பழஞ்சூர்

ஆள்கூறுகள்: 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழஞ்சூர்
—  கிராமம்  —
பழஞ்சூர்
இருப்பிடம்: பழஞ்சூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பழஞ்சூர் என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஊர். பட்டுக்கோட்டையின் கிழக்கு பகுதியில் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதிராம்பட்டினம் கடற்கரை 5 கி.மீ தொலைவில் உள்ளது. 3 பள்ளிகூடங்கள் உள்ளன. அதில் 2 தொடக்க பள்ளிகள், 1 நடுநிலை பள்ளி ஆகும். முக்கிய தொழில் விவசாயம். காவிரி ஆற்றீன் கடைமடை பாசன பகுதி ஆகும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி படி, 954 ஆண்கள் மற்றும் 1064 பெண்கள் 2018 மொத்தம் மக்கள். பாலின விகிதம் 1115 ஆகும். எழுத்தறிவு விகிதம் 72,74 இருந்தது.

வைகாசித் திருவிழா[தொகு]

பழஞ்சூரின் மையப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன், செல்வவினாயகர் ஆலயங்களின் திருவிழா இவ்வூர் வாசிகளால் வைகாசித் திருவிழா என்று அழைக்கப்படுகிரது. 9 நாட்கள் நடைபெரும் இதுவே இவ்வூரின் பெரிய விழா ஆகும். 6 கரை காரர்களால் 6 மண்டகபடிகளும், 1 மண்டகபடியும், காவடி திருவிழாவும் நடைபெறும்.

விவசாயம்[தொகு]

இப்பகுதியின் விவசாயத்தில் நெல்லுக்கே முதலிடம். புதுகுளம், முக்குளம், ஐயன் குளம், பது ஆறு இவைகளே பாசனத்தின் ஊற்றாகும். தென்னையும் இங்கு பயிரிடப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழஞ்சூர்&oldid=1744718" இலிருந்து மீள்விக்கப்பட்டது