1வது வட மாகாண சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 253: வரிசை 253:


===மேலதிக உறுப்பினர்கள்===
===மேலதிக உறுப்பினர்கள்===
தேர்தலில் ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு [[தேசியப் பட்டியல்|மேலதிக]] 2 இடங்கள் கிடைத்தன. இந்த இரண்டு இடங்கஈல் ஒன்று ஒரு [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]] பிரதிநிதிக்கும், மற்றையது பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் ஒருவருக்கு அளிப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130929_tna_bonus_seat_woman.shtml பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்:கூட்டமைப்பு முடிவு], பிபிசி, செப்டம்பர் 29, 2013</ref>
தேர்தலில் ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு [[தேசியப் பட்டியல்|மேலதிக]] 2 இடங்கள் கிடைத்தன. இந்த இரண்டு இடங்ளில் ஒன்று ஒரு [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]] பிரதிநிதிக்கும், மற்றையது பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் ஒருவருக்கு அளிப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130929_tna_bonus_seat_woman.shtml பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்:கூட்டமைப்பு முடிவு], பிபிசி, செப்டம்பர் 29, 2013</ref>
{|class="wikitable sortable" style="text-align:center; font-size:100%"
{|class="wikitable sortable" style="text-align:center; font-size:100%"
|-style="height: 50px;"
|-style="height: 50px;"

09:40, 15 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

1வது வட மாகாண சபை
தலைவர்கள்
தலைவர்
(தவிசாளர்)
சி. வி. கே. சிவஞானம்,
ததேகூ (2013-)
பிரதித் தலைவர்அந்தனி ஜெயநாதன்,
ததேகூ (2013-)
முதலமைச்சர்க. வி. விக்னேஸ்வரன்,
ததேகூ (2013-)
எதிர்க்கட்சித் தலைவர்அறிவிக்கப்படவில்லை,
ஐமசுகூ
முக்கிய நாட்கள்
நியமனப் பத்திரம் தாக்கல்1 ஆகத்து 2013
தேர்தல்21 செப்டம்பர் 2013
இடம்{{{MeetingPlace}}}
அமர்வுகள்
: –
np.gov.lk

1வது வட மாகாண சபை (1st Northern Provincial Council) என்பது 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 2013 மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய இலங்கையின் வட மாகாண சபையின் அமர்வுகளைப் பற்றியது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மாகாணசபை ஒன்றின் ஆட்சிக் காலம் அதன் முதலாவது அமர்வு இடம்பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டு காலம் ஆகும்.

தேர்தல்

1வது வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்டம்பர் 2013 இல் நடைபெற்றது. பொதுவாக இலங்கைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து நிருவாக மாவட்டங்களும் யாழ்ப்பாணம், வன்னி என இரண்டு தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை முதற்தடவையாக வட மாகாணத்தின் ஐந்து நிருவாக மாவட்டங்களும் ஐந்து தேர்தல் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன. தேசிய மட்டத்தில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இலங்கைத் தமிழர்களை முக்கியமாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைப்பில் தேர்தலில் நின்றது. மொத்தமுள்ள 36 இடங்களில் ததேகூ 28 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[1] ஐமசுகூ 7 இடங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஒரு இடத்தையும் கைப்பற்றின.[1] ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன.

முடிவுகள்

கூட்டணி வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 353,595 78.48% 30
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[2][3] 82,838 18.38% 7
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[3] 6,761 1.50% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 3,062 0.68% 0
  சுயேட்சைக் குழுக்கள் 1,904 0.42% 0
  சனநாயக ஐக்கிய கூட்டமைப்பு 826 0.18% 0
  ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 300 0.07% 0
இலங்கை மக்கள் கட்சி 292 0.06% 0
  மக்கள் விடுதலை முன்னணி 288 0.06% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 188 0.04% 0
சனநாயகக் கட்சி 170 0.04% 0
சோசலிச சமத்துவக் கட்சி 101 0.02% 0
ஜன செத்த பெரமுன 90 0.02% 0
நமது தேசிய முன்னணி 87 0.02% 0
இலங்கை தொழிற் கட்சி 32 0.01% 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 15 0.00% 0
தேசிய ஐக்கிய அமைப்பு 14 0.00% 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 8 0.00% 0
முசுலிம் விடுதலை முன்னணி 3 0.00% 0
மொத்தம் 450,574 100.00% 38
நிராகரிக்கப்பட்டவை 35,239
மொத்த வாக்குகள் 485,813
பதிவு செய்த வாக்காளர்கள் 719,477
வாக்குவீதம் 67.52%

அரசு/அமைச்சர்கள்

1வது வட மாகாண சபையின் அமைச்சர்கள், அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறு:

சபையின் தவிசாளர் - சி. வீ. கே. சிவஞானம்; (இ.த.அ.கட்சி-யாழ்)

சபையின் பிரதி தவிசாளர் - ம. அந்தோனி ஜெயநாதன் (இ.த.அ.கட்சி-முல்லைத்தீவு)

அமைச்சரவை

வட மாகாண சபையின் அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட ஆகக்கூடியது ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். வட மாகாண சபைக்கு 2013 இல் நடைபெற்ற தேர்தல் வரையில் அமைச்சரவை இருக்கவில்லை.

முதலாவது வட மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் 2013 செப்டம்பர் 23 இல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] 1வது அமைச்சரவைக்கு 2013 அக்டோபர் 10 ஆம் நாள் நான்கு அமைச்சர்கள் முதலமைச்சரினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

  • வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் - பொ. ஜங்கரநேசன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்-யாழ்.)
  • கல்வி, கலாச்சார, அமைச்சர் - தி. குருகுலராஜா (இ.த.அ.கட்சி-கிளிநொச்சி)
  • சுகாதார அமைச்சர் - மரு. பி. சத்தியலிங்கம் (இ.த.அ.கட்சி-வவுனியா)
  • மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் - டெனீஸ்வரன் (ரெலோ-மன்னார்)

உறுப்பினர்கள்

யாழ்ப்பாண மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

வாக்குகள்
உறுப்பினராகத்
தெரிவு

வரை
கட்சி
கூட்டணி
குறிப்புகள்
சி. வி. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் 1,32,255 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ முதலமைச்சர்
அனந்தி சசிதரன் யாழ்ப்பாணம் 87,870 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் 39,715 21 செப்டெம்பர் 2013 - புளொட் ததேகூ
இம்மானுவேல் ஆனல்ட் யாழ்ப்பாணம் 26,888 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
சி. வி. கே. சிவஞானம் யாழ்ப்பாணம் 26,747 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ 1வது வட மாகாண சபையின் தலைவர் (தவிசாளர்)
பாலச்சந்திரன் கஜதீபன் யாழ்ப்பாணம் 23,669 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
எம். கே. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் 22,660 21 செப்டெம்பர் 2013 - ரெலோ ததேகூ
பொ. ஐங்கரநேசன் யாழ்ப்பாணம் 22,268 21 செப்டெம்பர் 2013 - ஈபிஆர்எல்எஃப் ததேகூ வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்
சந்திரலிங்கம் சுகிர்தன் யாழ்ப்பாணம் 20,541 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
கேசவன் சயந்தன் யாழ்ப்பாணம் 20,179 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
விந்தன் கனகரத்தினம் யாழ்ப்பாணம் 16,463 21 செப்டெம்பர் 2013 - டெலோ ததேகூ
அரியகுட்டி பரஞ்சோதி யாழ்ப்பாணம் 16,359 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
கந்தையா சர்வேஸ்வரன் யாழ்ப்பாணம் 14,761 21 செப்டெம்பர் 2013 - ஈபிஆர்எல்எஃப் ததேகூ
வேலுப்பிள்ளை சிவயோகன் யாழ்ப்பாணம் 13,479 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
கந்தையா கமலேந்திரன் யாழ்ப்பாணம் 13,632 21 செப்டெம்பர் 2013 - ஈபிடிபி ஐமசுகூ
அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணம் 10,031 21 செப்டெம்பர் 2013 - சுதந்திரக் கட்சி ஐமசுகூ

கிளிநொச்சி மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

வாக்குகள்
உறுப்பினராகத்
தெரிவு

வரை
கட்சி
கூட்டணி
குறிப்புகள்
பசுபதி அரியரத்தினம் கிளிநொச்சி 27,264 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
தம்பிராஜா குருகுலராஜா கிளிநொச்சி 26,427 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சர்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை கிளிநொச்சி 26,132 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
வை. தவநாதன் கிளிநொச்சி 3,753 21 செப்டெம்பர் 2013 - ஈபிடிபி ஐமசுகூ

முல்லைத்தீவு மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

வாக்குகள்
உறுப்பினராகத்
தெரிவு

வரை
கட்சி
கூட்டணி
குறிப்புகள்
மரியாம்பிள்ளை அந்தனி ஜெயநாதன் முல்லைத்தீவு 9,309 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ 1வது வட மாகாண சபையின் பிரதித் தலைவர் (பிரதித் தவிசாளர்)
சிவப்பிரகாசம் சிவமோகன் முல்லைத்தீவு 9,296 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
துரைராஜா ரவிகரன் முல்லைத்தீவு 8,868 21 செப்டெம்பர் 2013 - ஈபிஆர்எல்எஃப் ததேகூ
கனகசுந்தரசுவாமி வீரவாகு முல்லைத்தீவு 8,702 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
அகமது லெப்பை யாசின் ஜவாகிர் முல்லைத்தீவு 1,726 21 செப்டெம்பர் 2013 - முஸ்லிம் காங்கிரசு ஐமசுகூ

வவுனியா மாவட்டம்

பெயர்
தேர்தல்
மாவட்டம்

வாக்குகள்
உறுப்பினராகத்
தெரிவு

வரை
கட்சி
கூட்டணி
குறிப்புகள்
பத்மநாதன் சத்தியலிங்கம் வவுனியா 19,656 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ சுகாதார அமைச்சர்
கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் வவுனியா 11,901 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
ம. தியாகராசா வவுனியா 11,681 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
இராமநாதர் இந்திரராசா வவுனியா 11,535 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
தர்மபால செனிவிரத்தினா வவுனியா 5,148 21 செப்டெம்பர் 2013 - சுதந்திரக் கட்சி ஐமசுகூ
ஏ. ஜெயதிலக்க வவுனியா 4,806 21 செப்டெம்பர் 2013 - சுதந்திரக் கட்சி ஐமசுகூ

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் விபரங்கள்:[5]

பெயர்
தேர்தல்
மாவட்டம்

வாக்குகள்
உறுப்பினராகத்
தெரிவு

வரை
கட்சி
கூட்டணி
குறிப்புகள்
பிரிமூஸ் சிராய்வா மன்னார் 12,927 21 செப்டெம்பர் 2013 - தமிழரசுக் கட்சி ததேகூ
டெனிசுவரன் பாலசுப்பிரமணியம் மன்னார் 12,827 21 செப்டெம்பர் 2013 - ரெலோ ததேகூ மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்
ஜி. குணசீலன் மன்னார் 12,260 21 செப்டெம்பர் 2013 - ரெலோ ததேகூ
றிப்கான் பதியுதீன் மன்னார் 11,130 21 செப்டெம்பர் 2013 - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐமசுகூ
கபிர் முகமது ரயீஸ் மன்னார் 3,165 21 செப்டெம்பர் 2013 - முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ்

மேலதிக உறுப்பினர்கள்

தேர்தலில் ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன. இந்த இரண்டு இடங்ளில் ஒன்று ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கும், மற்றையது பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் ஒருவருக்கு அளிப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.[6]

பெயர்
தேர்தல்
மாவட்டம்

வாக்குகள்
உறுப்பினராகத்
தெரிவு

வரை
கட்சி
கூட்டணி
குறிப்புகள்
அஸ்மின் அயூப் மன்னார் 1,009 21 செப்டெம்பர் 2013 - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு ததேகூ
மேரி கமலா குணசீலன் முல்லைத்தீவு 21 செப்டெம்பர் 2013 - தமிழர் விடுதலைக் கூட்டணி ததேகூ ஓராண்டு காலத்திற்கு உறுப்பினராக இருப்பார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Provincial Council Elections 2013 : Northern Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
  3. 3.0 3.1 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சி மன்னார் மாவட்டத்தில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தும் போட்டியிட்டது
  4. முதலமைச்சர் பதவிக்குரியவராக விக்னேஸ்வரன் தேர்வு, பிபிசி, செப்டம்பர் 23, 2013
  5. மன்னார் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம், அத தெரண, செப்டம்பர் 23, 2013
  6. பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்:கூட்டமைப்பு முடிவு, பிபிசி, செப்டம்பர் 29, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=1வது_வட_மாகாண_சபை&oldid=1518267" இலிருந்து மீள்விக்கப்பட்டது