கோழிக்கோடு தொடருந்து நிலையம்
கோழிக்கோடு കോഴിക്കോട് | |||||||
---|---|---|---|---|---|---|---|
விரைவு வண்டி மற்றும் பயணிகள் வண்டி நிலையம் | |||||||
பொது தகவல்கள் | |||||||
அமைவிடம் | கேரளத்தின், கோழிக்கோடு, அப்சரா திரையரங்கம் அருகில் உள்ள தொடருந்து சாலை இந்தியா | ||||||
ஆள்கூறுகள் | 11°14′47″N 75°46′50″E / 11.2465°N 75.7805°E | ||||||
ஏற்றம் | 11 m (36 அடி) | ||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||||
தடங்கள் | Shoranur–Mangalore section | ||||||
நடைமேடை | 4(1,2,3,4) | ||||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகை தானுந்து நிறுத்தம், தானி நிறுத்தம் | ||||||
கட்டமைப்பு | |||||||
கட்டமைப்பு வகை | இயல்பானது (தரை தள நிலையம்) | ||||||
தரிப்பிடம் | ஆம் | ||||||
மற்ற தகவல்கள் | |||||||
நிலை | பயன்பாட்டில் | ||||||
நிலையக் குறியீடு | CLT | ||||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
கோட்டம்(கள்) | பாலக்காடு | ||||||
வரலாறு | |||||||
திறக்கப்பட்டது | 2 சனவரி 1888 | ||||||
மின்சாரமயம் | ஆம் | ||||||
பயணிகள் | |||||||
பயணிகள் 2016–17 | ஒரு நாளுக்கு 28,463[1] | ||||||
|
கோழிக்கோடு தொடருந்து நிலையம் (Kozhikode railway station) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் முதன்மையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். 2018–19 நிதியாண்டில் ₹200 கோடி (2023 இல் ₹249 கோடி அல்லது 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வருவாய் ஈட்டியது. இது, பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை மிகப்பெரியது. இந்த நிலையத்தில் நான்கு நடைமேடைகள், இரண்டு முனையங்கள், ஆறு தடங்கள் உள்ளன. முதல் நடைமேடையில் 24 பெட்டிகளும், இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் 20 பெட்டிகளும், நான்காவது நடைமேடையானது 24 பெட்டிகள் கொண்ட தொடருந்துகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது. தினசரி 25,000 பயணிகள் வருகை தரக்கூடியதாக இந்த நிலையம் உள்ளது. பலக்காடு இரயில்வே கோட்டத்தில் உள்ள ஒரே ஏ1-கிரேடு நிலையமாக இது விளங்குகிறது. இது கேரளத்தில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில் இருந்து புனே, திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை, புது தில்லி, மும்பை, ஐதராபாத்து, கோயம்புத்தூர், விசாகப்பட்டினம், கொல்கத்தா, மங்களுர், ஜம்மு தாவி, கோவா, எர்ணாகுளம் மற்றும் பல முக்கிய நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கின்றன. ஃபெரோக், ( குறியீடு: FK ), கல்லாய் கோழிக்கோடு தெற்கு (குறியீடு: KUL), வேல்லேயில் (குறியீடு: VLL), வெஸ்ட் ஹில் (குறியீடு: WH) ஆகியவை நகரத்தில் உள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் ஆகும்.
பயணப் பொதி நுணுகிநோக்கிகள், கண்காணிப்பு ஒளிப்படமிகள், வாகன நுணுகிநோக்கிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு 2012 இல் நிலையத்தில் நிறுவப்பட்டது. [2] நிலையத்தின் 125வது ஆண்டு விழா சனவரி 2013 அன்று கொண்டாடப்பட்டது. [3]
வரலாறு
[தொகு]கோழிக்கோடு செல்லும் இருப்புப் பாதை 1888 சனவரி, 2 அன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை ரயில்வேயின் மேற்கு முனையமாக இந்த நிலையம் இருந்தது. மலபாரில் முதல் பாதை சாலியம் மற்றும் திரூர் இடையே அமைக்கப்பட்டது, இது ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது. கோழிக்கோடில் புதிய வழித்தடம் அமைக்கபட்டதும், நிர்வாக மையமாக இதன் வளர்ச்சியுடன், சாலியம் நிலையத்தின் முக்கியத்துவம் குறைய காரணமாயிற்று. இதனால் அதன் இருப்புப் பாதை பின்னர் கைவிடப்பட்டது. [4]
1888 ஆம் ஆண்டு இரயில்வே ஊழியர்களின் சமூக வாழ்க்கைக்கான இடமாக விளங்கும் வகையில், தொடருந்து நிலையத்தை ஒட்டி ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே இன்ஸ்டிடியூட் என்ற பெயரிலான மனமகிழ் மன்றம் மற்றும் நீராவி என்ஜின்களில் தண்ணீரை பம்ப் செய்ய இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வார்ப்பிரும்பினாலான இயந்திர நீரேற்றி உட்பட பல பழங்கால சாதனங்கள் இந்த நிலையத்தில் உள்ளன. நிலையத்தின் 125வது ஆண்டு விழா சனவரி 2, 2013 அன்று கொண்டாடப்பட்டது. 2018 சனவரியில் "இந்தியாவின் தூய்மையான தொடருந்து நிலையம்" என்ற மதிப்பைப் பெற்றது.
உள்கட்டமைப்பு
[தொகு]இந்த நிலையத்தில் நான்கு நடைமேடைகள் மற்றும் இரண்டு முனையங்கள் உள்ளன. முதல் நடைமேடையில் 24 பெட்டிகளும், மூன்றாவது நடைமேடையில் 20 பெட்டிகள் கொண்ட தொடருந்துகளையும் நான்காவது நடைமேடையில் 24 பெட்டிகளை நிறுத்தும் திறன் கொண்டது. [5] தினசரி 25,000 பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் பாலக்காடு இரயில்வே கோட்டத்தில் ஏ-1 தரம் தரம் பெற்ற ஒரே நிலையமாக இது விளங்குகிறது. [6]
கோழிக்கோட்டில் இருந்து புறப்படும் வண்டிகள்
[தொகு]# | வண்டி எண். | பாதை | போகுமிடம் | தொலைவு |
---|---|---|---|---|
1 | 12075/12076 | திருவனந்தபுரம் - கோழிக்கோடு ஜனசதாப்தி விரைவுவண்டி | திருவனந்தபுரம் சென்ட்ரல் | 400 கி.மீ |
2 | 06454 | கோழிக்கோடு-ஷோர்னூர் விரைவுவண்டி | ஷொறணூர் சந்திப்பு | 86 கி.மீ |
3 | 06496 | கோழிக்கோடு-ஷோர்னூர் விரைவுவண்டி [a] | ஷொறணூர் சந்திப்பு | 86 கி.மீ |
4 | 06481 | கோழிக்கோடு-கண்ணூர் எக்ஸ்பிரஸ் | கண்ணூர் தொடருந்து நிலையம் | 89 கி.மீ |
- ↑ In view of corridor block for facilitating maintenance and safety works in various divisions over Southern Railway train no.06496 stands cancelled
சேவைகள்
[தொகு]இந்த நிலையத்தில் இருந்து எர்ணாகுளம், திருவனந்தபுரம், சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை, புது தில்லி, மங்களூர், மும்பை, ஹைதராபாத், அகமதாபாது, கொல்கத்தா, சூரத்து , புனே, செய்ப்பூர், விசாகப்பட்டினம், ஜம்மு தாவி, கோவா போன்ற இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் தொடருந்துகளைக் கொண்ட கேரளத்தின் முக்கிய தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். ஃபெரோக், ( குறியீடு: FK ), கல்லாய் கோழிக்கோடு தெற்கு (குறியீடு: KUL), வேல்லேயில் (குறியீடு: VLL), வெஸ்ட் ஹில் (குறியீடு: WH) ஆகியவை நகரத்தில் உள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் ஆகும்.. [7] [8]
வசதிகள்
[தொகு]பயணப் பொதி நுணுகிநோக்கிகள், சிசிடிவிகள், வாகன நுணுகிநோக்கிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு 2012 இல் நிலையத்தில் நிறுவப்பட்டது. [9]
- முன்பதிவு மையம் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்
- பயணிகள் ஓய்வு அறைகள் (பயணிகள் தங்கும் இட வசதி)
- கணிணி மையம்
- சிப்பம் முன்பதிவு அலுவலகம்
- ரயில்வே அஞ்சல் சேவை (RMS) அலுவலகம்
- ரயில்வே பாதுகாப்பு படை - வட்ட அலுவலகம்
- ஐ.ஆர்.டி.சி. உணவகங்கள்
- தானியங்கி பணப்பொறிகள்
- முன்பணம் செலுத்தி பயணிக்கும் தானி வாகன மையங்கள் [10]
- முன் பணம் செலுதி வாகன நிறுதுமிடங்கள் [11]
- நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி அமைப்புகள் [12]
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான மின்சாரக் கார் வசதி
தானியங்கி பணப்பொறிகள்
[தொகு]தொடருந்து நிலையத்தில் பின்வரும் வங்கி பணப்பொறிகள் உள்ளன:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Categorisation of Stations – Palakkad Division" (PDF). Southern Railway Zone – Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
- ↑ "50 CCTVS at railway station". The Hindu. 25 November 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/50-CCTVs-at-railway-station/article15729676.ece.
- ↑ "Kozhikode rail station to celebrate anniversary". The Hindu. 11 October 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/kozhikode-rail-station-to-celebrate-anniversary/article12553065.ece.
- ↑ "A milestone". The Hindu. 19 October 2012. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/a-milestone/article4013251.ece.
- ↑ "Kozhikode station has 4 platforms and platform capacity". தி இந்து. 2005-11-28 இம் மூலத்தில் இருந்து 2007-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070821050617/http://www.hindu.com/2005/11/28/stories/2005112809360300.htm.
- ↑ "A case for better railway facilities in Kozhikode". The Hindu. 10 February 2012. http://www.thehindu.com/news/national/kerala/a-case-for-better-railway-facilities-in-kozhikode/article2879077.ece.
- ↑ "West Hill as Kozhikode North Station". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article2307577.ece.
- ↑ "Vellayil as Kozhikode North" இம் மூலத்தில் இருந்து 2008-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080719091946/http://www.hindu.com/2008/07/14/stories/2008071451510300.htm.
- ↑ "50 CCTVs at railway station". The Hindu. 25 November 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/50-cctvs-at-railway-station/article4132570.ece.
- ↑ "Prepaid auto service launched". தி இந்து. 1 Sep 2009 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100407051529/http://www.hindu.com/2009/09/01/stories/2009090152980300.htm.
- ↑ "Protest against high parking fee at railway station". தி இந்து. 24 January 2010 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411022421/http://www.hindu.com/2010/01/24/stories/2010012450400300.htm.
- ↑ "A new step in Kozhikode railway station's journey to world-class status". The Hindu. 4 October 2013. http://www.thehindu.com/news/cities/kozhikode/a-new-step-in-kozhikode-railway-stations-journey-to-worldclass-status/article5197948.ece.