குயுலெக்சு மோடெசுடசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயுலெக்சு மோடெசுடசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
டிப்டிரா
குடும்பம்:
குலுசிடே
பேரினம்:
குயுலெக்சு
துணைப்பேரினம்:
பேரோடியசு
இனம்:
கு. மோடெசுடசு
இருசொற் பெயரீடு
குயுலெக்சு மோடெசுடசு
பைகால்பி, 1889.[1]

குயுலெக்சு மோடெசுடசு (பொதுவான பெயர் இல்லை) என்பது குலிசிடே குடும்பத்தின் இரத்தத்தை உறிஞ்சும் கொசு சிற்றினங்களில் ஒன்றாகும். இது பரிசோதனை முறையில் மேற்கு நைல் தீநுண்மி நோய் கடத்தியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.[2] பறவைகள் மற்றும் மனிதர்களிடம் தீவிரமாக இரத்தம் உறிஞ்சும் தன்மையுடையதால் விலங்கு வழி தொற்றுகளைப் பரப்புகிறது. இது தெற்கு பிரான்சில் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மேற்கு நைல் தீநுண்மி நோய்ப் பரவலின் பாலமாக உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இது தன்யூபு ஆற்றின் டெல்டா, காசுப்பியன் மற்றும் அசோவ் கடல் டெல்டா மற்றும் உருசியாவின் வோல்கா ஆற்றுப்பகுதியில் மேற்கு நைல் தீநுண்மி பரிமாற்றத்தில் பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.[3] இது முறையே பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவில் தஹினா தீநுண்மி மற்றும் லெட்னிஸ் தீநுண்மி பரவுதலிலும் தொடர்புடையது.[3]

பரவல்[தொகு]

குயுலெக்சு மோடெசுடசு பின்வரும் நாடுகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது: அல்சீரியா, சீனா, குரோசியா, செக் குடியரசு, டென்மார்க், கிரேக்கம், அங்கேரி, ஈரான், ஈராக், இசுரேல், இத்தாலி, மங்கோலியா, மொரோக்கோ, போலந்து, உருமேனியா, உருசியா, சிலோவாக்கியா, எசுப்பானியா, சுவீடன்,[4] தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் ஐக்கிய இராச்சியம்.[5] இது சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இளம் உயிரி ஆய்வில் தென்கிழக்கு இங்கிலாந்தின் ஒரு சிறிய பகுதியில் அடையாளம் காணப்பட்டது.[3][6]

சூழலியல்[தொகு]

குயுலெக்சு மோடெசுடசு இளம் உயிரிகள் நீர்ப்பாசன கால்வாய்கள், சதுப்பு மற்றும் நெல் வயல்களில் சற்று உப்புநீர் அல்லது நன்னீரில் காணப்படும்.[7] முதிர்ச்சியடைந்த பெண் கொசுக்கள் முதுகெலும்பிகள், குறிப்பாகப் பறவைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் பூந்தேனை பருகுகின்றன. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ficalbi, Eugenio (1889). "Notizie preventive sulle zanzare Italiane. IV. Nota preventiva (1) Descrizione di una specie nuova. Zanzara di colorito modesto, Culex modestus, n.sp.". Bullettino della Società Entomologica Italiana XXI: 93–94. https://www.biodiversitylibrary.org/item/41138#page/105/mode/1up. 
  2. "Evidence of laboratory vector competence of Culex modestus for West Nile virus". Journal of the American Mosquito Control Association 23 (2): 233–6. June 2007. doi:10.2987/8756-971x(2007)23[233:eolvco]2.0.co;2. பப்மெட்:17847861. 
  3. 3.0 3.1 3.2 "West Nile virus vector Culex modestus established in southern England". Parasites & Vectors 5 (1): 32. 2012. doi:10.1186/1756-3305-5-32. பப்மெட்:22316288. 
  4. Found in southern Sweden in 2016 by the State Authority for Veterinary Medicin, press release (Swedish) at http://www.sva.se/om-sva/pressrum/nyheter-fran-sva/nilfebersmyggan-upptackt-i-skane, accessed Aug 8 2016
  5. "Culicidae » Culicinae » Culicini » Culex » Barraudius » modestus Ficalbi". Systematic Catalog of Culicidae. Walter Reed Biosystematics Unit.
  6. Rackley, Adele (9 February 2012). "Disease-spreading mosquito found in UK after 60 years". Planet Earth Online. UK Natural Environment Research Council. Archived from the original on 4 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. Becker, N.; Petric, D.; Zgomba, M.; Boase, C.; Madon, M.; Dahl, C.; Kaiser, A. (2010). Mosquitoes and Their Control (2nd ed.). Springer. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-92873-7.
  8. "Horse-, bird-, and human-seeking behavior and seasonal abundance of mosquitoes in a West Nile virus focus of southern France". Journal of Medical Entomology 43 (5): 936–46. September 2006. doi:10.1603/0022-2585(2006)43[936:hbahba]2.0.co;2. பப்மெட்:17017231. https://archive.org/details/sim_journal-of-medical-entomology_2006-09_43_5/page/936. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயுலெக்சு_மோடெசுடசு&oldid=3929054" இலிருந்து மீள்விக்கப்பட்டது