பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]

21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.[2] 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.

மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்[தொகு]

  • நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்
  • இந்தியப் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 20,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வரிகளையும் செலுத்திய பிறகு, இலாபம் 2,500 கோடிக்கும் மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • நிறுவனம் உலகளாவிய இருப்பு கொண்டிருக்க வேண்டும்.

மகா நவரத்தினம் தகுதி பெற்ற நிறுவனங்கள்[தொகு]

நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்[தொகு]

  • சிறு நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
  • கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

நவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள்[தொகு]

சிறு நவரத்தின நிறுவனங்கள்[தொகு]

சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதல் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்[தொகு]

இரண்டாம் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.bsepsu.com/list-cpse.asp List of CPSEs - BSE
  2. 2.0 2.1 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs
  3. http://dpe.nic.in/about-us/management-division/maharatna-navratna-miniratna-cpse