அணுக்கட்டு எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்கட்டு எண் (Atomicity) என்பது ஒரு மூலக்கூறில் இருக்கும் மொத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆக்சிசனின் ஒவ்வொரு மூலக்கூறும் (O2) இரண்டு ஆக்சிசன் அணுக்களால் ஆனது. எனவே ஆக்சிசனின் அணுக்கட்டு எண் 2 ஆகும்[1]. முற்காலத்தில் அணுக்கட்டு எண் என்ற சொல் சில நேரங்களில் இணைதிறனைக் குறிக்கும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அணுக்கட்டு எண்ணின் அடிப்படையில் மூலக்கூறூகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

ஓரணு மூலக்கூறுகள்[தொகு]

ஓரணுவால் ஆக்கப்பட்ட மூலக்கூறுகள் ஓரணு மூலக்கூறுகள் எனப்படும்.

எ.கா: ஈலியம், நியான், ஆர்கான் போன்ற அனைத்து மந்த வாயுக்கள்.

ஈரணு மூலக்கூறுகள்[தொகு]

இரண்டு அணுக்கள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகள் ஈரணு மூலக்கூறுகள் எனப்படும்.

எ.கா: ஐதரசன், குளோரின், ஆக்சிசன்.

மூவணு மூலக்கூறு[தொகு]

மூன்று அணுக்கள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகள் மூவணு மூலக்கூறுகள் எனப்படும்.

எ.கா: ஓசோன்.

பல்லணு மூலக்கூறுகள்[தொகு]

மூன்று அணுக்களுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆன மூலக்கூறு பல்லணு மூலக்கூறு எனப்படும்.

எ.கா:பாசுபரசு, கந்தகம்

அனைத்து உலோகங்களும், கார்பன் போன்ற வேறு சில தனிமங்களும் எளிமையான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவை மிகப் பெரிய மற்றும் வரம்பற்ற எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டுள்ளன. அவற்றின் அணுக்கட்டு எண்ணை தீர்மானிக்க முடியாது. எனவே பொதுவாக இவற்றின் அணுக்கட்டு எண் 1 ஆக கருதப்படுகிறது.

ஒரே தனிமத்தின் புறவேற்றுமை வடிவங்கள் வெவ்வேறு அணுக்கட்டு எண்ணையும் கொண்டிருக்கலாம். முதல் முப்பது தனிமங்களின் அணுக்கட்டு எண் அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

!அணு எண் தனிமம் அணுக்கட்டு எண்
1 நீரியம் 2
2 ஈலியம் 1
3 இலித்தியம் 1
4 பெரிலியம் 1
5 போரான் 1*
6 கரிமம் 1
7 நைட்ரசன் 2
8 ஆக்சிசன் 2
9 புளோரின் 2
10 நியான் 1
11 சோடியம் 1
12 மக்னீசியம் 1
13 அலுமினியம் 1
14 சிலிக்கான் 1**
15 பாசுபரசு 4
16 கந்தகம் 8
17 குளோரின் 2
18 ஆர்கான் 1
19 பொட்டாசியம் 1
20 கல்சியம் 1
21 இசுக்காண்டியம் 1
22 தைட்டானியம் 1
23 வனேடியம் 1
24 குரோமியம் 1
25 மாங்கனீசு 1
26 இரும்பு 1
27 கோபால்ட்டு 1
28 நிக்கல் 1
29 செப்பு 1
30 துத்தநாகம் 1
* போரானுக்கு பல புறவேற்றுமைகள் உண்டு.
** சிலிக்கான் வலைப்பின்னல் அணிக்கோவையாக உருவாகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. Determination of Chlorine in Oxygen From Solid Chemical Oxygen Generators, SAE International, doi:10.4271/arp1320
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கட்டு_எண்&oldid=3377136" இலிருந்து மீள்விக்கப்பட்டது