இம்மானுவேல் கண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இம்மானுவேல் காண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்கத்திய மெய்யியல்
18 ஆவது நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்
Kant 2.jpg
இம்மானுவேல் கண்ட்

பெயர்

இம்மானுவேல் கண்ட்

பிறப்பு

ஏப்ரல் 22, 1724
கோனிஸ்பர்க, பிரஷ்யா இராச்சியம்
(தற்பொழுது காலினின்கிராடு, ரஷ்யா)

இறப்பு

பெப்ரவரி 12 1804 (அகவை 79)
Königsberg, பிரசியா

கருத்துப் பரம்பரை

Kantianism, அறிவொளிக் காலம்

முதன்மைக் கருத்துக்கள்

அறிவாய்வியல், மீவியற்பியல், நன்னெறி

குறிப்பிடத்தக்க கருத்துக்கள்

Categorical imperative, Transcendental Idealism, Synthetic a priori, Noumenon, Sapere aude, Nebular hypothesis

ஏற்ற தாக்கங்கள்

Wolff, Tetens, Hutcheson, Empiricus, Montaigne, ஹ்யூம், டேக்கார்ர்ட், மலெபிரான்ஷெ, லீப்னிட்ஸ், ஸ்பினோசா, லாக், Berkeley, ரூசோ, நியூடன், Emanuel Swedenborg

ஊட்டிய
தாக்கங்கள்

யோஃகான் ஃவிக்டெ, பிரீடரிக் ஷெல்லிங், ஹெகல், ஷோப்பன்ஹௌவர், நீட்சே, Peirce, ஹுஸ்செர்ல், ஹைடிகர், விட்கென்ஸ்டைன், சாத்ரே, Cassirer, Habermas, Rawls, சோம்சுக்கி, ரோபேர்ட் நோசிக், பாப்பர், கீர்க்கெகார்டு, யங், Searle, மிஷேல் ஃபூக்கோ, Hannah Arendt, கார்ல் மார்க்ஸ், Giovanni Gentile, Karl Jaspers, ]ஹாயெக், என்றி பெர்குசன்

கையொப்பம்

Autograph-ImmanuelKant.png

இம்மானுவேல் கண்ட் (ஏப்ரல் 22, 1724பெப்ரவரி 12, 1804) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் கிழக்குப் பிரஷ்யாவின், கோனிக்ஸ்பர்க் (இன்றைய ரஷ்யாவிலுள்ள கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். நவீன ஐரோப்பாவின், செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார்.

வரலாறு[தொகு]

பிரேசிலில் உள்ள சிலை

எமானுவேல் (Emanuel) என்னும் பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட இவர் ஹீப்ரூ மொழியைக் கற்ற பின்னர் தனது பெயரை இம்மானுவேல் (Immanuel) என மாற்றிக்கொண்டார். இவரது பெற்றோர்களுக்கு ஒன்பது பிள்ளைகளில் நான்காவதாக 1724 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தனது முழு வாழ்க்கைக் காலத்தையும், அவருடைய சொந்த நகரமும், அக்காலக் கிழக்குப் பிரஷ்யாவின் தலைநகரமுமான கொனிக்ஸ்பர்க்கிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே கழித்தார். இவருடைய தந்தையார் ஜொஹான் ஜார்ஜ் கண்ட் (Johann Georg Kant) ஜெர்மனியின் வட கோடியில் அமைந்திருந்த மெமெல் என்னும் இடத்தைச் சேர்ந்தஒரு கைப்பணியாளர். இவரது குடும்பம் கடுமையான மதப் பற்றுக் கொண்டது. இவர் கற்ற கல்வி, கண்டிப்பான, ஒழுக்கம் சார்ந்தது, கணிதம், அறிவியல் என்பவற்றுக்கும் மேலாக இலத்தீன், சமயக் கல்வி என்பவற்றுக்கே கூடுதல் அழுத்தம் கொடுத்தது.

இளமைக்காலம்[தொகு]

இம்மானுவேல்காந்த்

கண்ட், 1740 ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கொனிக்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், லீப்னிஸ், வோல்ஃப் ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். பிரித்தானியத் தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், நியூட்டனுடைய கணிதம் சார்ந்த இயற்பியலை காண்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். 1746 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவது தத்துவ நூல் (Thoughts on the True Estimation of Living Forces) 1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், 1755 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவையல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காண்ட் கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார்.

தத்துவங்கள்[தொகு]

ஞானம் என்றால் என்ன?

வெளிப்புற அதிகாரங்களுக்கு வளைந்து கொடுக்காமல் நீயே சுயமாக யோசிக்கவும், செயல்படவும் கற்றுக்கொண்டால் அதுவே ஞானம்.

நற்குணங்கள் யாது?

அது கடவுள் கொடுத்தது அல்ல. இயற்கையில் வருவதும் அல்ல. உன் நினைப்புதான் அது.எந்த மிருகத்துக்கும் இதுதான். சுய சிந்தனை தான் ஒருவரின் நற்குணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது என்றார்.

அறிவைப்பற்றி[தொகு]

மெய்யுணர்தல் செயற்கையாக உணர்தல் முன்னம் உள்ளது , உள்ளதை உள்ளபடியாக உணர்தல்.பின்னம் உள்ளது நாமே அதோடு தொடர்புபட்ட வேறொன்றை வரும்முன் கூறி ஏற்றுக்கொள்ளுதல்.

கல்லறை[தொகு]

ருஸியாவில் உள்ள கல்லறையின் முன் உள்ள சிலை

இம்மானுவேலின் கல்லறை ருஸியாவில் உள்ளது.அவரின் கல்லறை உள்ள பகுதி ருஸியாவால் கைபற்றபின்னும் பாதுகாக்கப்படுகின்றது.பல புது மண தம்பதிகளும் இவரின் கல்லறையில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

அவரின் சிலை இன்னும் அந்த கல்லறையின் முகப்பில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

West German postage stamp, 1974, commemorating the 250th anniversary of Kant's birth.


மேற்கொள்கள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:

"http://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_கண்ட்&oldid=1496140" இருந்து மீள்விக்கப்பட்டது