உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை மலாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை மலாயர்
மெலாயு ஸ்ரீலங்கா
Sri Lankan Malays
மொத்த மக்கள்தொகை
40,189 (2012 கணக்கெடுப்பு)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மாகாணம்
மேல் மாகாணம் இலங்கை24,718
தென் மாகாணம் இலங்கை8,343
மத்திய மாகாணம் இலங்கை2,889
வடமேல் மாகாணம் இலங்கை1,675
மொழி(கள்)
சமயங்கள்
இசுலாம் (அனேகமானோர் சுன்னி)
தொடர்புள்ள இனக்குழுக்கள்

இலங்கை மலாயர் (Sri Lankan Malays) எனப்படுவோர் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இலங்கையின் மலாய்கள் ஆவர். 2011 ஆம் ஆண்டின் குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வினத்தவரின் தொகை (0.20%) 40,000 ஆகும். இலங்கையும் இந்தோனேசியாவும் டச்சு ஆதிக்கத்தில் இருந்த நேரத்தில் குடிபெயர்ந்தவர்களின் வம்சாவளியினராக உள்ளனர்.இரண்டாம் அலையாக இரு நாடுகளும் பிரித்தானியப் பேரரசின் கீழ் வந்தபோது 1796-1948 காலகட்டத்தில் மலேசியத் தீபகற்பத்திலிருந்து இடம் பெயர்ந்தனர்.

துவக்கத்தில் குடியேறிவர்களில் பெரும்பாலோர் ஒல்லாந்து ஆட்சியில் படைவீரர்களாக அனுப்பப் பட்டவர்களாகும். இவர்கள் பிரித்தானியர் காலத்திலும் குடியேற்ற நாட்டை நிருவகிக்க பயன்பட்டனர். மற்றவர்கள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள். அவர்களில் இந்தோனேசியத் தீவுகளின் பல்வேறு அரச மரபுகளைச் சேர்ந்த இளவரசர்கள் பலரும் இருந்தனர். இவர்களை இன்னமும் பிணைப்பது கலப்பு மலாயு மொழிதான். இந்த இனத்தவர்களில் சிறந்த படைவீரர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2018-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
  • Directory on Sri Lanka Malays - Edition 2 - ISBN NO : 978-955-8529-01-0 Published by Sri Lanka Malay Association - டிசம்பர் 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மலாயர்&oldid=4014993" இலிருந்து மீள்விக்கப்பட்டது