நன்னெறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நன்னெறி என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது சரியான நடத்தையையும், நல் வாழ்வையும் உள்ளடக்கியது. சரி, பிழை என்பவற்றின் பகுத்தாய்வு பொதுவாகக் கருதப்படுவதிலும் குறிப்பிடத்தக்க அளவு விரிவானதாகும். நன்னெறியின் முக்கியமான அம்சம் "நல்ல வாழ்வு" ஆகும். பயனுள்ளதும், திருப்தி அளிப்பதுமான வாழ்வே முக்கியமானது எனபதே பல மெய்யியலாளரது கருத்தாகும்.