பயனர் பேச்சு:Mayooranathan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொகுப்பு

தொகுப்புகள்


1-2-3-4

பொருளடக்கம்

[தொகு] வருக

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீங்கள் மீண்டும் பங்களிக்கத் தொடங்கியிருப்பது தெம்பூட்டுகிறது. வருக வருக ! :) --இரவி 20:51, 16 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி இரவி. இப்பொழுது வேலைக்காக நீண்ட தூரப் பயணம் செய்யவேண்டி இருப்பதால், வார நாட்களில் ஏறத்தாழ அரை மணி நேரம் வரை தான் ஓய்வு நேரம் கிட்டுகிறது. தேங்கிக் கிடக்கும் சொந்த வேலைகளை வார இறுதி நாட்களில் செய்யவேண்டி இருப்பதால் அந்த நாட்களிலும் நேரம் அதிகம் கிடைப்பதில்லை. சென்ற இரண்டு வாரங்கள் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்குச் சென்றிருந்தேன். எவ்வளவுதான் நேரப் பிரச்சினை இருந்தாலும் சிறிது நேரம் தமிழ் விக்கிக்கு வந்து அண்மைய மாற்றங்கள், ஆலமரத்தடி பகுதிகளையாவது பார்க்காமல் இருப்பதில்லை. நிலைமை சற்றுச் சீராகும்போது மீண்டும் பழைய வேகத்துடன் பங்களிப்பேன். --- மயூரநாதன் 06:08, 17 பெப்ரவரி 2012 (UTC)
மீண்டும் வந்தமைக்கு நன்றி. நேரம் கிடைக்காதபோதும் நீங்கள் பங்களித்து வருவது மற்றவர்களுக்கு உற்சாகம் தருகிறது. --மணியன் 10:53, 17 பெப்ரவரி 2012 (UTC)

ஆம், பணியிடத்துக்குப் போய் வருவதற்கான நேரம் குறித்து முன்பே சொல்லி இருந்தீர்கள். உங்களுக்கு வீட்டுக்கு அருகில் வேலையோ வேலையிடத்துக்கு அருகில் வீடோ அமைய எல்லாம் வல்ல விக்கியாண்டவரை வேண்டுகிறேன் :)--இரவி 11:04, 17 பெப்ரவரி 2012 (UTC)

மயூரநாதன் உங்கள் பங்களிப்புகளை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி! ஊக்கம் ஊட்டுவதாயும் உள்ளது! லூயிசு மம்ஃபோர்டு, மோபிடிக்கு எழுதிய மெல்வில் இவர்களின் கட்டுரைகளை நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். முன்னர், வெகுகாலத்துக்கு முன்பு, மோபிடிக்கைப் படித்திருக்கின்றேன். தற்செயலாய் அதற்கு சற்று முன்பு பி. எல். சாமி எழுதிய நூலில் ("விலங்கின விளக்கம்") சங்க காலத் தமிழர்கள் இரவுநேரங்களில் செய்த திமிங்கில வேட்டையைப் பற்றியும், அவர்கள் பயன்படுத்திய எறியுளி (மோபிடிக்கில் வரும் "harpoon") (எ.கா பரதவர், "எறியுளி பொருத வேமுறு பெருமீன்" என்று அகநானூற்றில் வரும் வரிகள் போன்றவற்றை)ப் பற்றியும் படித்து வியந்திருக்கின்றேன். உங்கள் கடும் வேலைகளுக்கு இடையேயும் நீங்கள் வந்து பங்களிப்பது உண்மையிலேயே ஊக்கம் அளிக்கின்றது!--செல்வா 15:08, 17 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] Username rename request: White Cat -> とある白い猫

I'd like to request a username rename per SUL. -- Cat chi? 12:21, 19 பெப்ரவரி 2012 (UTC)

Yes check.svgY ஆச்சு -- சுந்தர் \பேச்சு 14:17, 19 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] நன்றி

மயூரநாதன், உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். இன்னும் பொறுப்புணர்வுடனும் முனைப்புடனும் பங்களிக்கத் தூண்டுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:16, 14 மார்ச் 2012 (UTC)

[தொகு] முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

[தொகு] விக்கிமேனியா 2012

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மயூரநாதன். --செல்வா (பேச்சு) 19:56, 19 மார்ச் 2012 (UTC)

[தொகு] பரிந்துரை தேவை

மயூரநாதன்,

பரிந்துரைகள் தேவை: முதற்பக்கக் கட்டுரைகள், சிறப்புப் படங்கள், உங்களுக்குத் தெரியுமா துணுக்குகள், இந்த வாரக் கூட்டு முயற்சிகள்.

நன்றி--இரவி (பேச்சு) 11:18, 25 மார்ச் 2012 (UTC)

[தொகு] நச்சுநிரல்

உங்கள் மின்னஞ்சல் அல்லது/உடன் கணினியில் நச்சுநிரல் வந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். அத்தகைய ஒரு மின்னஞ்சல் உங்கள் முகவரியில் இருந்து வந்தது. நன்றி. --Natkeeran (பேச்சு) 01:49, 27 மார்ச் 2012 (UTC)

நன்றி நற்கீரன். பார்க்கிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 17:48, 28 மார்ச் 2012 (UTC)

வணக்கம், நான் circular sector - வட்டக்கோணப்பகுதி என தமிழாக்கம் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். உங்களது ஆரைத்துண்டு மாதிரி -கட்டுரையில் நீங்கள் ஆரைத்துண்டு என்று குறிப்பது circular sector -ஐத்தான் என்பதை உறுதி செய்தீர்கள் என்றால் வட்டக்கோணப்பகுதி கட்டுரைக்கு ஆரைத்துண்டு என வழிமாற்றம் கொடுக்க உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp (பேச்சு) 14:37, 30 மார்ச் 2012 (UTC)


"circular sector" என்பதைத்தான் ஆரைத்துண்டு என்று குறித்திருக்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:49, 30 மார்ச் 2012 (UTC)

தங்கள் விளக்கத்துக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 15:00, 30 மார்ச் 2012 (UTC)

[தொகு] WP:BOTREQ

வணக்கம், மயூரநாதன் WP:BOTREQ பார்க்கவும்.. நன்றி--shanmugam (பேச்சு) 18:14, 8 ஏப்ரல் 2012 (UTC)

[தொகு] நன்றி

நன்றி.jpg
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:12, 26 மே 2012 (UTC) Google plus one.jpg மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:46, 26 மே 2012 (UTC) Google plus one.jpg ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:09, 30 மே 2012 (UTC)

[தொகு] ஒரு வேண்டுகோள்

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:49, 29 மே 2012 (UTC)

[தொகு] உலகப் பரவல் தொற்று

நீங்கள் ஆரம்பித்த உலகப் பரவல் தொற்று என்ற கட்டுரையைக் கவனிக்காமல் நானும் உலகம்பரவுநோய் என்ற கட்டுரையை ஆரம்பித்துவிட்டேன். இரு கட்டுரைகளையும் இணைப்பதற்காய், தங்கள் கட்டுரையில் இருந்த தகவல்களையும் இந்தக் கட்டுரையில் இணைத்துவிட்டேன். எந்தத் தலைப்பை தெரிவு செய்யலாம் என்று சொன்னீர்கள் என்றால், அந்த தலைப்புக்கு நகர்த்தி, கட்டுரைகளை இணைத்து விடுகின்றேன். --கலை (பேச்சு) 20:34, 31 மே 2012 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mayooranathan&oldid=1124780" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி