உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் மக்கள் தொகையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{place}}}-இன் மக்கள் தொகையியல்
இலங்கையின் மக்கள் தொகை, 1961-2003 ((மக்கள் தொகை ஆயிரங்களில்)தகவல்:ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2005)
மக்கள் தொகை20,263,723 (2012 மதிப்பீடு)
அடர்த்தி323/கி.மி.2 (2012 மதிப்பீடு)
வளர்ச்சி வீதம்0.913% (2012 கணக்கீடு)
பிறப்பு வீதம்17.04 பிறப்புக்கள்/1,000 மக்கள் தொகை(2012 கணக்கீடு)
இறப்பு வீதம்5.96 இறப்புக்கள்/1,000 மக்கள் தொகை(சூலை 2012 கணக்கீடு)
ஆயுள் எதிர்பார்ப்பு75.94 வருடங்கள்(2012 கணக்கீடு)<nowiki>
 • ஆண்72.43 வருடங்கள்(2012 கணக்கீடு)
 • பெண்79.59 வருடங்கள்(2012 கணக்கீடு)
கருவள வீதம்2.17 பிள்ளைகள் பிறப்பு/பெண்கள் (2012 கணக்கீடு)
குழந்தை இறப்பு வீதம்9.47 இறப்புக்கள்/1,000 உயிருடன் பிறப்புக்கள்(2012 கணக்கீடு)
வயது அமைப்பு
0–14 ஆண்டுகள்24.9% (2012 கணக்கீடு)
15–64 ஆண்டுகள்67% (2012 கணக்கீடு)
65 மற்றும் அதற்கு மேல்8.1% (2012 கணக்கீடு)
பாலின விகிதம்
மொத்தம்0.96 ஆண்(கள்)/பெண்(கள்)(2011 கணக்கீடு)
பிறக்கும்போது1.04 ஆண்(கள்)/பெண்(கள்)(2011 கணக்கீடு)
15 க்குள்1.04 ஆண்(கள்)/பெண்(கள்)(2011 கணக்கீடு)
15–64 ஆண்டுகள்0.96 ஆண்(கள்)/பெண்(கள்)(2011 கணக்கீடு)
65 மற்றும் அதற்கு மேல்0.75 ஆண்(கள்)/பெண்(கள்)(2011 கணக்கீடு)
நாட்டினம்
நாட்டினம்பெயர்ச்சொல்: இலங்கையர்(கள்)
பெயரெச்சம்: இலங்கையர்
பெரும்பான்மை இனக்குழுசிங்களவர் (74.9%) (2012 மதிப்பீடு)
சிறுபான்மை இனக்குழுஇலங்கைத் தமிழர் (11.2%) (2012 மதிப்பீடு)
இலங்கைச் சோனகர் (9.2%) (2012 மதிப்பீடு)
மலையகத் தமிழர் (4.2%) (2012 மதிப்பீடு)
மொழி
அலுவல்சிங்களம், தமிழ்
பேசப்படும்ஆங்கிலம்

இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாசாரங்களையும் பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த போதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

மக்கள் தொகை

[தொகு]

இலங்கையின் மக்கள்தொகை 20 மில்லியன் ஆகும். இலங்கை ஒரு வளர்முக வரும் நாடாகயிருந்த போதும் அது வளர்ந்த நாடுகளை மிஞ்சும் அளவிற்கு அதன் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. மேலும் இது மிகவுயர்ந்த வாழ்க்கைச் சுட்டெண்ணை கொண்டுள்ளது.

இலங்கையின் ஆண்/பெண் பால் விகிதாசாரம் 0.98 என உள்ளது, இது தென்னாசியாவில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடும் பொது எதிர்மாறான தன்மையை காட்டுகின்றது.

தேசிய இனங்கள்

[தொகு]

இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 74.88% ஆக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய இனத்தவராக தமிழர் உள்ளார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 15.37% ஆன இவர்கள், இலங்கை தமிழர் மற்றும் இந்தியத் தமிழர் என இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கை தமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அரபிய வழிதோன்றல்கள் 9.23%), இலங்கை மலாயர் 0.2%, பறங்கியர் (ஐரோப்பிய வழிதோன்றல்கள் 0.18%), வேடர்கள்(காட்டு வாசிகள்) மற்றும் ஏனையோர் (0.14%) உள்ளனர்.

சிங்களவர் [%] இலங்கைத் தமிழர் [%] மலையகத் தமிழர் [%] முஸ்லிம் [%] பரங்கியர் [%]
இலங்கையின் முக்கிய தேசிய இனங்கள்.2001 கணிப்பீட்டின் படியானது தகவல் இல்லாதபோது[1] 1981கணிப்பீடு சாய்வெழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.[2]
இன அடிப்படையில் இலங்கையின் சனத்தொகை : 1871 - 2012[3][4][5]
ஆண்டு சிங்களவர் இலங்கைத் தமிழர்[6] இலங்கைச் சோனகர்[7] மலையகத் தமிழர்[6] இலங்கை மலாயர் பரங்கியர்/யூரேசியர் இந்தியச் சோனகர்[7] ஏனையோர் மொத்த
இல.
இல. % இல. % இல. % இல. % இல. % இல. % இல. % இல. %
1871 மதிப்பீடு 2,400,380
1881 மதிப்பீடு 1,846,600 66.91% 687,200 24.90% 184,500 6.69% 8,900 0.32% 17,900 0.65% 14,500 0.53% 2,759,700
1891 மதிப்பீடு 2,041,200 67.86% 723,900 24.07% 197,200 6.56% 10,100 0.34% 21,200 0.70% 14,200 0.47% 3,007,800
1901 மதிப்பீடு 2,330,800 65.36% 951,700 26.69% 228,000 6.39% 11,900 0.33% 23,500 0.66% 20,000 0.56% 3,566,000
1911 மதிப்பீடு 2,715,500 66.13% 528,000 12.86% 233,900 5.70% 531,000 12.93% 13,000 0.32% 26,700 0.65% 32,700 0.80% 25,600 0.62% 4,106,400
1921 மதிப்பீடு 3,016,200 67.05% 517,300 11.50% 251,900 5.60% 602,700 13.40% 13,400 0.30% 29,400 0.65% 33,000 0.73% 34,600 0.77% 4,498,600
1931 கணக்கீடு 3,473,000 65.45% 598,900 11.29% 289,600 5.46% 818,500 15.43% 16,000 0.30% 32,300 0.61% 36,300 0.68% 41,800 0.79% 5,306,000
1946 மதிப்பீடு[8] 4,620,500 69.41% 733,700 11.02% 373,600 5.61% 780,600 11.73% 22,500 0.34% 41,900 0.63% 35,600 0.53% 48,900 0.73% 6,657,300
1953 மதிப்பீடு[9] 5,616,700 69.36% 884,700 10.93% 464,000 5.73% 974,100 12.03% 25,400 0.31% 46,000 0.57% 47,500 0.59% 39,500 0.49% 8,097,900
1963 மதிப்பீடு 7,512,900 71.00% 1,164,700 11.01% 626,800 5.92% 1,123,000 10.61% 33,400 0.32% 45,900 0.43% 55,400 0.52% 19,900 0.19% 10,582,000
1971 மதிப்பீடு 9,131,300 71.96% 1,424,000 11.22% 828,300 6.53% 1,174,900 9.26% 43,500 0.34% 45,400 0.36% 27,400 0.22% 15,500 0.12% 12,689,900
1981 மதிப்பீடு 10,979,400 73.95% 1,886,900 12.71% 1,046,900 7.05% 818,700 5.51% 47,000 0.32% 39,400 0.27% 28,400 0.19% 14,846,800
1989 கணக்கீடு 12,437,000 73.92% 2,124,000 12.62% 1,249,000 7.42% 873,000 5.19% 48,000 0.29% 42,000 0.25% 52,000 0.34% 16,825,000
2001 மதிப்பீடு[10]
2011 மதிப்பீடு[11] 15,173,820 74.88% 2,270,924 11.21% 1,869,820 9.23% 842,323 4.16% 40,189 0.20% 37,061 0.18% 29,586 0.14% 20,263,723

தேசிய சமயங்கள்

[தொகு]

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (70.19%), இந்து சமயம் (12.61%), இஸ்லாம் (9.71%) கிறிஸ்தவம் (7.45%) (கத்தோலிக்க திருச்சபை 6%, சீர்திருத்தத் திருச்சபையினர் 1%) ஆகவும் உள்ளது. சிங்களவர் பெரும்பாலாக தேரவாத பௌத்ததை பின்பற்றுவதுடன், தமிழர் பெரும்பாலாக இந்து சமயிகளாக உள்ளனர்.

பௌத்தர் [70%] இந்துக்கள் [15%] இசுலாமியர் [7.5%] கிறிஸ்தவர் [7.5%]
இலங்கையின் முக்கிய சமயத்தவர்களின் பரம்பல். இவை 2001 கணிப்பீட்டின் படியானது தகவல் இல்லாதபோது[1] 1981 கணிப்பீடு சாய்வெழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.[12]
சமய அடிப்படையில் இலங்கையில் சனத்தொகை - 1881 முதல் 2012 வரை[13][14]
ஆண்டு பௌத்தம் இந்து இசுலாம் கிறித்தவம் ஏனைய மொத்தம்
இல. % இல. % இல. % இல. % இல. % இல.
1881 மதிப்பீடு 1,698,100 61.53% 593,600 21.51% 197,800 7.17% 268,000 9.71% 2,300 0.08% 2,759,800
1891 மதிப்பீடு 1,877,000 62.40% 615,900 20.48% 212,000 7.05% 302,100 10.04% 800 0.03% 3,007,800
1901 மதிப்பீடு 2,141,400 60.06% 826,800 23.19% 246,100 6.90% 349,200 9.79% 2,500 0.07% 3,566,000
1911 மதிப்பீடு 2,474,200 60.25% 938,300 22.85% 283,600 6.91% 409,200 9.96% 1,100 0.03% 4,106,400
1921 மதிப்பீடு 2,769,800 61.57% 982,100 21.83% 302,500 6.72% 443,400 9.86% 800 0.02% 4,498,600
1931 கணக்கீடு 3,266,600 61.55% 1,166,900 21.99% 354,200 6.67% 518,100 9.76% 1,100 0.02% 5,306,900
1946 மதிப்பீடு 4,294,900 64.51% 1,320,400 19.83% 436,600 6.56% 603,200 9.06% 2,200 0.03% 6,657,300
1953 மதிப்பீடு 5,209,400 64.33% 1,610,500 19.89% 541,500 6.69% 724,400 8.95% 12,100 0.15% 8,097,900
1963 மதிப்பீடு 7,003,300 66.18% 1,958,400 18.51% 724,000 6.84% 884,900 8.36% 11,400 0.11% 10,582,000
1971 மதிப்பீடு 8,536,800 67.27% 2,238,600 17.64% 901,700 7.11% 1,004,300 7.91% 8,400 0.07% 12,689,800
1981 மதிப்பீடு 10,288,300 69.30% 2,297,800 15.48% 1,121,700 7.56% 1,130,600 7.62% 8,300 0.06% 14,846,700
2001 மதிப்பீடு[10]
2012 மதிப்பீடு 14,222,844 70.19% 2,554,606 12.61% 1,967,227 9.71% 1,509,606 7.45% 9,440 0.05% 20,263,723

தேசிய மொழிகள்

[தொகு]

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும், சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும், ஆங்கிலம் வணிகத்துறையிலும் பெரும்பாண்மையாக பயன்பாட்டிலுள்ளது. 1987மாம் ஆண்டில் கைசாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முலம் தமிழும், சிங்களமும் அரசு கரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அரசியல்யாப்பில் அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பரவலாக இலங்கையில் உபயோகத்திலுள்ள போதிலும், பறங்கியர் மட்டுமே இதை தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்.

சமூக கட்டமைப்பு

[தொகு]

சாதிய அமைப்பே இலங்கையின் சமூக கட்டமைப்பின் சமூக அதிகார படிநிலையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டபொதும் நாட்டின் அரசியலிலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

இலங்கையின் கருவளம்

[தொகு]

பொதுவாக கருவளம் என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளன. அந்த அடிப்படையில். Hazel R. Barath (1992) என்பவரின் '“Population Geography”' என்ற நூலில் “பொதுவாக கருவளம் என்றபதம் சகல உயிர்வாழ் இனங்களும் தம்மை ஒத்த உயிர்களை தாங்கி அவற்றை பிரசவிக்கின்ற திறமை. குறிப்பாக உயிருடன் நிகழ்கிகன்ற பிறப்புக்களின் உண்மைச் சம்பவம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே தோம்ஸன் மற்றும் லூயிஸ் என்ற அறிஞர்கள் “பொதுவாக ஒருதொகுதிப் பெண்களினது உண்மையான மீள் இனப்பெருக்க நிறைவேற்றத்தினைக் குறித்து நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கையின் கருவள நிலை

[தொகு]

வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளில் தெற்காசியாக் கருவளப் போக்கு சற்று வித்தியாசமானது அதிலும் இலங்கை சமூகக்குறிகாட்டிகள் பலவற்றில் விதிவிளக்குகளைக் கொண்டநாடாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக இலங்கையின் 2006 ஆம் ஆண்டு தரவுகளின் படி எழுத்தறிவு வீதம் 97% பருமட்டான பிறப்பு வீதம் 11% பருமட்டான இறப்பு வீதம் 6% இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1% எனவே இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளில் இருந்து விலகியதொரு போக்கை கொண்டு காணப்படுகின்றது எனலாம். அதேவேளை இலங்கையின் கருவளப்போக்கு ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சிப் போக்கை காட்டி நிற்கின்றது. குறிப்பாக 1950களின் பிற்பாடு இதனை சிறப்பாக அவதானிக்கலாம். 1963ஆம் ஆண்டில் பெண் ஒருவருக்கு 5 பிறப்புக்கள் காணப்பட்டது. (De Silva W 1991) மொத்தக் கருவளவீதம் 1993ஆம் ஆண்டு 2.3 ஆக வீழ்ச்சி கண்டது. (குடிவரையியல் சுகாதார அளவீடு 1993) இதனைத் தொடர்ந்து 1995-2000 காலப்பகுதியில் 1.96ஆக வீழ்ச்சி கண்டது. (குடிவரையியல் சுகாதார அளவீடு 2000) 2006 ஆம் ஆண்டிலும் ஒரு தாயிக்கு 2 பிள்ளை என்ற விகிதத்திலே காணப்பட்டுள்ளது.(World Population Chart Sheet 2006) இலங்கையின் குடிக்கணிப்பானது முதன்முதலில் 1871 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு வரை ஒரு சிலகாலப்பகுதிகள் தவிர ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடிக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இலங்கையில் முதன்முதலாக கருவள அளவீடானது 1975 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. (Srilanka Fertility Survery 1975). எனவே கடந்த 3 தசாப்தமாக கருவளம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால் இலங்கையின் கருவளப்போக்கின் வரலாற்றை அணுகக்கூடியதாக இருக்கின்றது.இந்தஅடிப்படையில் இலங்கையின் கருவள அளவீடுகளில் சிறந்த முறையான மொத்தக் கருவள வீதத்தை நோக்கின் 1953 ஆம் ஆண்டு தொடக்கம் 2005-2006 காலப்பகுதி வரையான கருவள வீழ்ச்சிப் போக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இலங்கையின் மொத்தக் கருவள வீதம்

[தொகு]

வருடம் மொத்தக் கருவள வீதம்

(1953 – 2005 to 2006)

வருடம் மொத்தக் கருவள
வீதம்
1953 5.32
1963 5.33
1965 5.19
1966-1977 4.72
1970 4.45
1971 4.16
1971-1975 3.89
1975 3.6
1978 3.55
1976-1980 3.5
1981 3.45
1982-1987 2.82
1988-1993 2.26
1995-2000 1.96
2005-2006 2

மூலம்: Department of census and statistics 2002 World population data sheet 2006


மேலும் இந்த அட்டவணை மொத்தக்கருவளப் போக்கில் படிப்படியான ஒரு வீழ்ச்சிப் போக்கை காட்டி வந்துள்ளது. இன்றைய நிலையில் ஒரு தாயிக்கு 2 பிள்ளை என்ற நிலையில் இலங்கையின் மொத்தக் கருவளம் காணப்படுகின்றது. இதே போனறு பருமட்டான முறையில் கருவள வீதத்தை எடுத்து நோக்கும் போது கருவளத்தின் போக்கு எவ்வாறு 1964-2006 வரையான காலப்பகுதியில் மாற்றம் பெற்றுள்ளது என்பதை நோக்கலாம். இதனடிப்படையில் பின்வரும் அட்டவணை இதனை தெளிவ படுத்துகின்றது.

பருமட்டான பிறப்பு வீதம் 1000 ற்கு

[தொகு]

(1964 – 2006)

வருடம் பருமட்டான பிறப்பு
வீதம் 1000 க்கு
1964 33.2
1969 27.5
1974 27.5
1979 28.9
1984 25.1
1989 21.6
1994 20.8
1999 17.3
2000 17.6
2001 18.9
2002 19.1
2003 18.9
2004 18.5
2005 19.7
2006 19.9

மூலம்: Registrar Generals Department 2007.


இதன்படி பருமட்டான பிறப்பு வீதமானது 1964 ஆம் ஆண்டிலிருந்து நோக்கும் போது படிப்படியான குறைவைக் காட்டினாலும் 2001 ஆம் ஆண்டிலிருந்து சற்று அதிகரித்த போக்கைக் காட்டி நிற்பதை அவதானிக்கலாம். குறிப்பாக மொத்தக் கருவளவீதம் பருமட்டான பிறப்பு வீதம் என்பனவற்றில் கருவளதிடீர் வீழ்ச்சியையம் சிலகாலம் தளம்பளில் உயர்வையம் காட்டி நிற்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கருவளத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஏற்பட்ட தாக்கம் ஆகும். இதன்படி 1955-1975 காலப்பகுதியில் கருவளவீழ்ச்சிக்கான காரணங்களில் தாமதமான திருமணங்கள் பிரதான காரணியாக குறிப்பிடத்தக்கது. (Wright 1968) றைற் என்பவர் குறிப்பிடுகையில் “பெண்களின் திருமண அந்தஸ்து அவர்களின் திருமண வயதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன இக்காலப்பகுதியில் கருவள வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில் 1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சியம் கருவள வீழ்ச்சிக்கு காரணமாக அமையலாயிற்று. இலங்கையில் 1953 ஆம் ஆண்டில் குடும்பத்திட்டச்சங்கம் ஆரம்பித்து 1965 ஆம் ஆண்டு வரையில் அதன் நிகழ்ச்சித்திட்டச் செயற்பாடுகள் பெரும்பாலும் நடைமுறையில் இடம் பெறவில்லை. 1965 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 3 கட்டங்களாக விரிவாக்கம் பெற்ற இத்திட்டம் 1968 ஆம் ஆண்டின் போது நாடு முழுவதையம் உள்ளடக்கியதாக வியாபித்தது.

முடிவரை

[தொகு]

இந்த அடிப்படையில் கருவளத்தைத் தீர்மானிப்பதில் பெண்களின் தொழில் அந்தஸ்து கல்விமட்டம் வருமானம் கலாசார மதநம்பிக்கை கணவர்மார் கல்வி தொழில் போன்ற காரணிகளும் கருவளத்தில் தாக்கம் செலுத்திAள்ளதை அவதானிக்கலாம். இது தொடர்பாக (Caldwell 1982) கோல்ட்வெல் என்பவர் “விருத்தி அடைந்த கல்வியால் கருவளமட்டம் குறைவடைந்துள்ளது கல்வி அறிவ திருமணவயதை பாதிக்கின்றது”. எனக்குறிப்பிட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இந்த அடிப்படையில் இலங்கையின் கருவளத்திலும் இவ்வாறான காரணிகளின் செல்வாக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனலாம். இலங்கை கருவளக் கட்டுப்பாடு தொடர்பான அழுத்தமான சட்டங்கள் இன்றுவரையில் கொண்டுவர வில்லை என்றாலும் கருவளத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. இந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில்கருவளம் ஒரு முறையான மெதுவான வளர்ச்சிப் போக்கை எடுத்துச் செல்ல வேண்டுமானால் அதற்கு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவது அவசியமாகும். இதன்படி ஒரு நாட்டின் குடித்தொகை வளங்களை ஒத்துக் காணப்படும் போது அந்நாட்டின் அபிவிருத்திக்கும் அது வழிவகுக்கும் என்பது சந்தேகமில்லை.

உசாத்துணைகள்

[தொகு]
  1. Indralal da silva, (2007), Population Study: Based On Srilanka, Deapani (pvt) ltd, Srilanka.
  2. Registrar Generals Department,(2007).
  3. World Population Data sheet, (2006).
  4. Census and Statistics Department,(2002).

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 2001 ஆம் மக்கள்தொகைக் கணிப்பீடு புலிகளின் கடடுப்பாட்டு பகுதிகளில்நடைபெறவில்லை. எனவே சில மாவட்டங்களிந் தகவால்கள் 1981 ஆண்டின் தகவல்களைக் கொண்டுள்ளன.
  2. இலஙகை புள்ளிவிபர திணைக்களம் பரணிடப்பட்டது 2017-07-13 at the வந்தவழி இயந்திரம், சமய அடிப்படையில் மாவட்டங்கள்
  3. "Population by ethnic group, census years" (PDF). Statistics Statistical Abstract 2010. Department of Census & Statistics, Sri Lanka.
  4. "Estimated mid year population by ethnic group, 1980 - 1989" (PDF). Statistics Statistical Abstract 2010. Department of Census & Statistics, Sri Lanka.
  5. "A2 : Population by ethnic group according to districts, 2012". Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2013-06-04.
  6. 6.0 6.1 Indian Tamils were only classified as a separate ethnic group from 1911 onwards. Prior to this they were included with Sri Lankan Tamils.
  7. 7.0 7.1 Indian Moors were only classified as a separate ethnic group from 1911 to 1971. Prior to 1911 they were included with Sri Lankan Moors. After 1971 they were included with Others.
  8. The 1941 Census was postponed due to World War II.
  9. The 1951 Census was postponed due to a shortage of paper at the time.
  10. 10.0 10.1 2001 Census was only carried out in 18 of the 25 districts. Inclusion of data would be misleading.
  11. The official census dates for the 2011 Census was 20 March 2012.
  12. இலஙகை புள்ளிவிபர திணைக்களம் பரணிடப்பட்டது 2010-02-15 at the வந்தவழி இயந்திரம்,சமய அடிப்படையில் மாவட்டங்கள்
  13. "Population by religion, census years" (PDF). Statistics Statistical Abstract 2010. Department of Census & Statistics, Sri Lanka.
  14. "A3 : Population by religion according to districts, 2012". Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-06-04.