பயனர் பேச்சு:TNSE SIVA VLR
வாருங்கள்!
வாருங்கள், TNSE SIVA VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:29, 5 மே 2017 (UTC)
கட்டுரைகளை முழுக்க தமிழில் எழுத வேண்டுகோள்
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கும் கட்டுரைகளை முழுக்கத் தமிழில் எழுத வேண்டுகிறோம். தாங்கள் உருவாக்கிய உட்ஸ் அறிக்கை கட்டுரையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறோம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 16:36, 10 மே 2017 (UTC)
குருகுலம்
[தொகு]குருகுலம் பற்றி பங்களிக்க இங்கு வாருங்கள். ஏற்கனவே இத்தகயை கட்டுரை இருப்பதால் இதே தலைப்பில் தாங்கள் உருவாக்கிய புதிய கட்டுரையை நீக்கி உள்ளோம். நன்றி.--இரவி (பேச்சு) 10:56, 24 மே 2017 (UTC)
தானியங்கித் தமிழாக்கம்
[தொகு]சண்டைக் கடிதம் கட்டுரையை கூகுள் மொழிபெயர்ப்பில் இருந்து இன்னும் இயல்பான முறையில் படிக்குமாறு மாற்ற, இன்னும் சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. கவனிக்க வேண்டுகிறோம்.
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
--இரவி (பேச்சு) 07:54, 6 சூன் 2017 (UTC)
- வணக்கம், தாங்கள் தொடர்ந்து கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியை நாடுவது போல் உள்ளது. என்ன தான் கூகுள் மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்தினாலும் அதன் இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு வாடை நீங்குவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, நிலைக்குழு (இந்தியா கட்டுரையைக் காணுங்கள். இது அப்படியே வரிக்கு வரி ஆங்கிலச் சொற்றொடர் அமைப்புக்கு ஏற்ப மொழிபெயர்கப்பட்டிருப்பதால் படித்தால் புரியவில்லை. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை ஒப்பிட்டடுப் பார்த்தால் தான் புரிகிறது. தமிழ்நடை போல் இயல்பாகவும் இல்லை. எனவே, கூகுள் மொழிபெயர்ப்பை நாடாமல் கட்டுரையை முழுமையாகப் படித்து உள்வாங்கி நீங்களே முற்று முழுதாக தமிழாக்க முனையுங்கள். இது சிரமமாக இருந்தால் தங்களுக்கு நன்கு அறிமுகமான, இலகுவான தலைப்புகளில் எழுதலாம். இனி மேலும் புதிய கட்டுரைகளைத் தொடங்குவதற்குப் பதில் தாங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ள கட்டுரைகளைப் படித்துப் பார்த்து மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:10, 12 சூலை 2017 (UTC)
பதக்கம்
[தொகு]சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
வணக்கம். பல்வேறு தலைப்புகளில் 100 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியுள்ள உங்கள் ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 05:07, 12 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- வாழ்த்துக்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:37, 24 சூலை 2017 (UTC)
தேவைப்படும் மாற்றங்கள்
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்தமைக்கு நன்றி. நீங்கள் மொழிமாற்றம் செய்யும் கட்டுரைகளில் சில காரணிகள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இங்குள்ள மாற்றங்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியுமென எண்ணுகிறேன். ஒரு கட்டுரை முழுமை அடைந்த பிறகு அடுத்த கட்டுரையை துவங்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:37, 24 சூலை 2017 (UTC)
- வணக்கம், நீங்கள் திரும்பவும் அதே தவறுகளை செய்து வருகிறீர்கள். இது தொடர்ந்தால் நீங்கள் புதிய கட்டுரைகளை உருவாக்குவது தடைசெய்யப்படலாம். கட்டுரைகளை திருத்தவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:43, 26 சூலை 2017 (UTC)
உதவி தேவை
[தொகு]நீங்கள் உருவாக்கிவரும் இந்தியக் காலப்பகுதிகள் பற்றிய கட்டுரைகளில் தகுந்த பகுப்பையும் உடனடியாகவே சேர்த்து விடுங்கள்: உ+ம்: 1519 இல் இந்தியா என்ற கட்டுரையில் பின்வரும் பகுப்புகள் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்: பகுப்பு:16 ஆம் நூற்றாண்டில் இந்தியா, மற்றும் பகுப்பு:1519.
இதே போன்றே ஏனைய கட்டுரைகளிலும் இவ்வாறே சேருங்கள்: உ+ம்: 1627 இல் இந்தியா கட்டுரையில் பகுப்பு:17 ஆம் நூற்றாண்டில் இந்தியா, மற்றும் பகுப்பு:1627.
இனி நீங்கள் எழுதப்போகும் கட்டுரைகளிலும், உங்கள் பழைய கட்டுரைகளிலும் இப்பகுப்புகளைச் சேர்த்து உதவுங்கள். நன்றி.----Kanags \உரையாடுக 07:17, 5 ஆகத்து 2017 (UTC)
- நீங்கள் உருவாக்கும் காலவாரியான இந்திய வரலாறு பக்கங்களில் மேலே குறிப்பிட்டவாறு பகுப்புகளை சேருங்கள். நீங்கள் கட்டுரைகள் உருவாக்கும் வேகத்தில் என்னால் பகுப்புகளை சேர்க்க எனது வேகம் போதாமல் உள்ளது. பகுப்புகள் சேர்ப்பதில் உங்களுக்கு என்ன தடை உள்ளது? தெரிந்தால் உதவ முடியும். மேலும் கட்டுரைகளை ஒருங்குறியில் எழுதுங்கள். இல்லையேல் கட்டுரைகள் நீக்கப்படும். நன்றி.--Kanags \உரையாடுக 10:48, 9 ஆகத்து 2017 (UTC)
May 2018
[தொகு]Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO (பேச்சு) 16:07, 28 மே 2018 (UTC)
பின்வரும் விடயங்களைக் கவனித்திற் கொண்டு, கட்டுரைகளில் திருத்தம் செய்யவும்:
- முன்மையானவை
- கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
- சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
- பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
- 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்.
- அடுத்தவை
- உரிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படல் வேண்டும். ஆங்கில ஒலிபெயர்ப்பைக் கொண்ட கட்டுரைகள் தரமுயத்தலுக்கு உள்ளாக வேண்டியவையாகும். காண்க: விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு, விக்கிப்பீடியா:நடைக் கையேடு
- மிகவும் எளிமையான தமிழ் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம். மேலும், மொழிமுதல் எழுத்துக்கள் என்பதற்கேற்ப, குறைந்தது மெய்யெழுத்துக்களை முதலில் கொண்டு சொற்கள் அமைப்பதைத் தவிர்க்கலாம்.
- முடிந்தவரை வடமொழிச் சொற்களை அல்லது பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து, நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம்.
- கட்டுரைகள் {{விக்கியாக்கம்}}, {{Cleanup}} என்பவற்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை கருத்திற்கொள்ளுங்கள். கட்டுரைகளின் எண்ணிக்கையைவிட, தரமே இங்கு முக்கியம்.
- மேலதிக உதவி தேவைப்படின், விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்.
தயவுசெய்து வழிகாட்டல்களை அலட்சியம் செய்யாது, அவற்றுக்கேற்ப பங்களியுங்கள். நன்றி!--AntanO (பேச்சு) 16:19, 28 மே 2018 (UTC)
You may be blocked from editing without further warning the next time you create an inappropriate page. AntanO (பேச்சு) 16:34, 28 மே 2018 (UTC)
{{unblock|reason=Your reason here ~~~~}}
. AntanO (பேச்சு) 16:39, 28 மே 2018 (UTC)@AntanO: இப்பயனரை ஏன் தடை செய்தீர்கள் என்று புரியவில்லை. en:1659 in India என்பது போன்று ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களையே அவர் இங்கு உருவாக்க முனைகிறார். இது போல் அவர் சென்ற ஆண்டு உருவாக்கிய பக்கங்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு ஏற்ப போதிய உள்ளடக்கம் உள்ளதா எனச் சிந்திக்கலாமே தவிர, Creating nonsense pages என்ற அடிப்படையில் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்றே கருதுகிறேன். எனவே, இவரது பயனர் கணக்கு மீதான தடையை நீக்கி இருக்கிறேன். இந்தப் பயனர் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு வாட்சாப்பு உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் அவருக்கு நேரடியாக வழி காட்டி நெறிப்படுத்த இயலும். நன்றி. --இரவி (பேச்சு) 02:52, 29 மே 2018 (UTC)
- 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற நடைமுறை உள்ளது. அல்லது, இப்போது நடைமுறையில் இல்லையா? மேலும், உருவாக்கப்படும் கட்டுரைகள் தானியங்கி போன்ற எழுத்து நடைமுறையில் காணப்பட்டது. அத்துடன் விக்கி வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை (எ.கா: உசாத்துணை இல்லை). மேலும், இப்பயனர் அறிவிப்புகளை கண்டுகொள்ளவில்லை. நிற்க, தடை நீக்கத்திற்கு த.வி. ஏதாவது வழிகாட்டல்களைக் கொண்டுள்ளதா? இல்லையாயின் அவரவர் நியாயங்களுக்கு ஏற்ப தடை நீக்கத்திற்கு வழி ஏற்படுத்தும். காண்க: en:Wikipedia:Guide to appealing blocks --AntanO (பேச்சு) 02:59, 29 மே 2018 (UTC)
- 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற நடைமுறை இப்போதும் உள்ளது. போதிய உள்ளடக்கம் இல்லை என்றால் உரிய வார்ப்புரு இட்டு ஒரு மாத காலம் தருவதும் வழக்கமே. 20 நிமிட இடைவெளியில் மூன்று அறிவிப்புகள் இட்டு தடை செய்யும் அளவு இப்பயனர் எந்தத் தவறும் செய்யவில்லை. புதிய பயனர்கள் விக்கிப்பீடியாவைப் புரிந்து கொள்வதில் பெரும் சிரமங்கள் உள்ளன. இப்போதும் அவருக்குத் தான் ஏன் தடை செய்யப்பட்டோம் என்பதே புரியாமல் வாட்சாப்பில் உதவி கோருகிறார். இயன்ற அளவு அவர்களை வழிகாட்டி உள்வாங்க முயல்வோம். தடை நீக்கத்தை மீள்விப்பது குறித்து எந்த வழிகாட்டல் பக்கமும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் உரையாடி உருவாக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 03:04, 29 மே 2018 (UTC)
- 5 மே 2017 இல் பங்களிப்புத் தொடங்கியவர் புதிய பயனரான என்பது எனக்குத் தெரியாது. 20 நிமிட இடைவெளியில் பல கட்டுரைகளை உருவாக்கியவர், பேச்சுப்பக்கங்களைக் கவனிக்காதது குழப்பமானது. தடை என்பது தண்டனையாக் கொள்ளாமல் நிதானிப்பதற்கும், விக்கியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவும் உதவும். TNSE என்ற தொடரில் பயனர் கணக்கு உருவாக்கிய பலர் (கிட்டத்தட்ட ஒரு வருடம்) இன்றும் அடிப்படை விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகளை உருவாக்காதது விக்கியின் தர அளவில் பின்னடைவு. ஒரு வருடமாக எந்தளவு வழிகாட்டல் கொடுக்கப்பட்டது அல்லது கொடுக்கப்படும் என்பது என்போன்றவர்களுக்குத் தெரியாது. --AntanO (பேச்சு) 03:13, 29 மே 2018 (UTC)
குறிப்பு 2
[தொகு]உருவாக்கும் கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை பார்த்து சரியாகவுள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். இதை விடுத்து கட்டுரைகளை மட்டுமே உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டாம். முன்பே பல அறிவிப்புகள் உங்களுக்கு பல பயனர்களாலும் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்புக்களை ஊதாசீனம் செய்வதால் மீண்டும் தடைக்க உள்ளாகலாம். --AntanO (பேச்சு) 05:20, 29 மே 2018 (UTC)
- @AntanO:, இன்று இவர் தொடங்கிய கட்டுரைகளில் என்ன சிக்கல் என்று குறிப்பிட முடியுமா? ஒரு பயனர் வந்து நான்கு கட்டுரைகள் எழுதுவதற்குள் தடை செய்து விடுவோம் என்று தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருப்பது சரியா? வருகிற பயனர்களை எல்லாம் இப்படி விரட்டியடித்தால் யார் தான் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது? --இரவி (பேச்சு) 06:03, 29 மே 2018 (UTC)
- கட்டுரையில் வார்ப்புரு இட்டுள்ளேன். இவர் வந்து ஒரு வருடமாகிறது. இது அச்சுறுத்தல் இல்லை, மாறாக அறிவிப்பு. என்னைக் கேள்வி கேட்கும் நீங்கள் ஏன் அவருக்கு தெளிவுபடுத்தக்கூடாது? --AntanO (பேச்சு) 06:12, 29 மே 2018 (UTC)
- 2005ல் நான்கு நாள் விக்கிப்பீடியாவில் தொகுத்த ஒருவர் இன்று மீண்டும் வந்தால் அவருக்கு 13 ஆண்டு அனுபவமா? ஈரேடு இரயில் நிலையம் கட்டுரையில் மட்டுமே வார்ப்புரு காண்கிறேன். அதில் ஒரு பயனரைத் தடை செய்யும் அளவு என்ன இருக்கிறது? பயனருக்கு இடும் ஒவ்வொரு செய்திலும் தடை செய்யப்படுவீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பது அச்சுறுத்தலே. இது பயனர்களை மிகவும் ஊக்கம் குன்றச் செய்யும் செயல். அருள்கூர்ந்து தவிருங்கள். --இரவி (பேச்சு) 06:16, 29 மே 2018 (UTC)
- ஒரு வருடமாக இப்பயனருக்கு அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கட்டுரையைத் திருத்தியுள்ளார்கள். இதுபோதாதா? உங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் இவர் ஏன் கொடுக்கப்படும் செய்திகளுக்கு மறுமொழி அளிப்பதில்லை? தன்னிச்சையா செயற்பட அனுமதிக்கலாமா? --AntanO (பேச்சு) 06:24, 29 மே 2018 (UTC)
கட்டுரைப் போட்டிக்கு வருக!
[தொகு]வணக்கம், தமிழ் விக்கிப்பீடியா இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்க முன்வந்தமைக்கு நன்றி.
சில முக்கியமான குறிப்புகள்:
(இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. சில குறிப்புகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்)
- சென்ற ஆண்டு பயிற்சி நோக்கில், அனைத்து தலைப்புகளிலும் உங்கள் பங்களிப்புகளை வரவேற்றோம். ஆனால், தற்போது நடைபெறும் போட்டியில் சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
- இங்குள்ள தலைப்புகளின் கீழ் மட்டும் கட்டுரை எழுதுங்கள். தலைப்புகளைத் தேடுவது சிரமமாக இருந்தால், இங்குள்ள 10,000 தலைப்புகள் பட்டியலில் உள்ள சிகப்பு இணைப்புகளை மட்டும் காணுங்கள். இவற்றில் உங்களுக்கு விருப்பமான, நீங்கள் நன்கு அறிந்த துறை குறித்த கட்டுரைகளை உருவாக்கலாம். தமிழக வரலாறு குறித்து இங்குள்ள தலைப்புகளிலும் எழுதலாம்.
- கட்டுரை ஒவ்வொன்றும் குறைந்தது 9000 பைட்டுகள் அளவும், 300 சொற்கள் அளவும் இருக்க வேண்டும். போட்டி முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே, நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் மேலே குறிப்பிட்ட அளவில் 4 அல்லது 5 கட்டுரைகளை முழுமையாக எழுதினாலே உதவியாக இருக்கும்.
- கட்டுரை எழுதி முடித்த உடன், மறக்காமல் இந்தக் கருவியில் உங்கள் கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். அப்போது தான் நீங்கள் போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் கட்டுரைகளை அங்கு வைத்து தான் மதிப்பிட இயலும்.
- வேறு ஏதேனும் ஐயம் இருந்தால் என் பேச்சுப் பக்கத்திலோ ஆசிரியர்களுக்கான வாட்சாப்பு குழுவிலோ கேளுங்கள்.
- உங்கள் நண்பர்கள், மற்ற ஆசிரியர்களையும் போட்டியில் பங்கேற்க வேண்டுங்கள்.
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 11:20, 30 மே 2018 (UTC)
ஒருங்குறி
[தொகு]வணக்கம், கட்டுரைகளை ஒருங்குறியில் எழுதுங்கள். 2017 ஆம் ஆண்டில் இருந்து ஏராளமான கட்டுரைகளைப் பதிவிட்டுள்ளீர்கள். எவையும் ஒருங்குறியில் இல்லை. நீங்களும் கட்டுரைகளைத் திருத்துவதாகவும் காணோம். கட்டுரை எண்ணிக்கை ஒன்றை மனதில் கொண்டே கட்டுரைகளைப் பதிவிடுகிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. உங்கள கட்டுரையை நீங்களே திருத்த வேண்டும். ஓரிரு கட்டுரையை மற்றவர்கள் திருத்தலாம். அவ்வாறு திருத்தியவற்றைக் கவனித்து நீங்கள் மேற்கொண்டு எழுதும் கட்டுரைகளைத் த்கிருத்த முயலுங்கள். கட்டுரை ஒன்றை எழுதிப் பதிவேற்றிய பின்னர், அதனை மீண்டும் கவனித்து நீங்கள் விட்ட பிழைகளைத் திருத்துங்கள். எவ்வாறு கட்டுரைகள் எழுதுவதென்று உங்களுக்குப் பயிற்சி அளித்தவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அல்லது வேறு எவரிடமாவது கேட்டு தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags (பேச்சு) 10:22, 1 சூன் 2018 (UTC)
Try the new version of Content Translation
[தொகு]Hi TNSE SIVA VLR,
I’m Pau Giner, a Designer and Product Manager working with the Language team of the Wikimedia Foundation. We are working on some improvements to Content Translation that may be of your interest since you have been a prolific translator during the recent months.
Currently the Language team is working on a new version of Content Translation that will provide a more solid editing experience. This is expected to solve many of the common issues that translators experience when creating a translation. Inserting and editing complex content such as references will be much easy, reliable and producing cleaner wikitext as a result.
The new version is a major refactoring and architectural update of Content Translation, so we want to expose it to editors in a gradual way but starting at an early stage. Given your experience with the current version of the tool, we think you are an ideal candidate to try the new version and give us feedback. If you are interested you can follow these steps:
- Access the new version of the tool. You can access the new version anytime at the usual location of the tool by adding a version=2 parameter to the URL. So you can follow this link to start a new translation: https://ta.wikipedia.org/wiki/Special:ContentTranslation?version=2
- Translate an article. Try to create a new article as you would normally do in Content Translation.
- Provide feedback. Based on your experience translating with the new version (and your previous experiences with the former version) you can provide feedback in this talk page. Provide feedback mentioning what worked well, what didn’t work so well, and whether you noticed anything important to be missing to support your translation workflow. If you are familiar with Phabricator (our bug tracking system), you can report CX2 related issues by creating a ticket using this link.
Your feedback will be very useful to identify common issues to work on for the upcoming months.
Thanks for using Content Translation.
--Pginer-WMF (பேச்சு) 09:55, 11 சூன் 2018 (UTC)
குறிப்பு
[தொகு]- கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
- சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
- பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
- 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் நீக்கப்படும். கட்டுரைகள் {{விக்கியாக்கம்}}, {{Cleanup}} என்பவற்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை கருத்திற்கொள்ளுங்கள். கட்டுரைகளின் எண்ணிக்கையைவிட, தரமே இங்கு முக்கியம்.
- உரிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படல் வேண்டும். ஆங்கில ஒலிபெயர்ப்பைக் கொண்ட கட்டுரைகள் தரமுயத்தலுக்கு உள்ளாக வேண்டியவையாகும். காண்க: விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு, விக்கிப்பீடியா:நடைக் கையேடு
- மிகவும் எளிமையான தமிழ் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம். மேலும், மொழிமுதல் எழுத்துக்கள் என்பதற்கேற்ப, குறைந்தது மெய்யெழுத்துக்களை முதலில் கொண்டு சொற்கள் அமைப்பதைத் தவிர்க்கலாம்.
--AntanO (பேச்சு) 11:32, 13 சூன் 2018 (UTC)
June 2018
[தொகு]Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. நந்தகுமார் (பேச்சு) 09:01, 18 சூன் 2018 (UTC)
- @Nan: இவர் அனைத்துக் கட்டுரைகளையும் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தே மொழிபெயர்த்து வருவதால், எது பொருத்தமற்ற பக்கம் என்பதைச் சுட்ட வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:06, 18 சூன் 2018 (UTC)
- @Ravidreams: இவர் பல கட்டுரைகளையும் "3 வரிக்கு குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்" என அறிவித்தும் புதுப்புதுக் கட்டுரைகளை ஒரு வரி, இரு வரிகள் என உருவாக்கிக் கொண்டே உள்ளார். கட்டுரைகளை மேம்படுத்தாமல் மீண்டும், மீண்டும் புதுப்புதுக் கட்டுரைகளை உருவாக்குவதாலும், கட்டுரைகளை ஒருங்குறியில் எழுதாததாலும் இத்தகுக் கட்டுரைகள் பொருத்தமற்றவை எனக் கூறியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 11:11, 18 சூன் 2018 (UTC)
- @Nan: விளக்கத்துக்கு நன்றி. ஒரு எடுத்துக்காட்டுக்கு, அவர் உருவாக்கிய இக்கட்டுரையைக் கண்டேன். இக்கட்டுரைக்கு ஒரே தொகுப்பே உள்ளது. அதுவும் ஒருங்குறியிலேயே உள்ளது. குறியாக்கம் தொடர்பாக வேறு கட்டுரைகளில் ஏதேனும் சிக்கல் உண்டா? -- இரவி (பேச்சு) 13:43, 18 சூன் 2018 (UTC)
- @Ravidreams: இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு, இங்கு,...............................என பட்டியல் நீள்கிறது.--நந்தகுமார் (பேச்சு) 14:35, 18 சூன் 2018 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
[தொகு]பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.