கபில் சிபல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபில் சிபல்
Portrait of Kapil Sibal
2007ஆம் ஆண்டு உலக பொருளாதார மன்றத்தில் கபில் சிபல்

நடுவண் மனிதவள மேம்பாடு அமைச்சர்
பதவியில்
22 மே 2009 – 2014
முன்னவர் அர்ஜுன் சிங்
பின்வந்தவர் ஸ்மிருதி இரானி

நடுவண் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
பதவியேற்பு
15 நவம்பர் 2010
முன்னவர் ஆ. ராசா

நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 2010
பின்வந்தவர் பவன் குமார் பன்சல்

நடுவண் புவியறிவியல் அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 2010
பின்வந்தவர் பவன் குமார் பன்சல்

சாந்தினிசௌக் மக்களவை உறுப்பினர்
பதவியில்
பதவியேற்பு
2004
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

பிறப்பு 8 ஆகஸ்ட் 1948 (1948-08-08) (அகவை 66)
ஜலந்தர், பஞ்சாப்
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
(மறைந்த) நீனா சிபல் (தி. 1973)
பிள்ளைகள் 2 மகன்கள்
இருப்பிடம் புது தில்லி
பயின்ற கல்விசாலை தில்லிப் பல்கலைக்கழகம் (முதுகலை (கலை) பட்டம் மற்றும் சட்ட பட்டப்படிப்பு)
ஆர்வர்ட் சட்டப் பள்ளி (சட்ட மேற்படிப்பு)
துறை வழக்கறிஞர்
சமயம் இந்து
இணையதளம் கபில் சிபல்
9 சூலை இன் படியான தகவல், 2008

கபில் சிபல் (Kapil Sibal, பஞ்சாபி : ਕਪਿਲ ਸਿਬਲ, இந்தி: कपिल सिब्बल; பிறப்பு 8 ஆகத்து 1948) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கபில் 2009ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடுவண் அரசில் கடந்த 2009-2014 மன்மோகன் சிங் அரசில், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும்[1] மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். இதற்கு முந்தைய ஆய அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் புவியறிவியல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் ஹர்ஷவர்தனிடம் தோற்றார்[2].

சூலை 1988ஆம் ஆண்டு பீகாரிலிருந்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். திசம்பர் 1989 முதல் திசம்பர் 1990 வரை கூடுதல் சொலிசிடைர் ஜெனரலாக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை (1995–96, 1997–98 மற்றும் 2001–2002) இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கபில்_சிபல்&oldid=1712569" இருந்து மீள்விக்கப்பட்டது