உள்ளடக்கத்துக்குச் செல்

என் உயிரினும் மேலான

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் உயிரினும் மேலான
இயக்கம்கே. ஆர். ஜெயா
தயாரிப்புஎன். திருமுருகன்
வாசு எஸ். அசோக்குமார்
கதைகே. ஆர். ஜெயா
பாலகுமாரன் (உரையாடல்)
இசைதேவா
நடிப்புஅஜித் சந்தர்
இராதிகா மேனன்
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புபி. சி. மோகன்
கலையகம்என்.என்.டி. மூவி கிரியேசன்ஸ்
வெளியீடுஆகத்து 10, 2007 (2007-08-10)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் உயிரினும் மேலான (En Uyirinum Melana) என்பது 2007ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். கே. ஆர். ஜெயா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் அஜித் சந்தர், ராதிகா மேனன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ரஞ்சித், இரவிக்குமார், கருணாஸ், காகா இராதாகிருஷ்ணன், சாருஹாசன், பாத்திமா பாபு, கமலா காமேஷ் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்தார். படம் 2007 ஆகத்து 10 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

உயிரிலே கலந்தது (2000) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே. ஆர். ஜெயா என். என். டி. மூவி கிரியேஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட என் உயிரினும் மேலான படத்தின் வழியாக மீண்டும் இயக்குநராக வந்தார். இடையில் ஜூன் ஜூலை என்ற பெயர் கொண்ட வெளிவராத படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றினார்.[3] படத்தில் நாயகனாக சென்னையைச் சேர்ந்த புதுமுகமான பொறியாளர் அஜித் சந்தர் நடித்தார். மும்பையைச் சேர்ந்த ராதிகா மேனன் நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தந்தை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கான சண்டைக் காட்சிகளை கனல் கனல் கண்ணன் அமைத்து, ஒரு ரவுடியாக நடித்ததுமல்லாமல், ஒரு கானா பாடலையும் பாடினார். தேவா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் படத்தின் சூழ்நிலை சார்ந்தவையே என்றார் இயக்குநர். ஆர். செல்வா ஒளிப்பதிவு செய்ய, பி. சி. மோகனன் படத்தொகுப்பு செய்ய, கிரண் கலை இயக்குநராக பணியாற்றினார்.[4][5]

இசை

[தொகு]

பிரைப்பட பின்ண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா அமைத்தார். வாலி, சினேகன் முத்து விஜயன் ஆகியோர் ஏழு பாடல்களை எழுதியுள்ளனர்.[6][7]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மயிலாபூரு ராணி"  ரஞ்சித், கிரேஸ் கருணாஸ் 4:11
2. "பச்சைப் புடவை"  சாதனா சர்கம் 6:31
3. "ஏய் வாலிபப் பயலே"  அனுராதா ஸ்ரீராம் 5:43
4. "ஒரு நிமிடம் போரு"  எம். ஜி. ஸ்ரீகுமார், ஹரிணி 5:52
5. "வள்ளி வள்ளி காதல் வள்ளி (இருவர்)"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 5:34
6. "காக்க காக்க"  தேவா 4:47
7. "வள்ளி வள்ளி காதல் வள்ளி (தனியாக)"  சுஜாதா மோகன் 0:52
மொத்த நீளம்:
33:30

வரவேற்பு

[தொகு]

ஒரு விமர்சகர் படத்தை எதிர்மறையாக விமர்சித்தார், மேலும் அவர் படத்தின் மோசமான கதை, பலவீனமான திரைக்கதையை விமர்சித்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jointscene : Tamil Movie En Uyirinum Melaana". jointscene.com. Archived from the original on 1 February 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  2. "En Uyirinum Melaana (2007)". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  3. https://web.archive.org/web/20050306214553/http://www.dinakaran.com/cinema/english/gossip/2002/09-02-02.html
  4. "En Uyirinum Melana". chennaionline.com. Archived from the original on 27 June 2006. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  5. "Thank God its Friday". behindwoods.com. 25 October 2006. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  6. "En Uyirinum Melaana (2007) - Deva". mio.to. Archived from the original on 16 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "En Uyirinum Melaana Songs". mymazaa.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  8. "என் உயிரினும் மேலான" [En Uyirinum Melana] (in Tamil). koodal.com. Archived from the original on 2 February 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_உயிரினும்_மேலான&oldid=4162749" இலிருந்து மீள்விக்கப்பட்டது