பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்
பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]
21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.[2] 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்
[தொகு]- நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்
- இந்தியப் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 20,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
- கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
- கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வரிகளையும் செலுத்திய பிறகு, இலாபம் 2,500 கோடிக்கும் மேலாக இருந்திருக்க வேண்டும்.
- நிறுவனம் உலகளாவிய இருப்பு கொண்டிருக்க வேண்டும்.
மகா நவரத்தினம் தகுதி பெற்ற நிறுவனங்கள்
[தொகு]- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
- பாரத மிகு மின் நிறுவனம்
- கெயில் (இந்தியா) நிறுவனம்
- தேசிய அனல் மின் நிறுவனம்
- இந்திய உருக்கு ஆணையம்
- இந்தியா நிலக்கரி நிறுவனம்
- இந்தியன் ஆயில் கார்பரேசன்
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்
நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்
[தொகு]- சிறு நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
- கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
நவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள்
[தொகு]- பாரத் பெட்ரோலியம் நிறுவனம்
- பொறியாளர்கள் (இந்தியா) நிறுவனம்
- இந்துஸ்தான் பெட்ரோலியம்
- தேசிய அலுமினியம் நிறுவனம்
- தேசிய கனிம வள நிறுவனம்
- ஆயில் இந்தியா லிமிடெட்
- இந்திய மின் கட்டமைப்பு நிறுவனம்
- ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்
- இந்திய கொள்கலன் நிறுவனம்
- இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
- மகாநகர் டெலிபோன் நிகம்
- தேசிய கட்டிடக் கட்டுமானக் கழகம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- எரிசக்தி நிதி நிறுவனம்
- ராஷ்டிரிய இரும்பு நிறுவனம்
- இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்
சிறு நவரத்தின நிறுவனங்கள்
[தொகு]சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
முதல் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்
[தொகு]- இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
- பால்மர் லாறீ நிறுவனம்
- பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
- பிஎஸ்என்எல்
- மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்
- இந்தியக் கடல் தூர்வாரும் நிறுவனம்
- கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம்
- இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்
- இந்துஸ்தான் செய்தித்தாள் உற்பத்தி நிறுவனம்
- வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி நிறுவனம்
- இந்திய அரிய வகை கனிமங்கள் நிறுவனம்
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி முகமை
- இர்க்கொன் நிறுவனம்
- மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்
- இந்திய மாங்கனீசு நிறுவனம்
- மிஸ்ரா உலோகக் கனிம நிறுவனம்
- தேசிய விதைகள் நிறுவனம் (National Seeds Corporation)
- நுமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்
- பவன் ஹன்ஸ் நிறுவனம்
- ரெயில்டெல்
- இராஷ்டிரிய பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ்
- வடக்கு நிலக்கரி வயல்கள்
- மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம்
- தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
- மேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
- மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம்
- தேசிய சிறுதொழில் கழகம்
- ஆந்திரிக்சு கழகம்
- பாரத் கற்கரி நிறுவனம்
- பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்
- பிரிட்ஜ் மற்றும் ரூப் நிறுவனம் (இந்தியா)
- கொச்சி கப்பல் கட்டுந்துறை
- எண்ணூர் துறைமுகம்
- கோவா கப்பல் கட்டுந்துறை
- இந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
- இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்
- குதிரைமுக இரும்பு கனிம நிறுவனம்
- மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
- உலோகங்கள் மற்றும் கனிம வணிகக் கழகம்
- தேசிய உரங்கள் நிறுவனம்
- தேசிய புனல் மின் கழகம் என் எச் பி சி லிமிடெட்
- வடகிழக்கு மின்சக்தி கழகம்