கொசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதனைக் கடிக்கும் ஒரு கொசு

கொசு (இலங்கைத் தமிழ்: நுளம்பு), குலிசிடை (culicidae) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். இவை மெல்லிய உடல் மற்றும் ஓர் இணை இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொண்டவையாகும். இவ்வகைப் பூச்சிகளில் பொதுவாக பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும். ஆண் கொசுக்கள் பழச்சாற்றைப் பருகும்.

கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்