இலங்கை மேமன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை மேமன்
மொத்த மக்கள்தொகை
7,000 - 10,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை       7,000 - 10,000[1][2]
மொழி(கள்)
மேமனி, சிங்களம், தமிழ்
சமயங்கள்
இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மேமன், இலங்கைச் சோனகர், இலங்கை மலாய்

இலங்கை மேமன்கள் (Memons in Sri Lanka) சிந்து (இன்றைய பாக்கித்தான்) பகுதியில் இருந்து 1870 இல் இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். சுன்னி முஸ்லிம்களான இவர்கள் இன்று இலங்கையின் சிறுபான்மையின முஸ்லிம் இனத்தவர்களில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் ஆவர். முதலாவது மேமன்கள் இந்தியாவின் குஜராத்தில் இருந்து வந்தார்கள். 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது.

வரலாறு[தொகு]

இலங்கைக்கு வந்த முதலாவது மேமன் இனத்தவர் அப்துல் ரகுமான் என்பவர். இவர் 1870 இல் புடவை வணிகராக இலங்கை வந்தார்.இவர் மானா சேத் எனவும் அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இவர் தனது வணிகத்தை ஆரம்பித்து தனது வணிகத்தைப் பெருக்க கொழும்பு புறக்கோட்டையில் குடியேறினார். நாள்போக்கில், பல மேமன் இனத்தவர்கள் குஜராத்தின் குட்டியானா நகரில் இருந்து குடியேறினார்கள். 1947 இல் இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இவர்கள் தமது குடும்பத்தினரையும் அழைத்து வந்து நிரந்தரமாகக் குடியேறினார்கள்[3].

இலங்கை மேமன்கள் சிலர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Memons of Sri Lanka - Men Memoirs Milestones. Asiff Hussein and Hameed Karim Bhoja. (2006). Published by The Memon Association of Sri Lanka. ISBN 955-1408-00-4

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மேமன்கள்&oldid=3601068" இலிருந்து மீள்விக்கப்பட்டது