நாட்காட்டி
நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும். 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதே 'காலண்டர்' என்ற ஆங்கிலச் சொல் ஆகும். 'கலண்டே' என்றால் 'கணக்கினைக் கூட்டுவது' என்று பொருள்.
பொருளடக்கம் |
நாட்காட்டி காட்டும் செய்திகள் [தொகு]
நாட்காட்டி, நாட்களைச் சேர்த்துக் கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் எனவாக்கி அவற்றுக்கு பெயர்களும் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்படும் பெயர் தேதி அல்லது "திகதி" எனப்படுகிறது. நாள், மாதம், ஆண்டு முதலிய காலப் பகுப்புக்கள், பொதுவாகச் சூரியன், சந்திரன் முதலியவற்றின் இயக்கங்கள் போன்ற வானியல் தோற்றப்பாடுகளுக்கு இயைபாக இச்செய்திகள் அமைந்துள்ளன எனினும் அவை துல்லியமாகப் பொருந்திவர வேண்டியது இல்லை. இவற்றுட் பல பிற நாட்காட்டிகளை மாதிரியாகக் கொண்டு தமக்குப் பொருத்தமாக அமையும்படி உருவாக்கப்பட்டவை.
வரலாறு [தொகு]
பண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கென நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். தொடக்க காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கினார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டார்கள்.இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை கிரெகொரியின் நாட்காட்டி எனப்படுகிறது.. நாட்காட்டி என்பது ஒரு நாளின் தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது. பொதுவான வழக்கில், நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே. பொதுவான நாட்காட்டிகள் காகித்ததால் செய்யப்பட்டவை. தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன.
நாட்காட்டிகளின் வகைகள் [தொகு]
நாட்காட்டிகள் மொழி, சமயம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நாட்காட்டிகள் தினசரி, மாதம் போன்ற கால அமைப்பின் அடிப்படையிலும் தனித்தனி வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.