அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி | ||
|---|---|---|
| வகை | Partially featural alphabet | |
| மொழிகள் | Used for phonetic and phonemic transcription of any language | |
| காலக்கட்டம் | 1888 to the present | |
| மூல முறைகள் | Romic alphabet → Phonotypic alphabet → அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி |
|
| Note: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம் | ||
அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உலகில் பேசப்படும் மொழிகளின் பலுக்கல்களை (ஒலிப்புகளை) ஒரு சீர் முறையின் கீழ் எழுதுவதற்காக இலத்தீன் அரிச்சுவடியை மையமாகக் கொண்டு அனைத்துலக பலுக்கல் குழுமத்தால் ஆக்கப்பட்ட முறைமை ஆகும்.[1] அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி மொழியிலாளர்கள், மாணவர்கள், பாடகர்கள் நடிகர்கள் அகரமுதலி ஆக்கர்கள் போன்றோரால் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பின் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்கள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[1] பேசும் போது இருக்கவேண்டிய பற்களின் நிலை, நாவின் நிலை போன்றவற்றைக் குறிக்க அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி நீட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.[2]
2007 ஆண்டின் படி 107 எழுத்துக்களும் 56 குறியீடுகளும் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியில் காணப்படுகின்றன. எழுத்துக்களின் இணைப்போ அல்லது நீக்கமோ அனைத்துலக பலுக்கல் குழுமத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 International Phonetic Association (IPA), Handbook.
- ↑ 2.0 2.1 MacMahon, Michael K. C. (1996). “Phonetic Notation”, P. T. Daniels and W. Bright (eds.) The World's Writing Systems. New York: Oxford University Press. ISBN 0-19-507993-0, 821–846.
- ↑ Wall, Joan (1989). International Phonetic Alphabet for Singers: A Manual for English and Foreign Language Diction. Pst.

