கிலோகிராம்
கிலோகிராம் (குறுவடிவு: கிகி) என்பது சீர்தரம் செய்யப்பட்ட அனைத்துலக முறை அலகுகளில் உள்ள அடிப்படையான நிறை அலகு. நிறை என்பது இலங்கையில் திணிவு என்று அழைக்கப்படும்.
ஒரு கிலோகிராம் நிறை என்பது பிளாட்டினம்-இரிடியம் கலவையால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் செவ்ரே என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக சீரான வெப்ப அழுத்த நிலைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் நிறை ஆகும். இப்பொருளை Le Grand K (லெ ‘கிரான்) என்று பிரெஞ்சு மொழியிலும், IPK அல்லது International Prototype Kilogram (அனைத்துலக முதலுருக் கிலோகிராம் என்று பொருள்படும் இன்ட்டர்நேசனல் புரோட்டோ டைப் கிலோகிராம்) என்று ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள். ஒரு கிலோகிராம் என்பது சற்றேறக்குறைய ஒரு லிட்டர் நீரின் நிறையை ஒத்தது. உலகில் உள்ள நிறைகள் எல்லாமும் ஒப்பீடு செய்யும் முதன்மை சீர்தர அளவு இந்த கிலோகிராம் என்பது. அடிப்படையான அனைத்துலக முறை அலகுகளில் இது ஒன்றுதான் கிலோ போன்ற முன்னொட்டு கொண்ட அலகு. அதே போல இது ஓர் அலகு மட்டுமே இயற்கையான இயற்பியல் அடிப்படை நிகழ்வு அல்லாமல், ஒரு குறிப்பிட்ட புறப்பொருளின் அடிப்படையில் அமைந்த அலகு.
அன்றாட வாழ்வில் ஒரு கிலோகிராம் என்பது ஒரு நிறை என்றாலும், புவியின் ஈர்ப்பால் ஏற்படும் ஒருகிலோகிராம் எடையோடு நினைத்துப் புழங்குவது வழக்கம். ஆனால் நிறை (இலங்கையில் திணிவு) என்பது உண்மையில் எடை அல்ல. எடை என்பது ஒரு பொருளின் நிறை மீது செலுத்தும் புவி ஈர்ப்பு விசை ஆகும். இந்த விசையை நியூட்டன் என்னும் அலகால் அளப்பர். எனவே நிறை அல்லது திணிவு என்பது பொருளின் இயல் தன்மை, பொருண்மைத்தன்மை. ஒரு பொருளின் நிறை என்பது அப்பொருள் மீது எந்த விசையைச் செலுத்தினாலும், அந்த விசையினால் அப்பொருள் கொள்ளும் முடுக்கத்தின் அளவை தீர்மானம் செய்யும் இயல்தன்மை எனலாம். ஒரு கிலோகிராம் நிறை மீது ஒரு நியூட்டன் விசையைச் செலுத்தினால், ஒரு மீ/நொ2 முடுக்கம் கொள்ளும்.
[தொகு] வெளி இணைப்புகள்
- National Institute of Standards and Technology (NIST): NIST Improves Accuracy of ‘Watt Balance’ Method for Defining the Kilogram
- The U.K.’s National Physical Laboratory (NPL): An overview of the problems with an artifact-based kilogram
- NPL: Avogadro Project
- NPL: NPL watt balance
- Metrology in France: Watt balance
- Australian National Measurement Institute: Redefining the kilogram through the Avogadro constant
- International Bureau of Weights and Measures (BIPM): Home page
- NZZ Folio: What a kilogram really weighs
- NPL: What are the differences between mass, weight, force and load?
- BBC: Getting the measure of a kilogram