விக்கிப்பீடியா:மணல்தொட்டி
![]() | மணல்தொட்டிப் பக்கத்திற்கு வருக! இந்தப் பக்கத்தில் நீங்கள் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்ளலாம். தொகுப்பதற்கு இங்கு சொடுக்கவும். அல்லது மேலே உள்ள தொகு எனும் தத்தலைச் சொடுக்கவும். உங்களுக்கு வேண்டியதைத் தட்டச்சிவிட்டு பக்கத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
தமிழில் தட்டச்சு செய்ய என்ற குறுக்குவிசையைப் பயன்படுத்தவும் அல்லது அதுகுறித்து இங்கு படிக்கவும். இதிலுள்ள உள்ளடக்கம் நிலையானதன்று! இப்பக்கம் தொடர்ந்து நீக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கப்படும். மேலும், நிறைய புதிய பயனர்கள் இதில் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்வர். நீங்கள் ஏதுமற்ற புதிய மணல்தொட்டியில் பயிற்சி செய்ய விரும்பினால் இங்கு சொடுக்கவும். தயவுசெய்து பதிப்புரிமை கொண்ட, அருவருக்கத்தக்க, அவதூறு கொண்ட உள்ளடக்கங்களை மணல்தொட்டிகளில் இட வேண்டாம்! பயனர் இதனைத் தொகுக்கலாம். ஆயினும், இப்பக்கம் தொடர்ச்சியாக துப்புரவு செய்யப்படும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். மணல் தொட்டியைச் சுத்தம் செய்ய இங்கே சொடுக்குக. நீங்கள் ஒரு விக்கிப்பீடியா பயனராகப் பதிவு செய்திருந்தால், உங்களுக்கென தனியே ஒரு மணல்தொட்டியை இங்கு சொடுக்கிப் பெறலாம். வருங்காலத் தேவைகளுக்காக வேண்டி {{என் மணல்தொட்டி}} என்பதை உங்கள் பயனர் பக்கத்தில் இட்டுக்கொள்ளலாம். மேலதிக தகவலுக்கு விக்கிப்பீடியாவிற்கு அறிமுகம், தொகுத்தல் பயிற்சி, தமிழ்த் தட்டச்சு |
இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஜெர்மனியில் யூத எதிர்ப்புக் கொள்கை என்ற சித்தாந்தத்துடன் இட்லர் தலைமையிலான நாஜி கட்சி ஆட்சிக்கு வந்தது. . நாஜி ஜெர்மனியின் ஆரிய இனக் கோட்பாட்டின்படி, 1933 மற்றும் 1939ஆம் ஆண்டிற்கும் இடையிலான காலகட்டத்தில் யூத எதிர்ப்புக் கொள்கையின் முக்கிய நோக்கம், ஜெர்மன் சமூகத்திலிருந்து.ஜெர்மனி யூதர்களை தனிமைப்படுத்தவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற யூத எதிர்ப்பு சட்டங்கள் சட்டங்கள் உதவியது. 1933 மற்றும் 1938 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,50,000 யூதர்கள் நாஜி ஜெர்மனியை விட்டு வெளியேறினர் இது மொத்த யூத மக்கள்தொகையில் தோராயமாக 30% ஆகும்.. யூதர்கள் ஜெர்மனியிலிருந்து சட்டப்பூர்வமாக வேறு நாடுகளுக்கு வெளியேற, ஜெர்மன் கடவுச் சீட்டு மற்றும் விசா இரண்டையும் வைத்திருக்க வேண்டியிருந்தது. மிகச் சில நாடுகளே ஜெர்மன்-யூத அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியது. மேலும் கிறிஸ்டல்நாக்ட் படுகொலைக்குப் பிறகு , யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாகிவிட்டது. [1][2]
யூத எதிர்ப்புக் கொள்கையின் காலகட்டங்கள்
[தொகு]யூத எதிர்ப்புக் கொள்கை (1933–1939) மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டது • முதல் காலகட்டமான 1933-1934களில் யூதர்களுக்கு எதிரான புறக்கணிப்புகளையும், யூதர்களை அரசாங்க வேலைகளில் இருந்து நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. • இரண்டாவது காலகட்டமான, 1935ஆம் ஆண்டில் இயற்றிய நியூரம்பெர்க் சட்டத்தின்படி. யூதர்களின் ஜெர்மானிய குடியுரிமை பறிக்கப்பட்டது. . • 1937–1939 வரையிலான மூன்றாவது காலகட்டத்தில், யூத எதிர்ப்பு வன்முறை அதிகரித்து. யூத சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் யூத வணிக நிறுவன உரிமைகளை தடை செய்தல் ஆகியவற்றின் காலமாகும். இந்தக் காலகட்டத்தில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா யூதர்களை படுகொலை செய்தல் ஆகும்.[3]
ஆண்டு வாரியாக யூத எதிர்ப்புக் கொள்கை
[தொகு]- 1933:
• "ஆரியர்கள் அல்லாத" யூதர்கள் அனைவரும் அரசாங்கப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த விதிமுறை பொதுப் பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் போன்றோருக்குப் பொருந்தும் - எந்த வகையான அரசாங்கப் பதவிகளையும் வகித்த அனைத்து யூதர்களுக்கும் பொருந்தும். • யூதர்களுக்குச் சொந்தமான அனைத்து வணிகங்களையும் பொதுப் புறக்கணிப்பு செய்யும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. • ரீச் கலாச்சார சபையில் உறுப்பினர் சேர்க்கை தடைசெய்யப்பட்டது[4].இதனால் யூதர்கள் வானொலி, திரையரங்குகளில் வேலை செய்யவோ அல்லது கண்காட்சிகளில் ஓவியங்கள் அல்லது சிற்பங்களை விற்கவோ முடியாது. • யூதர்கள் மற்றும் நாஜி எதிர்ப்பாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டது. யூதர்கள் நிலம் சொந்தமாக வைத்திருப்பது தடை செய்யப்பட்டது. • யூத வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் தங்கள் பணிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். யூத மருத்துவர்கள் "ஆரிய" நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இருந்து தடை செய்யப்பட்டனர்.. • யூதர்கள் மாடு, செம்மறி ஆடு, ஆடு, அடாக்ஸ், மான், காட்டெருமை, ஐபெக்ஸ்.போன்ற கோஷர் இறைச்சியை தயாரிக்க தடை விதிக்கப்பட்டது.
- 1935:
• யூதர்கள் இனி ஜெர்மனியின் குடிமக்களாக இருக்க முடியாது என்று அறிவித்த நியூரம்பெர்க் சட்டங்களை. நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. • யூதர்களுக்கும் "ஆரிய" இரத்தத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையிலான திருமணம் மற்றும் நெருங்கிய உறவுகள் குற்றச் செயல்களாக அறிவிக்கப்பட்டது. • 45 வயதுக்குட்பட்ட ஜெர்மன் பெண்கள் யூதர்களால் பணியமர்த்தப்படுவது தடைசெய்யப்பட்டது. • யூதர்கள் ரீச்சின் கொடியை அசைக்கவோ அல்லது கொடியின் வண்ணங்களைக் காட்டவோ தடைசெய்யப்பட்டனர்.
- 1936:
• பெர்லினில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட வெளிநாட்டு பார்வையாளர்களின் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக, யூதர்களுக்கு எதிரான யூத எதிர்ப்பு பிரச்சாரங்களையும், பிற நடவடிக்கைகளையும், இட்லர் தற்காலிகமாக தளர்த்தினார்.
- 1937:
• "ஆரியமயமாக்கல்", ஜெர்மனியில் யூத வணிகங்கள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்தது.
- 1938:
• யூதராக இருப்பது வேலையிலிருந்து நீக்கப்படுவதற்கு ஒரு காரணம் என்று ஜெர்மனி உச்ச நீதிமன்றம் அறிவித்தது. • யூதர்களுக்கு எதிரான நியூரம்பெர்க் சட்டங்கள். ஆஸ்திரியாவுக்கும் நீட்டிக்கப்பட்டது. • அனைத்து யூதர்களும் தங்கள் அடையாள ஆவணங்களில் "இஸ்ரேல்" மற்றும் "சாரா" என்ற பெயர்களைச் சேர்க்க வேண்டியிருந்தது, மேலும் [[கடவுச் சீட்டு|களில் யூதா (யூதர்) என்பதற்கு சிவப்பு எழுத்தான J குறிக்கப்பட்டது.
• யூதர்கள் இனி நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ, தொலைபேசிகளை வைத்திருக்கவோ, ஓட்டுநர் உரிமங்கள், பதிவு வாகனங்கள் போன்றவற்றை வைத்திருக்கவோ முடியாது. • கிறிஸ்டல்நாக்ட் படுகொலை (உடைந்த கண்ணாடி இரவு): போது தோராயமாக 1,400 யூத ஜெப ஆலயங்கள் எரிக்கப்பட்டது, யூதர்களுக்குச் சொந்தமான 7,000 கடைகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டது. • 30,000 யூதர்கள், அவர்களில் பெரும்பாலோர் யூத சமூகங்களின் தலைவர்கள், வதை முகாம்களுக்கு[5] அனுப்பப்பட்டனர். • மிகக்குறைவான யூதக் குழந்தைகளே ஜெர்மன் பள்ளிகளில் இருந்தனர். • டிசம்பர் 31, 1938க்குள் அனைத்து யூத வணிக நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டது. • யூதர்கள் ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது.
1933 மற்றும் 1938 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,50,000 யூதர்கள் நாஜி ஜெர்மனியை விட்டு வெளியேறினர் இது மொத்த யூத மக்கள்தொகையில் தோராயமாக 30% ஆகும்.. யூதர்கள் ஜெர்மனியிலிருந்து சட்டப்பூர்வமாக வேறு நாடுகளுக்கு வெளியேற, ஜெர்மன் கடவுச் சீட்டு மற்றும் விசா இரண்டையும் வைத்திருக்க வேண்டியிருந்தது. மிகச் சில நாடுகளே ஜெர்மன்-யூத அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியது. மேலும் கிறிஸ்டல்நாக்ட் படுகொலைக்குப் பிறகு , யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாகிவிட்டது.
இதனையும் காண்க
[தொகு]- அவுஷ்விட்ஸ் வதை முகாம் (மே 1940 – சனவரி 1945)
மேற்கோள்கள்
[தொகு]
கோவிந்தம் என்பது புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரத முறையாகும். திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை குல தெய்வமாகக் கொண்ட சில சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் ஆண்கள் புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று காலையில் குளித்து, நெற்றியில் திருமண் அணிந்து அக்கம்பக்கது வீடுகளில் கோவிந்தா, கோவிந்தா என்று அழைத்தாறு அரிசி யாகம் கேட்பர். பின் அவ்வரிசியைக் காய்கறிகளுடன் சமைத்து மதியம் வேளையில், பெருமாளுக்கு நெய்வேத்தியம் காட்டுவிட்டு, தெருவில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு விருந்து வைப்பர். அன்னத்தை உண்பதற்கு முன் அனைவரும் இரண்டு முறை கோவிந்தா! கோவிந்தா!! என்று அழைத்த பின்னரே உணவை உண்பர். பிறகு மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவர்.
கோவிந்தம் நடைமுறை சௌராட்டிரர் மக்களிடையே பிரபலமாக உள்ளது. மேலும் உ. வே. சாமிநாதையர் தனது என் சரித்திரம்[1][2] எனும் சுயசரிதை நூலில், அவரது குடும்பத்தினர் புராட்டாசி மாதத்தில் கோவிந்தம் எனும் விரதம் கடைப்பிடித்தனர் என்று கூறியுள்ளார்.