ஹூப்ளி-தார்வாட்
ஹூப்ளி-தார்வாட் | |
---|---|
இரட்டை நகரங்கள் | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | தார்வாட் |
மக்கள்தொகை | |
• இரட்டை நகரங்கள் | 9,43,857 |
• தரவரிசை | 2 |
• பெருநகர் | 9,43,857 |
ஹூப்ளி-தார்வாட் (Hubli and Dharwad), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஹூப்ளி-தார்வாட் இரட்டை நகரங்களும் மற்றும் கர்நாடகாவின் பெங்களூருக்கு அடுத்து இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியும் ஆகும்.[1][2]தார்வார் மாவட்டத்தின் நிர்வாக அலுவலகங்களும் கொண்ட தார்வாட் நகரப்பகுதிற்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஹூப்ளி நகரப்பகுதி அமைந்துள்ளது. ஹூப்ளி நகரப் பகுதி வடக்கு கர்நாடகா மாநிலத்தின் வணிகம் மற்றும் தொழில் வளாகங்கள் கொண்ட பகுதியாகும். ஹூப்ளி-தார்வாட் நகரங்களை, ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி நிர்வகிக்கிறது.[3]
நிர்வாகம்
[தொகு]181.66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தார்வாட்-ஹூப்ளி மாநகராட்சி 82 வார்டுகள் கொண்டது.[4] 2011-இல் இந்த இரட்டை நகரங்களுக்கான மாநகராட்சியின் மக்கள் தொகை 9,43,857 ஆகும்.[5][6]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 9,43,788 ஆகும். அதில் 474,518 ஆண்கள் மற்றும் 469,270 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,06,031 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு உடையோர் 7,27,103 ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 92,744 மற்றும் 17232 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 6,36,527 (67.44 %), இசுலாமியர் 2,56,228 (27.15 %), கிறித்தவர்கள் 26,307 (2.79 %), பௌத்தர்கள் 658 (0.07 %), சமணர்கள் 15,236 (1.61 %), சீக்கியர்கள் 1,337 (0.14 %) மற்றும் பிறர் 0. 79% ஆகவுள்ளனர்.[7][8] இங்கு கன்னடம் முதன்மை மொழியாக விளங்குகிறது. மராத்தியும், கொங்கணியும், உருதும் அடுத்தநிலையில் பேசப்படுகின்றன.[9]
போக்குவரத்து
[தொகு]வான் போக்குவரத்து
[தொகு]ஹூப்ளி விமான நிலையம் உள்நாட்டு வான் போக்குவரததிற்கு மட்டும் உள்ளது. தற்போது இதனை பன்னாட்டு வான் போக்குவரத்து தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது.[10][11]
ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 4 தொடருந்து நிலையங்களும், ஹுப்ளி சந்திப்பு தொடருந்து நிலையமும் கொண்டுள்ளது. தென்மேற்கு தொடருந்து இரயில்வே மண்டலத்தின் தலைமையிடமான ஹுப்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்தின் முதலாம் நடைமேடை 1505 மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான நடைமேடையாகும்.[12]
சாலைகள்
[தொகு]குவாலியர்-பெங்களூருவை இணைக்கும் ஆசிய நெடுஞ்சாலை 47 ஹூப்ளி]] வழியாக செல்கிறது. மேலும் பெங்களூரு-புனே நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை ஹூப்ளி வழியாகச் செல்கிறது.
காலநிலை
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் ஹூப்ளி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
0.0
29
15
|
0.0
32
16
|
10
35
19
|
40
36
21
|
60
35
21
|
150
28
21
|
210
26
21
|
200
26
20
|
110
28
20
|
60
29
19
|
30
29
17
|
0.0
28
15
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: YR | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
ஹூப்ளி-தார்வாட் அயனமண்டல ஈரப்பதமிக்க மற்றும் உலர்ந்த காலநிலை கொண்டுள்ளது. பெப்ரவரியின் பிற்காலத்திலிருந்து சூன் முற்பகுதிவரையான வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்து உலர்ந்த காலநிலையும் தொடரும் பருவக்காற்று காலத்தில் மிகுந்த ஈரப்பதத்துடன் கூடிய மிதமான வெப்ப காலநிலையும் நிலவுகிறது. அக்டோபர் கடைசி முதல் பெப்ரவரி முற்பகுதிவரை இளங்கூதிர் காலத்தில் மழை ஏதுமின்றி மிதமான வெப்ப காலநிலை நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவே மிகச்சிறந்த காலமாகும்.
ஹூப்ளி சராசரி கடல்மட்டத்திலிருந்து 626.97 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழையளவு 838 மிமீ.[13]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
- ↑ "Urban Agglomerations in India with more than 1 Lakh Population" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.
- ↑ "::HDMC::". Archived from the original on 16 February 2006. பார்க்கப்பட்ட நாள் 16 February 2006.
- ↑ Hubli-Dharwad Municipal Corporation
- ↑ "Hubli and Dharwad City Census 2011 (C korya)data". Census2011. பார்க்கப்பட்ட நாள் 29 September 2018.
- ↑ "Census of India 2011 Provisional Population Totals" (PDF).
- ↑ Hubli and Dharwad City Population 2011
- ↑ Hubli-Dharwad City Population Census 2011
- ↑ 2011 Census of India, Population By Mother Tongue
- ↑ Kattimani, Basavaraj (30 November 2018). "Get ready to fly abroad from Hubballi airport | Hubballi News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hubballi/get-ready-to-fly-abroad-from-hubballi-airport/articleshow/66870690.cms.
- ↑ "Hubballi Is Best Choice for International Airport of N-Karnataka: Angadi". Hubballi Times (in அமெரிக்க ஆங்கிலம்). 10 March 2020. Archived from the original on 23 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Karnataka's Hubballi to get world's longest railway platform | Cities News,The Indian Express". 5 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 June 2020.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-06-13. பார்க்கப்பட்ட நாள் 2011-07-02.