உட்ஸ் அறிக்கை
1854 ஆம் ஆண்டில், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த சர் சார்லசு வுட், இந்தியாவிற்குள் ஆங்கில மொழிப் பயன்பாட்டிற்கு ஒரு பெரிய மாற்றத்தை பரிந்துரைத்து அன்றைய இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபுவிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். தொடக்கப் பள்ளிகளில் வட்டார மொழிகளும், உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மற்றும் நாட்டு மொழியும், கல்லூரிகளில் ஆங்கிலமும் கல்வி ஊடகமாக இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த அறிக்கை வுட்சு அனுப்புகை (Wood's dispatch) என அழைக்கப்படுகிறது.[1]
இந்தியாவில் ஆங்கில மொழிக் கற்றல் மற்றும் பெண் கல்வி பரவுவதில் வூடின் கடிதம் முக்கிய பங்கு வகித்தது. நிறுவனத்தின் நிர்வாகத்தில் பணியாளர்களாகப் பயன்படுத்த இந்திய மக்களிடையே ஆங்கிலக் கல்வியைத் தொடக்குவது மிகவும் சாதகமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. தொழிற்கல்வி மற்றும் பெண்கள் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரித்தானியப் பேரரசில் இந்தக் காலகட்டம், பிரித்தானிய அரசாங்க நிர்வாகம் இந்தியாவில் சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த இறுதிக் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.[2][3]
பாிந்துரைகள்
[தொகு]- ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு கல்வித் துறையை அமைக்க வேண்டும்.
- லண்டன் பல்கலைக்கழக மாதிரியில், பம்பாய், கல்கத்தா, சென்னை போன்ற பெரிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு அரசு பள்ளி திறக்கப்படும்.
- இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு உதவி வழங்கப்பட வேண்டும்.
- இந்தியத் தாய்மார்களுக்கு அவர்களின் தாய் மொழியில் பயிற்சியளிக்கப்பட வேண்டும்.
- துவக்கக்கல்வி மட்டத்திலிருந்து பல்கலைக்கழக மட்டம்வரை முறையான கல்வி முறையில் வழங்கப்பட்டவேண்டும்.
- அரசு எப்போதும் பெண்கள் கல்வியை ஆதரிக்க வேண்டும்.
மரபுரிமை
[தொகு]வூட் அளித்தபடி, ஒவ்வொரு மாகாணத்திலும் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டன, கல்கத்தா பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், 1882 இல் பஞ்சாபின் பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவில் மேற்கத்திய கல்வி முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது "மக்னா கார்டா" என்று அறியப்பட்டது. மேலும் வணிகத்திற்கான கல்வியும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wood's despatch of 1854
- ↑ Mia Carter, Barbara Harlow (2003). Archives on Empire Volume I, From East India Company to Suez Canal. Duke university Press. p. 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780822385042.
- ↑ ARSU, Malik (2021). Haryana GK. Team ARSU. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9798503514063.