உள்ளடக்கத்துக்குச் செல்

சி. வி. கே. சிவஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. வி. கே. சிவஞானம்
C. V. K. Sivagnanam
1வது வட மாகாண சபையின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2013
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில்அரசுப் பணியாளர்
இனம்இலங்கைத் தமிழர்

சி. வேலுப்பிள்ளை கந்தையா சிவஞானம் (C. Velupillai Kandaiah Sivagnanam) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்

[தொகு]

சிவஞானம் யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளராகப் பணியாற்றி இளைப்பாறிய பின்னர் 2004, மற்றும் 2010 நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் இரு தடவைகளும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[1][2]

சிவஞானம் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 26,747 விருப்பு வாக்குகள் பெற்று 1வது வட மாகாண சபை உறுப்பினரானார்.[3][4] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[5][6] அதே நாளில் இவர் 1வது வட மாகாண சபையின் தலைவராக (தவிசாளர்) முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
  2. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
  3. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14. 
  4. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  5. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  6. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._கே._சிவஞானம்&oldid=3553719" இலிருந்து மீள்விக்கப்பட்டது