சசி தரூர்
| சசி தரூர் | |
| பிறப்பு | 9 மார்ச்சு 1956 |
|---|---|
| தங்குமிடம் | துபாய்/நியூயார்க் நகரம்[1] |
| கல்வி | புனித ஸ்டீபன் கல்லூரி, தில்லி (இளங்கலை), டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் (முனைவர்) |
| பணி | எழுத்தாளர், தூதர், அரசியல்வாதி, மத்திய அமைச்சர் |
| வாழ்க்கைத் துணை | திலோத்தமா முகர்ஜி (மணமுறிவு) கிருஸ்டினா ஜைல்ஸ்( 2007 முதல்) |
| பிள்ளைகள் | இஷான்,கனிஷ்க் (இரட்டையர்) |
| இணையதளம் | |
| ShashiTharoor.com ShashiTharoor.in | |
முனைவர் சசி தரூர் (மலையாளம்: ശശി തരൂര്) (பிறப்பு 9 மார்ச் 1956) இந்தியாவின் வெளியுறவுத்துறை முன்னாள் இணையமைச்சர் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இதன் முன்னர் ஐக்கிய நாடுகள் துணை பொதுசெயலர் (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர்.[2] இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர்.பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
சந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பதியினருக்கு 1956ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்தார்.இளமையும் கல்வியும் ஏற்காட்டிலும் கொல்கொத்தாவிலும் மும்பையிலும் கழிந்தது. 1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.
2009 இந்திய மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார்.
பொருளடக்கம் |
[தொகு] சசி தரூரின் புத்தகங்கள்
[தொகு] புனைவு
- ரயட் (Riot) (2001)
- ஷோ பிசினஸ் (Show Business)(1992)
- பைவ் டாலர் ஸ்மைல் மற்றும் பிற கதைகள்(The Five Dollar Smile and Other Stories) (1990)
- தி கிரேட் இந்தியன் நாவல் (1989)
[தொகு] அ புனைவு
- ஷேடோ அக்ராஸ் த பிளேயிங்க் ஃபீல்ட்: அறுபது ஆண்டுகள் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் (Shadows Across the Playing Field: Sixty Years of India-Pakistan Cricket)[with Shaharyar Khan] (2009)
- யானை,புலி மற்றும் கைப்பேசி:21ஆம் இந்தியா எண்ணங்கள் (The Elephant, the Tiger and the Cell Phone: Reflections on India in the 21st Century)(2007)
- புக்லெஸ் இன் பாக்தாத் Bookless in Baghdad(2005)
- நேரு:இந்தியாவின் கண்டுபிடிப்பு( Nehru: The Invention of India)(2003)
- இந்தியா:நடு இரவிலிருந்து ஆயிரவாண்டு வரை (India: From Midnight to the Millennium)(1997)
- ரீசன்ஸ் ஆப் ஸடேட் (Reasons of State)(1982)
[தொகு] மேலும் அறிய
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Haniffa, Aziz (May 10, 2007). "Shashi Tharoor joins the corporate world". Rediff News. http://www.rediff.com/money/2007/may/10shashi.htm.
- ↑ [1]