மக்காவ்வின் வரலாற்று மையம்
மக்காவு வரலாற்று மையம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii, iv, vi |
உசாத்துணை | 1110 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2005 (29வது தொடர்) |
மக்காவ்வின் வரலாற்று மையம் (Historic Centre of Macao) (மரபுவழிச் சீனம்: 澳門歷史城區; போர்த்துக்கேய மொழி: O Centro Histórico de Macau) என்பது முன்னாள் போர்த்துக்கேய குடியேற்றப் பகுதியாகவிருந்த மக்காவ்விலுள்ள இருபதிற்கும் மேற்பட்ட, சீனத்துப் பண்பாட்டையும் போர்த்துக்கேய பண்பாட்டையும்]] ஒருங்கிணைத்த, கட்டிடங்கள் உள்ள நகரப்பகுதியாகும். இவை இந்த நகரின் கட்டிடப் பாரம்பரியத்தைப் பறை சாற்றுவனவாக அமைந்துள்ளன. இவற்றில் , நகர சதுக்கங்கள், சாலையமைப்புகள், தேவாலயங்கள், கோவில்கள் அடங்கியுள்ளன.
2005இல் இவற்றை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் ஏற்றது; சீன மக்கள் குடியரசில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களில் இது 31வது களமாகும். யுனெசுக்கோ இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகையில்: "வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலைகள், வீடுகள், சீன/போர்த்துக்கேய சமய, அரசுக் கட்டிடங்கள் அடங்கிய மக்காவ்வின் வரலாற்று மையம், பண்பாடு, கட்டிடப் பாணி, தொழினுட்பம், அழகியல் ஆகியவற்றில் கிழக்கத்திய, மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றது." என்றும் "...பன்னாட்டு வணிகத்தின் உந்துகையால் சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான மிகத் தொன்மையான, நீண்ட கால உறவை வெளிப்படுத்துவனவாக உள்ளன." என்றும் கூறியுள்ளது.[1]
வரலாற்று மையத்திலுள்ள இடங்கள்
[தொகு]மக்காவு மூவலந்தீவில் நகர மையத்திலுள்ள மக்காவ்வின் வரலாற்று மையம் இரண்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு வலயமும் இடையகப் பகுதியால் சூழப்பட்டுள்ளது. [2]
வலயம் 1
[தொகு]முதலாம் வலயம் மவுண்ட் ஹில்லிற்கும் பர்ரா ஹில்லிற்கும் இடைப்பட்ட குறுகிய நிலப்பகுதியில் அமைந்துள்ளது.[3]
கட்டிடங்கள்
[தொகு]பெயர் | ஒளிப்படம் |
---|---|
அ-மா கோவில் | |
மூர்களின் படைவீடு | |
மண்டாரின் மாளிகை | |
புனித இலாரன்சு தேவாலயம் | |
புனித யோசப் குருமடமும் தேவாலயமும் | |
டொம் பெத்ரோ V அரங்கம் | |
சர் இராபர்ட்டு ஹோ துங் நூலகம் | |
புனித ஆகஸ்தீன் தேவாலயம் | |
லீல் செனடோ கட்டிடம் | |
சாம் கை வுய் குன் (குவாங் டைய் கோவில்) |
|
ஹோலி அவுஸ் ஆப் மெர்சி | |
இக்ரெயா ட சே (மக்காவு) | |
லூ காவ் மாளிகை | |
புனித டொமினிக் தேவாலயம் | |
புனித பவுல் தேவாலயத்தின் இடுபாடுகள் | |
நா ச்சா கோவில் | |
பழைய நகரச் சுவர்களின் பகுதி | |
மொன்டே கோட்டை | |
புனித அந்தோணியார் தேவாலயம் | |
காசா கார்டன் | |
பழைய சீர்திருத்தவாதக் கல்லறை மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பழைய தலைமையகம்[2] |
சதுக்கங்கள்
[தொகு]பெயர் | ஒளிப்படம் |
---|---|
பர்ரா சதுக்கம் 媽閣廟前地 இலார்கோ டொ பகோடெ ட பர்ரா |
|
லிலோ சதுக்கம் 亞婆井前地 |
|
புனித அகஸ்தீன் சதுக்கம் 崗頂前地 |
|
செனடோ சதுக்கம் 議事亭前地 |
|
புனித டோமினிக் சதுக்கம் 板樟堂前地 |
|
கதீட்ரல் சதுக்கம் 大堂前地 |
|
இயேசு கம்பனி சதுக்கம் 耶穌會紀念廣場 |
|
கேமோசு சதுக்கம் 白鴿巢前地 |
வலயம் 2
[தொகு]பூங்காவும் நகரியப் பகுதிகளும் உள்ளடங்கிய இடைநிலப் பகுதியால் இந்த வலயம் சூழப்பட்டுள்ளது.[2]
- குய்யா கோட்டையில் குய்யா திருமனையும் குய்யா கலங்கரை விளக்கமும் உள்ளன.
மேலாண்மை
[தொகு]மக்காவு வரலாற்று மையத்தில் உள்ள பெரும்பான்மையானக் கட்டிடங்கள் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிக்குச் சொந்தமானவை. இந்த நிர்வாக அமைப்பின் பல்வேறு துறைகள்/ஆணையங்கள் இவற்றை பராமரித்து வருகின்றன. சிறப்பு நிர்வாகப் பகுதி அரசின் பண்பாட்டுக் கழகம் மண்டாரின் மாளிகை, புனித பவுல் தேவாலயத்தின் இடிபாடுகள், பழையச் சுவரின் பகுதிகள், மலைக்கோட்டை, குய்யா கோட்டை ஆகியவற்றை மேற்பார்க்கின்றது.
லீல் செனடோ கட்டிடத்தை மக்காவு பிராந்திய நகராட்சி மன்றமும், அ-மா கோவிலை அ-மா கோவில் அறக்கொடை சங்கமும் ந ட்ச்சா கோவிலை அக்கோவிலின் மேலாண்மை வாரியமும் மேற்பார்க்கின்றன. மூரிஷ் பாரக்சை மக்காவு துறைமுக நிர்வாகம் பராமரிக்கின்றது.[4]
மற்றவற்றை அவற்றிற்குரிய அமைப்புக்கள் மேலாண்மை செய்கின்றன. புனித. ஜோசப் குருமடமும் தேவாலயமும் அந்த மடாலயத்திற்கு உரியன; மக்காவு கத்தோலிக்க மறைமாவட்டம் இவற்றை மேற்பார்வையிடுகின்றது. மெர்சி புனித மாளிகையை ஹோலி அவுஸ் ஆப் மெர்சி அறக்கட்டளை நிர்வகிக்கின்றது. டொம் பெத்ரோ V அரங்கை அதற்குரிய மேலாண்மை வாரியம் நிர்வகிக்கின்றது.[4]
வரலாற்று மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் பல்வேறுச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன; இவற்றில் முதன்மையானது மக்காவு அடிப்படைச் சட்டம் ஆகும்.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Historic Centre of Macau. UNESCO World Heritage Centre
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Advisory Body Evaluation (of Historic Centre of Macao)" (PDF). UNESCO. 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-05-01.
- ↑ The Map, Historic Centre of Macao
- ↑ 4.0 4.1 "Nomination file submitted to UNESCO" (PDF). UNESCO. 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.
வெளி இணைப்புகள்
[தொகு]- அலுவல்முறை வலைத்தளம் பரணிடப்பட்டது 2014-09-01 at the வந்தவழி இயந்திரம்
- யுனெசுக்கோ உலகப்பாரம்பரியக் கள வலைத்தளத்திலிருந்து தகவல்கள்
- 1001wonders.org : visit this site in panophotographies - 360 x 180 degree images பரணிடப்பட்டது 2009-10-14 at the Portuguese Web Archive