உலக சுற்றுச்சூழல் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலக சூழல் நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலக சுற்றுச்சூழல் தினம்
பிற பெயர்(கள்) சூழல் நாள் / சுற்றுப்புறச் சூழல் நாள்
அனுசரிப்புகள் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்
நாள் 5 சூன்
காலம் 1 நாள்
நிகழ்வு ஆண்டுதோறும்
தொடர்புடையன புவி நாள்


உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

நோக்கம்[தொகு]

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும்,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

கடந்தகால நிகழ்வுகள்[தொகு]

உலக சுற்றுச்சூழல் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்குத் தலைமை இடங்களாக விளங்கிய இடங்கள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆண்டு நகரம் நாடு சிறப்புப் பொருள்
2005 சான் பிரான்சிஸ்கோ ஐக்கிய அமெரிக்கா ----
2004 பார்சிலோனா ஸ்பெயின் ----
2003 பெய்ரூத் லெபனான் ----
2002 ஷென்சென் சீனா ----
2001 தொரினோ/ஹவானா இத்தாலி/கியூபா ----
2000 அடெலைட் ஆஸ்திரேலியா ----
1999 டோக்கியோ ஜப்பான் ----
1998 மாஸ்கோ ரஷ்யக் கூட்டிணைப்பு ----
1997 சியோல் கொரியக் குடியரசு ----
1996 இஸ்தான்புல் துருக்கி ----
1995 பிரிட்டோரியா தென்னாபிரிக்கா ----
1994 இலண்டன் ஐக்கிய இராச்சியம் ----
1993 பீஜிங் சீனா ----
1992 ரியோ டி ஜெனரோ பிரேசில் ----
1991 ஸ்ட்டொக்ஹோம் சுவீடன் ----
1990 மெக்சிகோ நகரம் மெக்சிகோ ----
1989 பிரசெல்ஸ் பெல்ஜியம் ----
1988 பாங்கொக் தாய்லாந்து ----
1987 நைரோபி கென்யா ----