இலங்கை மலாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை மலாய்
நாடு(கள்)இலங்கை, மத்திய கிழக்கு, கனடா, ஆஸ்திரேலியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
46,000  (2006)
கிரியோல்
  • மலாய் அடிப்படை
    • இலங்கை மலாய்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3sci

இலங்கை கிரியோலே மலாய், இலங்கையில் பேசப்படும் மலாய் மொழியின் கொச்சை வழக்கு ஆகும். இலங்கையில் வாழும் ஐந்து வகையான மலாயர் இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் வாழும் இடத்திற்கேற்ப, தமிழ், சிங்களச் சொற்கள், இலக்கண விதிகளின் தாக்கம் இவர்களது மொழியில் இருப்பதைக் காணலாம். இலங்கை மலாய் என்பது பத்தாவி, சாவகம், மலாயு போன்ற மொழிகளின் கலப்பு ஆகும். தற்போது இவர்கள் இலங்கை மக்கள் தொகையில் 0.3 விழுக்காட்டினராக, எண்ணிக்கையளவில் 46,000 உள்ளனர். இம்மொழி பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே வாழ்கிறது. எப்பொழுதாவது இதை தமிழ், சிங்கள எழுத்துக்களில் எழுதியுள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் ஜாவி எழுத்துமுறையை ஒத்த குண்டால் எழுத்துமுறை உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. தற்கால இளைஞர்கள் சிங்களத்தையும் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்பதால்/பேசுவதால், இம்மொழி வீழ்ச்சியடைந்து வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மலாய்&oldid=1790170" இருந்து மீள்விக்கப்பட்டது