மராத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மராட்டி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவில் மராத்தி அதிகம் பேசுவோர்.
உலகில் மராத்தியர் உள்ள இடங்கள்

மராத்தி (அ) மராத்தியம் (அ) மராத்திய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும்.[1][2] உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.[3] [4].உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15வதாக உள்ளது.[5] இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும்.[6] இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராத்தி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது[7].

மராத்திய எழுத்து முறைமைகள்[தொகு]

மராத்திய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோத்தி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோத்தி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோத்தி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராத்தியப் பேரரசர்கள், இம்மோத்தி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோத்தி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது. [8] தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர்.

உயிர் எழுத்துக்கள்[தொகு]

கீழ்கண்ட அட்டவணை, மராத்திய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது.

தேவநாகரி अं अः
ஒலிப்பெயர்ப்புகள் a āa i ī u ū e ai o au aṃ aḥ
அபஅ /ə/ /a/ /i/ /u/ /ru/ /e/ /əi/ /o/ /əu/ /əⁿ/ /əh/
ஒலிப்பு

மெய்யெழுத்துக்கள்[தொகு]

ka
/kə/
kha
/kʰə/
ga
/ɡə/
gha
/ɡʱə/
ṅa
/ŋə/
ca
/tʃə/ or /tsə/
cha
/tsʰə/
ja
/ɟʝə/ or /zə/
jha
/ɟʝʱə/ or /zʱə/
ña
/ɲə/
ṭa
/ʈə/
ṭha
/ʈʰə/
ḍa
/ɖə/
ḍha
/ɖʱə/
ṇa
/ɳə/
ta
/t̪ə/
tha
/t̪ʰə/
da
/d̪ə/
dha
/d̪ʱə/
na
/n̪ə/
pa
/pə/
pha
/pʰə/ or /fə/
ba
/bə/
bha
/bʱə/
ma
/mə/
ya
/jə/
ra
/rə/
ṟa
/ɽə/
la
/lə/
va
/və/ or /wə/
śa
/ʃə/
क्ष ज्ञ
ṣa
/ʂə/
sa
/sə/
ha
/hə/
ḷa
/ɭə/
kṣa
/kʃə/
jña
/ɟʝɲə/

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maharashtra Tourism: Trivia", Official website of Maharashtra Tourism (Government of Maharashtra), http://www.maharashtratourism.gov.in/MTDC/HTML/MaharashtraTourism/Trivia.html, பார்த்த நாள்: 2007-07-16 
  2. Palkar, A.B (2007) (PDF), Report of One Man Commission Justice A.B.Palkar: Shri Bhaurao Dagadu Paralkar & Others V/s State of Maharashtra, I, pp. 41, http://www.maharashtra.gov.in/pdf/VOLUME-I.pdf, பார்த்த நாள்: 2007-07-16 
  3. http://www.lmp.ucla.edu/Profile.aspx?LangID=93&menu=005
  4. Abstract of Language Strength in India: 2001 Census
  5. "Languages Spoken by More Than 10 Million People". மூல முகவரியிலிருந்து 2009-10-31 அன்று பரணிடப்பட்டது.
  6. Abstract of Language Strength in India: 2001 Census
  7. http://controversialhistory.blogspot.com/2007/08/origin-of-marathi.html
  8. Modi lipi
"http://ta.wikipedia.org/w/index.php?title=மராத்தி&oldid=1386518" இருந்து மீள்விக்கப்பட்டது