ஹெகல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மேற்குலக மெய்யியல் 19 ஆவது நூற்றாண்டு மேற்குலக மெய்யியல் |
|
|---|---|
கியார்க் ஹெகல்
|
|
|
பெயர் |
கியார்க் வில்ஹெல்ம் பிரீடரிக் ஹெகல் |
|
பிறப்பு |
|
|
இறப்பு |
நவம்பர் 14 1831 (அகவை 61) (பெர்லின், ஜெர்மனி) |
|
கருத்துப் பரம்பரை |
ஜெர்மானிய கருத்தியம்; ஹெகலிசத்தின் நிறுவுனர் |
|
முதன்மைக் கருத்துக்கள் |
ஏரணம், வரலாற்றின் மெய்யியல், கலைநயம், சமயம், மேலியற்பியல், Epistemology, அரசியல் அறிவியல், |
|
குறிப்பிடத்தக்க கருத்துக்கள் |
முழுமுதல் கருத்தியம்(Absolute idealism), டயலெக்டிக், அடியெழுச்சி(Sublation) |
|
ஏற்ற தாக்கங்கள் |
அரிஸ்டாட்டில், ஹெராக்ளிட்டஸ், அன்செல்ம், ரெனே டேக்கார்ட், யோஃகான் வுல்ஃவ்கங் ஃவான் கோத்தே, மாரூஃக் ஸ்பினோசா, ழ்சான்-ழ்சாக்கெ ரூசோ, யாக்கோப் ப்யோமெ, இம்மானுவேல் கண்ட், யோஃகான் ஃவிஃக்டெ, பிரீடரிக் ஹோல்டெர்லின், ஷெல்லிங் |
|
ஊட்டிய |
ஃவூயெர்பாக், குரோசே, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், பௌவெர், பிராட்லி, லெனின், லூக்காட்ஸ், ஹைடெகர், சாத்ரே, பார்த், குங், ஹாபர்மாஸ், காடமர், மோல்ட்மன், கீர்க்கெகார்டு, ஜென்ட்டீல, மாக்ஸ் ஸ்டிர்னர், டெய்லர், அலெக்ஸாந்திரெ கோய்ரெ, Kojève, லக்கான், டிலோச், ஷிஷெக், ஃவுக்குயாமா |
ஹெகல் அல்லது ஹேகல் (1770-1831) என்பவர் ஒரு புகழ்மிக்க டாய்ட்ச் நாட்டு (ஜெர்மன் நாட்டு) மெய்யியல் அறிஞர் ஆவார். ஹெகலின் முழுப்பெயர் கியார்க் வில்ஹெல்ம் ஃவிரீடிரிழ்ச் ஹெகல் (Georg Wilhelm Friedrich Hege) ((IPA: [ˈgeɔʁk ˈvɪlhɛlm ˈfʁiːdʁɪç ˈhegəl]) என்பதாகும். இவர் ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் என்னும் நகரில் ஆகஸ்ட் 27, 1770ல் பிறந்தார். 61 ஆண்டுகள் வாழ்ந்து நவம்பர் 14, 1831ல் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இறந்தார்.
இவருடைய கொள்கைகள் ஜெர்மன் நாட்டு மெய்யியல் கருத்துக்களிலும் மேற்குலகின் மெய்யியியல் கருத்துக்களிலும் பெரும் செல்வாக்குப் பெற்று, இன்றும் மிக்க புகழுடன் விளங்குவன. இவருடைய கருத்துப்படி மாந்தர்களுடைய எண்ணம், கருத்து, பண்பாடு ஆகிய எந்தவொரு தன்மையையும் அறிந்து கொள்ள, கருத்துக்கள் எழுந்த வரலாற்றைத் துல்லியமாய் அறிதல் வேண்டும். இவருடைய செல்வாக்கினால், மேற்குலகில் மெய்யியல், கலை, சமயம் (மதம்), அறிவியல், அரசியல் முதலான பல துறைகளிலும் வரலாற்றுக் கண்ணோட்டம் மிகுந்தது. ஹெகல், கருத்துக்கள் வரன் முறையில் அதிக நாட்டம் காட்டினார். இதன் அடிப்படையில் கருத்துக்கள் (நிகழ்வுகளும்) படிப்படியாய் எழுவதையும் அது “வளர்ச்சி” அடைவதையும், எதிர்-எதிர் கருத்துக்கள் எழுந்து (மோதி) விரிவான வளர்ச்சி அடைவதையும் சுட்டிக்காட்டினார். இவ்வகை விரிவான கருத்து மோதலினால் ஏற்படும் வளர்ச்சியை டயலெக்டிக் (dialectic) என்று மேற்குலகில் குறிக்கின்றனர்.
[தொகு] வாழ்க்கை வரலாறு
[தொகு] படைப்புகள்
ஹெகல் தம் வாழ்நாளில் நான்கு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். 1807ல் வெளியிட்ட உள்ளத்தின் நிகழ்வியக்கம் (Phenomenology of Spirit or Phenomenology of Mind) என்னும் நூலில் புலனறிவில் இருந்து எப்படி உள்ளுணர்வும், உள்ளறிவும் எழுகின்றது என்று விளக்குகின்றார். உள்ளுணர்வு நிலைகளில் உள்ள பல்வேறு வடிவங்களை/நிலைகளைப் பற்றி கூறுகின்றார். உலகநிகழ்வுகள் அறவொழுக்கக் கொள்கை நிலைகள் பற்றி விளக்குகிறார். 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிட்ட ஏரணத்தின் அறிவியல் (Science of Logic) என்னும் நூலில் ஏரணம், புறவியல்பியல் மீறிய மெய்யியல் முதலிய கொள்கைகளை விரிக்கின்றார். பின்னர் 1811-1812 இலும், பின்னர் 1816லும் (திருந்திய பதிப்பாக 1831லும்) தன்னுடைய முழு மெய்யியல் கருத்துக்களையும் தொகுத்து மெய்யியல்களின் கலைக்களஞ்சியம் (Encyclopedia of the Philosophical Sciences) என்னும் நூலாக வெளியிட்டார். பின்னர் 1822ல் தன்னுடைய அரசியல் குமுகவியல் பற்றிய கருத்துக்களை செவ்வழியின் மெய்யியல் அடிப்படைக் கருத்துக்கள் (Elements of the Philosophy of Right) என்னும் நூலாக வெளியிட்டார்.