நமது மொழியை வளர்ப்பதே!
  7. நீங்கள் ஒப்புக் கொண்ட தவறுக்கு என்னிடமிருந்து ஒரு தண்டனை உண்டு.... பொறியியல், குறிப்பாக இயந்திரப் பொறியியல் குறித்த கட்டுரைகள் நிறைய எழுத வேண்டியுள்ளது. இங்கு பார்க்கவும்: விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல். எழுதி உதவுங்கள்!

நட்புடன்- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:13, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி. எனக்கு நன்றி சொல்வதை விட எம்மை ஒன்று சேர்த்த தாய் தமிழுக்கு நன்றி. கண்டிப்பாக என்னால் முடியும் வரை தமிழ் விக்கியை மேன்படுத்துவேன். பொறியியல் சார்ந்த கட்டுரை என்பதனால் ஒரு சில கலை சொற்கள் எனக்கு தெரியவில்லை அதனால் தேடுகிறேன். உங்களுக்கும் புரியும் என்று எண்ணுகிறேன். ஒரு கட்டுரை எழுதும் போது அவை மாற்று மொழிகளை கொட்டு வேண்டாம் என்பதுதான் எனது நிலைமை நன்றி. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.--சிவம் 14:04, 23 செப்டெம்பர் 2012 (UTC)

மேலும் ஒன்றை கூறுகிறேன், கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள், மாற்று அல்லது வேற்று மொழிகளில் உள்ள கட்டுரைகளை நான் இங்கு மொழிமாற்றம் செய்ய விரும்பவில்லை. காரணம்: ஒவ்வொரு நாட்டு பொறியியல்துரையும் வேறுபட்ட செயல்பாட்டை கொண்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன், அதனால் தமிழர்கள் வாழக்கூடிய தமிழ் நாடு, இலங்கை போன்றவர்களுக்காக எனது கட்டுரை அமையலாமா?? காரணம்: நான் படித்தது யேர்மனி, ஆனால் யேர்மனிய படிப்புக்கும் இங்கிலாந்து படிப்புக்கும் ஒத்துப்போகாது. இதை நீங்கள் அறிவீர்களோ எனக்கு தெரியவில்லை. நன்றி காரணம்: காற்றுச் சுழலியின் பேச்சுப்பக்கத்தில் இதை போன்றுதான் உரையாடினேன். --சிவம் 14:22, 23 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், உங்கள் கடைசிக் கேள்வி குறித்து எனது கருத்து. அறிவியல் சார்ந்த கட்டுரைகள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். டொய்ச்சுக் கட்டுரைகள் எவ்வாறு உள்ளனவோ தெரியாது. ஆனால் ஆங்கில விக்கிக் கட்டுரைகள் பெரும்பாலும் பொதுவானதாகவே உள்ளன. அறிவியல் கட்டுரை ஒன்றில் இலங்கை, இந்தியா குறித்த தகவல்களை கட்டுரையின் இறுதியில் பிறிம்பாகத் தரலாம். இலங்கை, இந்தியாவை முன்னிலைப் படுத்த வேண்டாம்.--Kanags \உரையாடுக 21:12, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

முதல் எச்சரிக்கை[தொகு]

சிவம், பாகிம் ஆலமரத்தடியில் கேட்டுள்ள சொற்களைப் பற்றிய ஐயங்களில் எந்தத் தவறும் இல்லை. இது எந்த விதத்திலும் தமிழையோ தமிழரையோ தமிழ்நாட்டையோ அவமதிப்பதாக நினைக்கவில்லை. தொடர்பில்லாத இடங்களிலும் பிற பயனர்களைப் பற்றித் தவறாக முறையிடுவதைத் தவிர்க்கவும். இப்போக்கு தொடர்ந்தால் தங்கள் பயனர் கணக்கை முடக்க வேண்டி வரும்.--இரவி (பேச்சு) 16:21, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நட்புடன்[தொகு]

சிவம், நான் ஏதாவது கூறுமிடங்களிலெல்லாம் நீங்களும் ஏதாவது கூறித்தான் ஆக வேண்டுமென்றில்லை. என்னைப் பற்றித் தவறான சொற்களைப் பயன்படுத்துவதால் சில வேளைகளில் நான் சற்றுச் சினமடைவதைத் தவிர ஆகப் போவது ஒன்றுமில்லை. விக்கிப்பீடியாவிலிருந்து என்னை வெளியேற்றத்தான் வேண்டுமென நீங்கள் நினைத்தால், அதனால் நட்டமடையப் போவது நானென்றா நினைக்கிறீர்கள்? என்னுடைய நேரத்தை நான் ஆக்கபூர்வமான வழிகளிற் பயன்படுத்துவதையே விரும்புகிறேன். எனினும் என்னைச் சிலர் சில நேரங்களில், தேவையில்லாத கருத்தாடலில் இழுத்து விடுவதுண்டு. நான் இந்தோனேசியாவிற்றான் இருக்கிறேன். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என்றெல்லாம் அடிக்கடி பயணப்படுகிறேன். இப்பொழுது இலங்கைக்கு வந்து இரண்டு வார காலம் ஆகிறது. செல்லுமிடங்களிலெல்லாம் விக்கிப்பீடியாவையும் மறக்காமற் பார்த்து வருகிறேன். நீங்களே என்னுடைய கட்டுரைகளையும் கட்டுரைகள் தொடர்பில் நான் வழங்கிய கருத்துக்களையும் கவனித்தால், தூய நோக்கத்துடனேயே நான் எழுதி வருகிறேனெனப் புரிந்து கொள்வீர்கள். என்னுடைய கட்டுரைகளில் நான் எந்தப் பரப்புரையும் செய்வதில்லை. நான் சார்ந்த சமயத்தை என் உயிரிலும் மேலாக நான் மதிக்கிறேன். என் உடல், பொருள், ஆவி அத்தனையையும் அதற்காகத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன். எனினும், விக்கிப்பீடியாவில் நான் எழுதிவருவது தமிழிற் கற்போரும் தமிழிற் தகவல் தேடுவோரும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே. என்னுடைய கட்டுரைகள் பெரும்பாலும் வரலாறு, இடங்கள், ஆட்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றைப் பற்றியே இருப்பதைக் காணலாம். நீங்கள் முதன்முறையாக என்னைத் திட்டித் தீர்த்த போது எனக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது. நான் உங்களுடன் எள்ளளவும் தனிப்பட்ட முறையிற் சினமடையவில்லை. நீங்கள் கூறுவது போல, நான் தமிழ் மொழியை எந்த இடத்திலும் கொச்சைப்படுத்தவில்லை. தமிழ் மொழியை மிக்க நேசிக்கிறேன். நான் தமிழனல்லன். ஆயினும் தமிழ் என் மொழியென்பதில் மகிழ்ச்சியடைகிறேன். செல்லுமிடங்களிலெல்லாம் தமிழ் மொழியைப் பற்றி நல்ல விதமாகவே கூறுகிறேன். இலங்கையில் எனது ஊர் அமைந்துள்ளது சிங்களப் பகுதியிலேயே. எனினும், நாங்கள் எமது பகுதியிற் தமிழைக் காப்பாற்றியிருக்கிறோம். மேலும், நான் தமிழர்களை இழிவுபடுத்துவதாக நீங்கள் கூறியது பிழை. நான் ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை. என்னிடம் கல்வி கற்ற மாணவர்களில் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களைச் சேர்ந்த தமிழ் மாணாக்கர் பலர் இருந்துள்ளனர். கொழும்பை அண்டிய இடங்களிற் கல்வி கற்பித்த தமிழாசிரியைகளே என்னிடம் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துத் தங்களது பிள்ளைகளை என்னிடம் கல்வி கற்கச் செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களது குடும்பத்தினர் வரும்போதெல்லாம் எனக்கும் ஏதாவது பரிசுப் பொருளைக் கொண்டுவருவர். அவ்வாறே, என்னுடன் கொழும்பிற் கல்வி கற்றோரிற் பலரும் தமிழர்களே. நான் அவர்களுடன் மிகவும் நல்ல முறையிற் பழகியிருக்கிறேன். தற்போது இந்தோனேசியாவில் இருந்தாலும் தமிழை விடாது பிடித்துக் கொண்டுள்ளேன். இந்தோனேசியத் தமிழர்களிற் பலருக்கும் தமிழ் சரிவரத் தெரியாது. எனினும், அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் நல்ல தமிழை ஞாபகப்படுத்துவேன். அப்படியிருக்க, நான் தமிழர்களை இழிவுபடுத்துவதாக நீங்கள் கூறுவது எப்படிப் பொருந்தும்? அருள்கூர்ந்து அப்படி நினைக்க வேண்டாம். மேலும், கட்டுரையாக்கங்கள் தொடர்பில் உங்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்வதில் நான் தயங்க மாட்டேன். முதன்முறையாக உங்களுடன் கருத்தாடல் ஏற்பட்டபோது, நான் உங்களது பயனர் பக்கத்தைப் பார்த்தேன். உங்களது தமிழ்ப் புலமை தொடர்பில் நீங்கள் குறிப்பிட்டிருந்த செய்தி உண்மையில் என்னுடைய உள்ளத்தை நெகிழச் செய்தது. நாங்கள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை பிடிக்க வேண்டும்? நாம் நட்பாயிருந்து நம் தமிழை வளர்ப்போமே. ஏதேனும் கட்டுரை உருவாக்க வேண்டுமாயின், அதைப்பற்றி நீங்கள் என்னுடன் நல்ல முறையில் உரையாடலாம். உங்களது தமிழ் நடையையும் தமிழறிவையும் வளப்படுத்துவதற்கு நானும் நட்புடன் உதவலாமன்றோ.--பாஹிம் (பேச்சு) 16:59, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


வணக்கம் மரியாதைக்குரிய பாஹிம். நன்றி. உண்மையை சொல்லுகிறேன். நான் உங்கள் மேல் தனிபட்ட முறையிலோ அல்லது உங்கள் மதம் சார் கொள்கையிலோ வெறுப்பு உடையவன் இல்லை. அதேவேளை நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்றுதான் எனது நிலைமையும். உங்கள் கட்டுரைகள் பலவற்றை நான் வாசித்துள்ளேன், அதேவேளை பலனும் அடைந்தேன். நானும் உங்களை போன்றுதான் எனது வேலை சார்பாக பல நாடுகளுக்கு செல்வேன். அந்த வேளைகளில் நேரம் இருக்கும் பொது விக்கிபீடியாவில் இருக்கும் கட்டுரைகளை வாசித்துதான் எனது தமிழை வளர்த்தேன். உண்மையில் நான் தமிழ் படித்தது எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் அதன் பின் தமிழ் படிப்பதற்கு எனக்கு சந்தர்பம் கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஒரு சிறிய கட்டுரை எழுதும் அளவுக்கு என் தமிழை நானே வளர்த்துக்கொண்டேன். இது எனது தமிழுக்கு போதுமானதாக இல்லை. அதனால் மேலும் வளர்க்க ஆசைபடுக்கிறேன்.

குறிப்பு: நான் விக்கிபீடியாவுக்கு உள் நுழையும் பொது நான் ஒன்று என் வேலை என்று இருந்தேன், ஆனால் தமிழில் சிங்கள சொற்கள் கலந்து உள்ளன என்று இருந்த கட்டுரை பக்கத்தில் எனது நியாயத்தை எடுத்துரைத்தேன், ஆனால் நீங்கள் அந்த பேச்சுப்பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பதை பாருங்கள். அது எனக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அடுத்ததாக உங்களுக்கும் வேறொரு விக்கி பயனருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது எனக்கு முதலில் தெரியவில்லை ஆனால் இப்போது அது தெரிகிறது. கருத்து சுகந்திரம் அனைவருக்கும் உள்ளன அதனால் நீங்களும் மாற்று கருத்துகளை வைக்கலாம் அதை பிழை என்று நான் சொல்லவில்லை. ஆதாரங்களையும் காட்டலாம் அவை நன்று. ஆனால் நீங்கள் பாவிக்கும் ஒரு சில சொற்பதங்கள் ஈழ தமிழர்களுக்கு ஏற்புடையது இல்லை என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரியும்.

உதாரணம்: பொய்யர், உளறுகிறார், முட்டாள், பயங்கரவாதி, உமக்கு தமிழ் தெரியுமா, பிதற்றுகிறீர், என்பது போன்ற பல இழிவான சொற்களை நீங்கள் பயன் படுத்தி இருக்கிறீர்கள். இதனால் எனக்கும் விக்கிக்கும் ஒரு நட்டம் ஏற்ப்பட்டது. என்னால் முடிந்தவரி விக்கிக்கு பயன்படலாம் என்ற நற்சிந்தையால் எனக்கு பழக்கமான மருத்துவர்கள் மூவர் பொறியியல் சாந்தவர்கள் ஐவர் என்று அழைத்து வந்தேன். அவர்களுக்கு என்னை விட தமிழ் அறிவு அதிகம். ஆனால் அவர்களுக்கு தமிழ் விக்கியின் நிலைப்பாட்டை எடுத்து உரைத்தேன். அவர்கள் முதலில் பேச்சு பக்கத்தையே பார்க்க ஆசைப்பட்டார்கள் ஆனால் அங்கே கண்ணியம் இன்மை, இழிவுபடுத்துதல், இழிவான சொற்பிரயோகம் கண்டு அவர்கள் விக்கியில் கட்டுரை எழுதி தங்களுக்கான மரியாதை, புகளை இழக்க விருப்பம் இல்லை என்று சொல்லி கைவிட்டனர். எதற்காக என்று நான் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் எனக்கு சுட்டி காட்டிய விக்கி பயனர் உங்களைத்தான். மற்ற அனைத்து பயனர்களும் கண்ணியம் மிக்கவர்கள் நடுநிலை கொண்டவர்கள் என்றும் சொன்னார்கள். குறிப்பாக ஒருசில பயனர்களின் நற்செயற்பாட்டை பார்த்து அவர்களே வியந்தார்கள் பெயர் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் இது அனைத்தும் உங்கள் குற்றம் இல்லை என்பது இப்போது எனக்கு தெரியும். உங்களை போன்றுதான் நானும் எனக்கு கோபம் வந்தால் அல்லது எரிச்சல் வந்தால் தப்பான வார்த்தைகளை கூறிவிடுவேன் ஆனால் அவை பாரிய பின்விளைவுகளை தந்திருக்கின்றன. விக்கியில் மட்டும் இல்லை வெளி இடங்களிலும் இது நடந்து இருக்கின்றன.

உங்களை வெளியேற்ற வேணும் என்பது என் விருப்பம் இல்லை. நீங்கள் ஒரு தமிழ் இசுலாமியர், அது மட்டும் இல்லை நீங்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை நான் அறிவேன். ஆனால் உங்கள் அளவுக்கு மற்றவர்களையும் எதிபாப்பது முடியாத காரியம். அதனால் உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: முடிந்தவரை புது பயனர்கள் விடும் தமிழ் எழுத்துப்பிழை, வாக்கியப்பிழை போன்ற பிழைகளை திருத்துங்கள், அதே வேளை சுட்டிகாட்டுங்கள். உதாரணம்: நான் ஒரு பேச்சுப்பக்கத்தில் மாதம் ஒன்றை பிழையாக எழுதி இருந்தேன் அதை நீங்கள் சுட்டி காட்டினீர்கள் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் பங்களிப்பு தொடரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். ஆனால் உங்கள் பேச்சில் வரும் ஒரு சில ஏற்க்க முடியாத சொற்களினால், உங்களின் பேச்சை கண்ணியம் உள்ளனவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தேன். நீங்கள் ஒரு உண்மையான இசுலாமியராக இருப்பதை இட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன், அதே போன்று உங்கள் பேச்சுக்களிலும் அதே புனிதமான கொள்கை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.


குறிப்பு: பயனர் சிவனே, மற்றும் ஒரு பயனர் பெயர் இசுலாமிய பெயாருடையது, அவைகளுக்கும் எனக்கும் நேரடி தொடர்போ இல்லை மறைமுக தொடர்போ இல்லை. அவர்கள் யார் என்று எனக்கு தெரியாவும் இல்லை. ஆனால் என்னை விட மூத்த விக்கி பயனர்களாக இருக்கலாம். அவர்கள் உங்களால் எதோ ஒரு முறையில் பாதிக்க பட்டு இருக்கிறார் என்பது எனக்கு புரிகிறது. சிவனே என்று வந்த விக்கி பயனருக்கு மேலும் பல பயனர் பக்கம் இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன், காரணம் அவர் விட்ட ஒரு சில பிழையினால் அவர் இந்தியாவில் இருக்கிறார் என்பதையும் நான் அறிய கூடியதாக இருந்தது. நன்றி . உங்கள் மேல் எனக்கு கோபம் இல்லை ஆனால் உங்கள் பேச்சில் கண்ணியம் தேவை என்பதை மட்டும் உறுதியாக கேட்டுகொள்கிறேன் நன்றி.--சிவம் 04:22, 28 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். சிவனே மற்றும் ஜவஹர் அலி என்ற பெயர்களில் இருப்பவர் தனியொருவரே. அவருக்கு வேறு பயனர் பெயர்களும் உள்ளன. அவர் எந்த நாட்டில் இருந்தாலும், தான் யாரென்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டார். உங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்பது எனக்கு ஏற்கனவே புரிந்ததுதான் இருந்தது. நான் பயன்படுத்திய அச்சொற்கள் பெரும்பாலும் அவருக்காகவே. நீங்கள் இடையில் வந்து புகுந்து அவருக்குப் பயன்படுத்திய பல சொற்களை உங்களுக்குப் பயன்படுத்தியதாக நினைத்துக்கொண்டதுதான் வேடிக்கை. சரியாக அவரது உரையாடல் இருந்த இடங்களிலெல்லாம் நீங்களும் வந்து விட்டீர்கள். அது வெறுமனே சந்தர்ப்ப வசம். முதலில், உங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்பது எனக்கு நன்கு விளங்கியே இருந்தது. பொய்யர், உளறுகிறார், முட்டாள், பயங்கரவாதி போன்ற சொற்களெல்லாம் அவருக்காகப் பயன்படுத்தப்பட்டவை. இடையில் நீங்கள் வந்து அதைப் பூசிக்கொண்டிருக்கக் கூடாது. மற்றப்படி, எனக்கு உங்களுடன் எந்த வகையான வெறுப்போ கோபமோ இல்லை.--பாஹிம் (பேச்சு) 05:12, 28

செப்டெம்பர் 2012 (UTC):👍 விருப்பம்----மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 29 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


வணக்கம். உண்மைதான் பாஹிம். நான் ஒரு சில விக்கி பக்கங்களை, எனது கவனிப்பு பட்டியலில் இட்டுள்ளேன் அதோடு ஒரு சில கலை சொற்கள் தேடித்திரிவேன் அப்போது இந்த மாதிரியான இடத்திலும் மாட்டுப்படுகிறேன், ஒரு மூத்த தமிழ் விக்கி பயனர் பேச்சுப்பக்கம் போகவேண்டாம் என்று அறிவுரை சொன்னார். ஆனால் ஒரு சில நேரம் அந்த பக்கம் ஈர்க்கிறது அதுதான் வேடிக்கை.--சிவம் 05:49, 28 செப்டெம்பர் 2012 (UTC)

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]


பகுப்பு[தொகு]

சிவம், பகுப்புப் பக்கங்களில் கட்டுரைகள் எழுதுவதில்லை. தனியே எஸ். மோசேசு என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அக்கட்டுரையின் அடியில் [[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] என்பதைச் சேர்த்தால் போதும்.--Kanags \உரையாடுக 11:26, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஓ, அதை நீங்கள் எழுதத் தொடங்கவில்லை போல் தெரிகிறது. அடையாளம் காட்டாத பயனர் தொடங்கியிருக்கிறார்.--Kanags \உரையாடுக 11:29, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆமாம் கனக்ஸ். நான் அதில் ஓரி சில திருத்தம் மட்டும் செய்தேன்.--சிவம் 11:31, 9 அக்டோபர் 2012 (UTC)

விக்கிப் பொதுவகம்:தமிழ் இசைக் கருவிகள் படக்கோப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Commons tools
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இந்த படம் நன்றாக உள்ளது. எனினும், தனித்தனியான படம் அவற்றின் பெயர்களுடன் இருத்தல் மேலும் பலர் தெளிவாக அறிய வாய்ப்பை நல்கும். ஒவ்வொன்றின் தமிழ் பெயரும்,ஆங்கிலப் பெயரும் நம் தமிழ் இசைக் கருவிகள் பற்றி உலகில் பிற மொழியினரும் அறிய வழிவகுக்கும். இப்பொழுதுள்ள படத்தில், விக்கி பொதுவகத்தில் இருக்கும் ஒவ்வொரு படத்தின் கீழும் உள்ள Add a Note என்ற ஆழியை அழுத்தி படக்குறிப்புகளை எழுதலாம். மேலும் அங்கு படத்தினை மொழிகளற்ற படமாக ஏற்படுத்துதலே சிறந்தது. அவற்றை என்றும் யாராலும் அழிக்கவோ, மாற்றவோ முடியாது. தடிமனான ஓரங்கள் (borders) அற்ற படமாக இருத்தல் வேண்டும் என்பதும் அங்குள்ள விதிகளுள் ஒன்று.அங்குள்ள படவார்ப்புருவில் வர்ணனைப் பகுதியில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். அதனை பதிவேற்றிய படங்களுக்கும், பதிவேற்றப்படும் படங்களுக்கும் பொதுவாக க் கொள்ளுங்கள். அங்கு கோப்பின் பெயரை தமிழில் வைக்கலாமென்றாலும், சில மேலாண்மைச் செயல்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பதே சிறந்தது.அங்குள்ள பலவித கருவிகளை, அங்குள்ள உங்கள் விருப்பத்தேர்வுகளிலும், Commons tools என்பதில் அறியலாம். உங்களது செயல்கள் மேலும் நிலைக்க இவைகள் அவசியம்.மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.-- உழவன் +உரை.. 14:22, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆமாம் உழவன் நன்றி. --சிவம் 22:23, 9 அக்டோபர் 2012 (UTC)

நீக்கல் குறித்த உரையாடல்[தொகு]

வணக்கம் சிவம், சிலவற்றை உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.

  1. நான் நிர்வாகியல்ல, ஆகவே, இல்லாத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தேன் என்று சொல்வதே தவறு!
  2. எதுவாயினும் என் பேச்சுப் பக்கத்தில் கூறுங்கள். பயனர் பக்கம் என்னுடையது. நான் மட்டுமே திருத்த வேண்டும்.
  3. அவர் கட்டுரை எழுதியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். அவர் பகுப்புப் பக்கத்தில் எழுதியிருந்தார். தேவையற்றவற்றை நீக்குவது சரிதானே!
  4. மேலும், அவராக எழுதியிருந்தால் கட்டுரைவெளிக்கு நகர்த்தியிருக்கலாம். அவர் எஸ்._மோசேஸ் என்ற கட்டுரையை காப்பியடித்துள்ளார். ஆகவே, நீக்கியிருந்தேன்.
  5. வேண்டுமென்றே யாரும் இதுபோல் செய்வதில்லை, யாருக்கும் அடுத்தவர் படைப்பை நீக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. ஆகவே, நீங்கள் தவறாகக் கருத வேண்டாம். என்னை சீறிப் பாய்ந்து திட்டவேண்டிய அவசியம் இல்லை. :)
  6. நான் தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது வேண்டுமென்றோ ஏதேனும் தவறு செய்வதாக அறிந்தால் நீங்கள் அதைத் திருத்தலாமே, அல்லது நிர்வாகிகளுக்கு சொல்லலாமே!

விரைவில் மறுமொழி இடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:42, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

அவர் தந்த நான்கில் இரண்டு கட்டுரையிலிருந்து நகல் எடுக்கப்பட்டது. மீதி இரண்டு தகவல்களையும் கட்டுரையில் சேர்த்துள்ளேன். நீங்கள் கூறாமல் விட்டிருந்தால் இந்த இரண்டு தகவல்கள் கிடைத்திருக்காது. :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:05, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ். இணைப்பை அல்லது அந்த பகுப்பை இப்போது நான் படித்து விட்டு ஒரு நிமிடம் ஆகும் முன்னே பேச்சுப் பக்கத்தில் அதன் தலைப்பை மாற்றுவது சரி என்று சொல்லி இருந்தேன். ஆனால் எதற்காக உடனடியாக நீக்கினீர்கள்?? காரணம் கொடுக்கப்படவில்லை!! பேச்சு பக்கத்திலும் அதற்கான மறுமொழி இடவில்லை!! இப்போது விக்கி செயல்பாட்டில் பலர் இருக்கிறார்கள் அவர்களிடம் ஆவது பேச்சுப் பக்கத்தில் கேள்வி கேக்கலாமே. எதற்காக அவசரம்?? அந்த கட்டுரையின் பெறுமதி என்ன என்பது நான் அறிவேன்!!! ஆனால் நீங்கள் அறிவீர்களா?? கண்டிப்பாக இல்லை!! அந்த கட்டுரையின் தலைப்பை மாற்றினால் போதுமானதே. இப்போது என்னாலும் அந்த கட்டுரையை தொடர முடியாமல் இருக்கின்றனவே. ஒன்றை மட்டும் நினைவு படுத்துங்கள்!!! நாங்கள் அனைவரும் விக்கி குடும்பம்!! அதனால் தன்னிச்சையாக செயல்படுவது புதுப் பயனர்களை அவமதிப்பதாகும்!!! இது நன்று அன்று!! நீங்கள் தவறு செய்யும் பொது நான் திருத்துவேன், ஆனால் நீக்கும் பொது நான் என்ன செய்ய முடியும்?? அந்த கட்டுரையை மீள் அமைக்கவும்!! நன்றி.--சிவம் 07:06, 11 அக்டோபர் 2012 (UTC)

நீங்கள் கூறியதை ஏற்கிறேன். நான் என்ன செய்தேன் என்பதை உங்களுக்குப் புரியவைக்க முடிய வில்லையே!! சரி, உங்கள் கூற்றுப்படியே விளக்குகிறேன்.

  1. பேச்சுப் பக்கத்தில் தலைப்பை மாற்றலாம் எனக் கூறியிருந்தீர்கள். சரி, ஆனால், எஸ். மோசேஸ் என்ற தலைப்பில் கட்டுரை உள்ளதே! அப்படி தலைப்பு உள்ளதா எனப் பார்த்திருக்கலாமே!
  2. உடனடியாக நீக்கியுள்ளேன்!! சிவம், தவறான பகுப்பில் தவறான உள்ளடக்கத்தைச் சேர்த்ததால் நீக்கினேன். நீக்கும் முன் மோசேஸ் கட்டுரையைப் பார்த்தேன், இவர் அங்கிருந்தே நகல் எடுத்துள்ளார். ஒரே தகவல் இரண்டு முறை தேவையா?
  3. காரணம் கேட்கிறீர்கள்!! எங்கேனும் என் விருப்பப்படி செயல்பட்டாலோ, அல்லது தகவலை மாற்றியமைத்தாலோ மட்டுமே காரணம் தேவை! எழுத்துப்பிழைக்கோ, தவறான உள்ளடக்கத்துக்கோ காரணம் தேவைப்படாது எனக் கருதுகிறேன்.
  4. அவசரப் பட்டுள்ளேன்! தவறான உள்ளடக்கத்தை நீக்குவதற்கு ஏன் தயங்க வேண்டும்?
  5. தன்னிச்சையாக செயல்படுகிறேன்!! விக்கியில் பிறருக்கு இடையூறின்றி பங்களிக்க சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
  6. பேச்சுப் பக்கத்தில் தெரிவித்திருக்கலாம்!! நான் அறியாததையோ, ஐயுறுவதையோ தான் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். எல்லாவற்றையும் (இங்கே எழுத்துப் பிழை, அங்கே உரை திருத்தம்) என சொல்லத் தேவையில்லை. யாரேனும் ஏதேனும் செய்வதில் தவறு இருக்கும் என்று தோன்றினால் கட்டுரையின் வரலாற்றில், திருத்தங்களை ஒப்பிட்டுப் பாருங்களேன்.

நீங்கள் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபடுவதைக் கண்டு மகிழ்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:25, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ். உங்கள் மேல் எனக்கு கோபம் இல்லை!! நான் அந்த கட்டுரையை வாசித்து முடித்து அதற்கான வேறு இணைப்பு இருக்கிறதா என்று தேட முன் அது அளிக்கபட்டது. அந்த இணைப்பு வேற இணைப்பில் இருகின்றனவா என்றும் என்னால் அறிய முடியவில்லை. அதனால் சற்று சங்கடம் பட்டேன். இதே போன்று நேற்று ஒரு புது கட்டுரை ஆரம்பிக்க பட்டது, அதில் நானும் , கலை அவர்களும் திருத்தம் செய்தோம், ஆனால் அந்த கட்டுரைக்கான வேறு ஒரு பக்கம் இருப்பதை நான் அறிந்து பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இதனால் பங்களிக்கும் பயனருக்கு கொஞ்சம் வேலை குறைவு. தமிழ் என்னுடைய அனுபவம், அவசரம் எப்போதுமே நல்லது அன்று! நீங்கள் ஒரு கட்டுரையை நீக்க விரும்பினால் அதற்கான காரணத்தை இட்டால் அது எமக்கு நின்மதியைத்தரும். உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள். நன்றி.--சிவம் 08:18, 11 அக்டோபர் 2012 (UTC)

சிவம், ஒரு கூடுதல் தகவல், எஸ். மோசேஸ் கட்டுரையை 09 அக்டோபர் அன்று தான் கனக்ஸ் உருவாக்கியிருக்கிறார்.(இரண்டு நாட்களுக்கு முன்!!). ஏற்கனவே, இதே போன்று ஒருவர் இதே பகுப்பில் சேர்த்த தகவலைக் கொண்டு கட்டுரையாக்கியுள்ளார்.!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:46, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விக்கியாக்கம்[தொகு]

சிவம் அளவுக்கதிகமாக ஓர் கட்டுரையில் விக்கி இணைப்புக்கள்(கட்டுரைகளில் நீல நிறத்தில் தோன்றும் சொற்கள்) இருப்பது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இராது, அளவுக்கதிகமாக சிவப்பு இணைப்புக்கள் இருப்பதும் அப்படியே எனவே அளவுக்கதிகமாக விக்கி இணைப்புக்களை கட்டுரையில் சேர்க்க வேண்டாம், நன்றி..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 06:53, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் சந்கீர்த்தன். நான் எதற்காக கட்துரை தொகுப்புக்களை நீலம் இட்டேன் என்று சொல்கிறேன். பல கட்டுரைகள் விக்கியில் இருகின்றன!!!! ஆனால் அவற்றை சரியாக கண்டு பிடிப்பது இயலாமல் உள்ளது. தமிழில் எழுதும் பொது சில பிழைகள் வருகின்றன.!! அதனால் கட்டுரை தலைப்பை சரியாக காண்பது கடினமாக உள்ளது. இதனால் நீலம் போட்டு காட்டுவதனால் கட்டுரை வாசிப்பவர்களுக்கு மேலும் உட்சாகம் வரும் அத்தோடு மேலும் கட்டுரைகளை வாசிப்பார்கள்.. அதே வேளை வாசகர்களுக்கும் சுலபமாகவும், நேரத்தை மிச்சம் பிடிக்கும் படி அப்படி செய்தேன். சிவப்பு: இடப்பட்டுறுக்கும் பக்கத்தில் ஒரு பயனர் தனது கட்டுரையை தொடர்வதுகான ஆர்வத்தை தூண்டும் அதுதான் விக்கி. நன்றி நான் நீலமோ அல்லது சிவப்போ இட்டுருக்கும் கட்டுரைகள் தேவை என்பதை விக்கி கூறுகிறது! நன்றி.--சிவம் 07:21, 11 அக்டோபர் 2012 (UTC)

உதாரணம்: நீங்கள் வாருங்கள். உதாரணம்: எங்களிடம் வாருங்கள். உதாரணம்: நம்மிடம் வாருங்கள். இவை மூன்றும் ஒன்றே!!

இப்படியான பிரச்சனை இருப்பதனால் நேரடியாக நீலம் சுட்டி காடுவதன் மூலம் இப் பிரச்சனை இருக்காது!! இப்படி யார்தான் சிந்திப்பார்கள்?? இதற்கான நேரம் எவ்வளவு?? சிவப்பு அடையாளம் இட்டு இருக்கும் பொழுது. அதை பற்றிய ஆர்வமோ அறிவோ உள்ளவர் அந்த கட்டுரையை ஆரம்பிப்பார். உண்மையை சொல்ல போனால் அப்படித்தான் எனது கட்டுரையும் ஆரம்பமானது, இதுதான் மனிதனின் இயல்பு.--சிவம் 07:29, 11 அக்டோபர் 2012 (UTC)

ஒரு கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு ஒரு விக்கி உள்ளிணைப்பு (நீலம்) கொடுத்தால் போதும். அது போலவே சிவப்பு இணைப்பும்.--Kanags \உரையாடுக 07:41, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
சிவம் நீங்கள் கூறுவது சரி, ஒரு கட்டுரையில் மூன்று, நான்கு சிவப்பு இணைப்புக்கள் இருக்கலாம், அது அக்கட்டுரைகளை உருவாக்க தூண்டும், ஆனால் 20,30 சிவப்பு இணைப்புக்கள் இருப்பது நல்லதல்ல...அது ஒரு வகையில் சலிப்பையே ஏற்படுத்தும், இதைத்தான் முன்னேர்கள் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்றார்கள், நீல இணைப்புக்களும் அப்படித்தான் அவையும் குறித்த அளவிலேயே இருத்தல் வேண்டும் கட்டுரை முழுதும் நீல இணைப்பிருத்தல் அவ்வளவு நல்லதல்ல புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன், நன்றி, நட்புடன்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:47, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கனக்ஸ், தமிழ், மற்றும் சங். நீங்கள் கூறுவது உண்மைதான். அப்படியான பிழைகளை நான் விட்டுள்ளேன் அது உண்மை! எதிர்வரும் காலங்களில் அப்படியான பிழைகள் வராமல் தடுக்கின்றேன். என்னை புரிந்து கொண்டமைக்கு நன்றி. ஆனால் புது கட்டுரைகள் வரும் பொது பொறுமையாக நீக்குங்கள் தயவாக. அவசரம் வேண்டாம். நட்புடன்--சிவம் 08:03, 11 அக்டோபர் 2012 (UTC)

தனிப்பட்ட உதவி[தொகு]

யேர்மனிலிருந்து சான்சன் ஞானாபரணம் என்ற குறுங்கட்டுரையை உருவாக்கியுள்ளேன். தங்களின் மேம்பட்ட அறிவால், இக்கட்டுரையில் தகவல்களைச் சேர்த்து விரிவாக்கி உதவுங்கள்! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:48, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஐயோ தமிழ் எனக்கு அனுபவம் உள்ள கட்டுரையில் நான் பங்களிப்பேன். அனுபவம் இல்லாத கட்டுரையில், அல்லது அறிவில்லாத கட்டுரையில் என்னால் பங்களிக்க இயலாமல் உள்ளது. உதாரணம்: பொறியியல் சார் கட்டுரை தமிழில் எழுதவேண்டும் என்பதுதான் எனது ஆசை ஆனால் அதற்கான தமிழ் கலை சொற்கள் என்னிடம் இல்லாததால் நானே திண்டாடுகிறேன். பேருக்குத்தான் Dr.En. சிவம் யேர்மனியில். ஆனால் என் நிலைமை தமிழில் இப்படி இருக்கின்றன.--சிவம் 09:00, 11 அக்டோபர் 2012 (UTC)

சமாதானம்[தொகு]

வணக்கம் சிவா.சந்திரபாலன். நீங்கள் தந்திருக்கும் இணைப்பில் இருக்கும் கட்டுரை போல் பல இணைய தளங்களில் இருகின்றன!! அது வேற விசாயம், நீங்கள் புங்குடுதீவு தானே?? அப்படி என்றால் உங்கள் ஊர் விக்கியில் பிரபலியம் ஆனது என்று மகிழ்ச்சி அடையுங்கள். பெருமைப் படுங்கள். புங்குடு தீவு என்பது ஒன்றுதான். அதன் கட்டுரையை எப்படித்தான் மாத்தி மாத்தி எழுதினாலும் பொருள் ஒன்றுதான். blogspot போன்றவற்றில் இருக்கும் பல கட்டுரைகள் உள்ளன அவற்றில் சில விக்கியில் இருந்து திருடப்பட்டன!!! அதனால், எனக்கு இப்போ ஒரு சந்தேகம் வந்துள்ளது. நீங்கள் சொல்வது உண்மை என்றால், புங்குடுதீவின் அனைத்து வட்டாரங்களையும் அதாவது வட்டாரம் ஒன்று, வட்டாரம், இரண்டு வட்டாரம் மூன்று, போன்று மேல்பட்ட வட்டாரங்களின் தனித் தன்மையை இதே கட்டுரையில் வரையுங்கள். நன்றி.--சிவம் 20:56, 13 அக்டோபர் 2012 (UTC)


வணக்கம். மேலே. நீங்கள் விக்கியின் காப்புரிமைக் கொள்கைகளை புரிந்துகொள்ளவில்லை. புதிய பயனர்களுக்கு மேலும் குளப்பங்களை தரக்கூடியவாறும், புண்படக்கூடியவாறும் கருத்துக் கூறி உள்ளீர்கள். தயந்து இவ்வாறான போக்கில் கருத்துக் கூறுவதைத் தவிர்க்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:10, 13 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]


மேலதிக தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:பதிப்புரிமை --Natkeeran (பேச்சு) 21:16, 13 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் நக்கீரன். நான் அந்த பயனரை புண்படுத்தும் வகையில் நடக்கவில்லை!! விக்கியின் பதிப்புரிமை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் சில சிக்கல்கள் இங்கேயும் இருக்கின்றன. அவரை மேலதிகமான கட்டுரையை எழுதச் சொன்னேன். காரணம்: புகுடுதீவு என்பது இலங்கையின் ஒரு தீவு ஆனால் அவர்களின் வளர்ச்சி இலங்கையின் முதலாம் இடம்! அந்த கட்டுரை வளர்வதை இட்டு நான் மகிழ்கின்றேன், அதில் தடங்கள் வர கூடாது என்று எண்ணுகிறேன். நானும் அந்த கட்டுரையில் பங்களிக்க நினைத்திருந்தேன் காரணம், தமிழர்கள் என்ற சொல்லை இப்படி ஒரு இனம் இருக்கிறது என்று உலகறிய செய்தவர்களில் புன்குடுதீவாருக்கு மிகப்பெரிய பங்குண்டு. நன்றி. --சிவம் 21:37, 13 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம் நண்பர் சிவம் கூறிய கருத்துகளுக்கு எனது பதிலை முதலில் தருகிறேன் .நான் ஈழத்தில் இருந்த போதே ஊடகத் துறையில் புகுந்து தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து சுமார் 30 வருடங்களாகியும் அதே துறையில் ஈடுபட்டு வருகிறேன். ஐரோப்பாவில் தமிழன்,ஈழநாடு,ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும் ஐ பீ சீ தமிழ்,ரீ ஆர் ரீ தமிழ் ஒலி ,தமிழ் அலை ஆகிய வானொலிகளிலும் ரீ ஆர் ரீ ரீ ரீ என் போன்ற தொலைக்காட்சிகளிலும் பல்வேறு பொறுப்புக்கள் மற்றும் துறைகள் சார பனி புரிந்துளேன்.அந்த சமயங்களில் எனது பிறந்த ஊரான புங்குட்தீவுக்கு அது சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிறைய ஆக்கங்களை எழுதியோ வெளியிட்டோ ஒளி/ஒலி பரப்பியோ வந்துள்ளேன் .இவை இலமே எனது சொந்த ஆக்கங்கள்.தவிர சுவிசில் எமது ஊருக்கான அமைப்பக புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் என்னும் அமைப்பினையும் உருவாக்கி நடத்தி வருகின்றோம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மின்னியல் கணணி வலை நுட்ப வேகத்துக்கு ஈடுகொட்டுக்குமுகமாக இணைய துறையில் என்னை ஈடுபடுத்தி அங்கும் கூடுதலாக எனது ஊருக்கான பெருமை சேர்க்கும் தளங்களையே தயாரித்து வருகின்றேன் ,அத்தோடு ஏராளமான நிழல்படங்களை கூட தேடி உள்வாங்கி சேமிப்பாக்கி வெளியிட்டுள்ளேன். freewebs .blogspot போன்ற இலவச தளங்கள் உட்பட சுமார் 120 தளங்களை புங்குடுதீவு மண்ணுக்காக நடத்தி வருகிறேன்.இவை எல்லாமே புங்குட்தீவின் கிராமங்கள் பாடசாலைகள் கொவிலகள் சமூக சேவை அமைப்புக்கள்.பெரியோர்கள், என பல்வேறு வகையல் உள்ளடங்குகின்றன .இந்த தளங்களில் என்னால் எழுதபட்டுள்ள கட்டுரைகளே முற்றிலுமாக இடம் பிடித்துள்ளன..விகிபெடியவுக்கும் நன் எழுதுகின்ற கட்டுரைகளை blogspot தமிழ் எழுதிய பின்னரே பிரதி பண்ணி இணைக்கின்றேன் .அ ந்த முறையில் நான் தமிழ் எழுத இலகுவாக பயின்று விட்டதனால் இந்த வழியை கையாள்கிறேன் இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் அந்த இணையங்கள் எல்லாவற்றிலுமே என்னால் எழுதபட்டுள்ள கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன. எமது ஊ ருக்கான 6அமைப்புக்கள வெளிநாடுகளில் இயங்குகின்றன.அவை எல்லாமே சகோதர இயக்கங்களாக செயபடுவதனால் அவை கூட எனது ஆக்கங்களை பயன்படுத்துகின்றன. அண்மையில் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட புங்குடுதீவு மான்மியம் என்ற 700 பக்கங்கள் கொண்ட ஆவண நூலின் ஆசிரியர் குழுவிலும் நான் இடம்பெற்று பணி ஆற்றினேன்.ஆகவே புங்குடுதீவு சம்பந்தமான பல இணையங்களில் எனது ஆக்கங்கள இடம்பிடித்துள்ளன.அதற்கான காரணங்களை மேலே விரிவாக்கி உள்ளேன்.இருந்தும் www .pungudutivu .info ,www .pungudutivu .org .www punguduthivuuk போன்ற ஓரிரு இணையங்கள் எனது ஆக்கங்களை பிரதி பண்ணி வெளியிட்டுள்ளன.அவை சில கட்டுரைகளில் எனது பெயரை வெளியிடவில்லை.இந்த உரிமை மீறலை செய்துள்ளமையால் உங்களுக்கு அது வேறு யாரோ எழுதியதாக படலாம்.அவை எனது நண்பர்கள் அல்லது சகோதர அமைப்புக்களின் உடையவை என்பதால் நான் பெரிது படுத்தவில்லை. நீங்கள் கேட்டபடி வட்டாரங்கள் பற்றி எழுத சொல்லி கேட்டமைக்கு பதில்.நீங்கள் கேடிருப்பது உங்களால் முடியுமா எழுதி நிரூபியுங்கள் என்பது போல படுகிறது.அப்போ இந்த கட் டுரைகள் நன் எழுத்து போல தொக்கு நிற்கிறது.ஐயா வட்டாரங்கள் ஒவ்வொரு கிராமங்களையே உள்ளடக்கி நிற்கின்றன.அந்த வகையில் கூட நான் மடத்துவெளி ஊரதீவு பெருங்காடு என்று தனித்தனியே எழுதி உள்ளேன் .மேலும் உங்கள் வசனங்களின் பொருள் கூட சற்று புரிய வண்ணம் அதாவது பொருள் வெளிப்பாடு சிறப்பில்லாமல் தெரிகிறது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நான் பல்வேறுதுறைகளில் ஈடுபடுவதனால் நேரம் போதவில்லை.காலக்கிரமத்தில் எழுதிக் குவிப்பேன் அப்போது புரியும்.உங்களுக்கு . நக்கீரனுக்கு நன்றிகள் சிவ-சந்திரபாலன்

நன்றி உங்கள் கருத்துக்கு... திரு. சிவா. சந்திரபாலன். நீங்கள் உங்கள் கருத்தை முன் வைத்த பின் கையொப்பம் இடுங்கள் தயவாக... மேலே பாருங்கள் ஒரு எழுத்தாணி இருக்கின்றன, அதனை உங்கள் கருத்து தெரிவித்த பின் இறுதியில் அந்த பொத்தானை அழுத்துங்கள் அதுதான் உங்கள் கையொப்பம்.. நன்றி.--சிவம் 05:09, 26 பெப்ரவரி 2013 (UTC)

தனிப்பட்ட தாக்குதல்கள்[தொகு]

வணக்கம் சிவம். விக்கியை நீங்கள் வலைப்பதிவு போன்று பார்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றிகிறது. கட்டுரையின் உள்ளடக்கத்தை பற்றி மட்டும் உரையாடுவது பண்பு. தனிப்பட்ட விடயங்களை விக்கிக்கு வெளியே உரையாடிக் கொள்ளவும். பயனர்களை கட்டுரை எழுத நிர்ப்பந்திப்பது போன்றோ, அல்லது தனிப்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைக்கும் படியோ கேக்க முடியாது. "இல்லை எனில் பிரச்சனை வரும்" என்ற கூற்றின் பண்பை நீங்களே எண்ணிக் கொள்ளவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 00:26, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சிய நடை[தொகு]

சிவம், உங்கள் கட்டுரைகளில் பல எழுத்துப்பிழைகள் வருகின்றன. அவற்றை இரண்டாம் தடவை நீங்களே படிக்கும் போது விளங்கிக் கொள்ளலாம். தமிழ் தெரியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்:) மேலும், கலைக்களஞ்சிய நடையில் கட்டுரைகள் எழுத வேண்டும். மின்தடை கட்டுரை அந்த நடையே காணப்படவில்லை. இன்னும் ஒன்று: உங்கள் பேச்சுப் பக்கத்தை தயவு கூர்ந்து அழித்து விட வேண்டாம். நன்றி.--Kanags \உரையாடுக 22:07, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]


சரி--சிவம் 22:17, 19 அக்டோபர் 2012 (UTC)

வாழ்த்துக்கள் சிவம்[தொகு]

உங்கள் நேர்மையை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழன் என்றால் இப்படித்தான் வாழவேண்டும். அடிமை தமிழனின் துரோகி !!என்பதை நீங்கள் உணர்த்தி உள்ளீர்கள். சிவம் உங்களில் மின்னியல் கட்டுரைகள் எப்போது வரைவீர்கள் என்று காத்து இருக்கிறேன்.

எல்லாம் நால்லாதான் இருக்கு ஆனால் நீங்கள் யார் என்றுதான் எனக்குத்தெரியலை. தயவாக மீண்டும் எனது பேச்சு பக்கத்தில் பேசும் பொழுது உங்கள் பெயரை இணைக்கவும்! நன்றி.--சிவம் 11:14, 3 நவம்பர் 2012 (UTC)

நன்றி[தொகு]

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:18, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:34, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

உங்கள் பங்களிப்பைப் பார்த்து நான் மிகவும் பெருமைப் பட்டேன், அதேவேளை என்னால் உங்கள் அந்தளவுக்கு முடியவில்லை. நீங்கள் நிர்வாகி ஆக்கியதை இட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள். இது உங்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி.--சிவம் 01:38, 15 சனவரி 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:04, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivam29&oldid=3184876" இலிருந்து மீள்விக்கப்பட்டது