இடச்சு பறங்கியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டச்சு பரங்கியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இலங்கை, ஐக்கிய இராட்சியம், அவுத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா
மொழி(கள்)
ஆங்கிலம், சிங்களம், தமிழ்
சமயங்கள்
கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பறங்கியர், போர்த்துக்கேயர், போர்த்துக்கல் பரங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர்

இடச்சு பறங்கியர் எனப்படுவோர் இடச்சு, போர்த்துக்கேய, இலங்கையருடன் கலப்பினை ஏற்படுத்திக் கொண்ட ஓர் இலங்கையிலுள்ள இனக்குழுவினராவர். சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த இவர்கள் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் பேசுகின்றனர்.

தற்போதைய நிலை[தொகு]

1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பறங்கியர் (போர்த்துக்கல் மற்றும் இடச்சு) 40,000 பேராக மொத்த சனத்தொகையில் 0.3%மாக காணப்பட்டனர். அநேகமானோர் வேறு நாடுகளுக்கு (பிரித்தானியா, கனடா, அவுத்திரேலியா, நியூசிலாந்து) புலம் பெயர்ந்துவிட்டனர். உலகளவில் பறங்கியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100,000 ஆகும். இவர்களுடைய வாழ்க்கை முறை மேலைத்தேய மற்றும் இலங்கை கலாச்சாரத்தின் கலப்பாக காணப்படுகின்றது. இவர்கள் "இடச்சு பறங்கியர் ஒன்றியம்" மூலம் தங்கள் மரபுரிமையைச் செயற்படுத்துகிறார்கள்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Dutch Burgher Union". மூல முகவரியிலிருந்து 2017-08-01 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடச்சு_பறங்கியர்&oldid=3353822" இருந்து மீள்விக்கப்பட்டது