போர்த்துக்கல் பரங்கியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போர்த்துக்கல் பரங்கியர்
மொத்த மக்கள்தொகை

5,000

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை
 ஐக்கிய இராச்சியம்
 ஆஸ்திரேலியா
 நியூசிலாந்து
 கனடா
 அமெரிக்கா
மொழி(கள்)
தமிழ், ஆங்கிலம், சிங்களம், இலங்கை இந்தோ-போர்த்துக்கல் கிரியோல் மொழி
சமயங்கள்
கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
டச்சு பரங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கை காப்பிலி

போர்த்துக்கல் பரங்கியர் அல்லது போர்த்துக்கல் பறங்கியர்(Portuguese Burghers) எனப்படுவோர் இலங்கையிலுள்ள போர்த்துக்கேய - இலங்கை கலப்பு இனக்குழுவினராவர். கிறிஸ்தவ சமயத்தினரான இவர்களில் சிலர் கிரியோல் மொழியின் அடிப்படையில் அமைந்த இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழியினைப் பேசுகின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளான தமிழையும் சிங்களத்தையும் அதிகம் பேசுகின்றனர். இவையே இளம் சந்ததியினர் பலருக்கு தாய்மொழிகளாவும் உள்ளன. ஆங்கிலமும் இவர்களின் முக்கிய மற்றும் தாய் மொழியாகக் காணப்படுகிறது.

மூலம்[தொகு]

பெரும்பாலான போர்த்துக்கல் பரங்கியர், கலப்பு மக்கள் (Sri Lanka Mestiços) என பொருள்கொள்ளும் போர்த்துக்கேய வாரிசுகளான இவர்கள், 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைத் தமிழர்களை அல்லது சிங்களவர்களை திருமணம் செய்து அதன் மூலம் உருவான இனத்தினர் ஆவர்.

ஒல்லாந்துக்காரர் இலங்கை கரையோரங்களை கைப்பற்றியதும் போர்த்துக்கேய வாரிசுகள் கண்டி இராட்சியத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அக்காலத்தில் போர்த்துக்கேய, ஒல்லாந்து வாரிசுகளிடத்தில் கலப்புத் திருமணங்களும் நிகழ்ந்தன. ஒல்லாந்தர் காலத்தில் போர்த்துக்கேயர் தடைசெய்யப்பட்டிருந்தும், அச்சூழலில் பரவியிருந்த போர்த்துக்கல் மொழி பேசுவோரினால் ஒல்லாந்துக்காரரும் போர்த்துக்கல் மொழியினை பேசத் தொடங்கினர்.

18ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பி-ஆசிய கலப்பு சமுதாயம் (பரங்கியர் எனப்படும் போர்த்துக்கல், ஒல்லாந்து, தமிழ், சிங்கள கலப்பு இனத்தினர்) பெருகி போர்த்துக்கல், டச்சு மொழிகளை பேசலாயினர்.

கத்தோலிக்க சமயத்தை பின்பற்றி, இலங்கை இந்தோ-போர்த்துக்கல் கிரியோல் மொழி பேசிய போர்த்துக்கல் பரங்கியர் பெருமளவில் பிற இனத்தவரால் கலந்து காணப்பட்டனர். சமூக பொருளாதாரத்தில் பாதகத்தன்மை காணப்பட்டபோதிலும், தங்கள் போர்த்துக்கேய கலாச்சார அடையாளத்ததை பராமரித்து வந்தனர். மட்டக்களப்பில் பரங்கியர் சங்கம் இதை வலுப்படுத்தியது. 19ம் நூற்றாண்டு வரை போர்த்துக்கல் கிரியோல் மொழி டச்சு பரங்கியர் குடும்பங்களிடையே முறைசாராத மொழியாகப் பாவிக்கப்பட்டு வந்தது.

இன்றைய இலங்கையில் கிரியோல் மொழி பாவனை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுகின்றது. இம்மொழி பேசுவோர் கிழக்கு மாகாணத்தில் (மட்டக்களப்பு, திருகோணமலை) அதிகம் காணப்படுகின்றனர். வடமேல் மாகாணாத்தில் (புத்தளம்) இலங்கை காப்பிலி இனத்தினர் இம்மொழியையே பேசுகின்றனர்.

பரம்பரை[தொகு]

உடல் தோற்றம் அடிப்படையில் பரங்கியர் செம்மேனியோ அல்லது கருமேனியுடையோராய் காட்சியளிக்கின்றனர். அவர்களின் பரம்பரை வரலாறு அடிப்படையில் கருமை முதல் பொது நிறம் வரை காட்சியளிப்பர். இலங்கையிலுள்ள மற்ற இனத்தவருடன் ஒப்பிடுகையில் இவர்கள் முற்றாக மறுபட்ட முக அமைப்புக் கொண்டு ஐரோப்பிய முக சாயல் போன்று காணப்படுகின்றனர்.

தற்போதைய நிலை[தொகு]

1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் (போர்த்துக்கல் மற்றும் டச்சு) 40,000 பேராக மொத்த சனத்தொகையில் 0.3%மாக காணப்பட்டனர். அநேகமானோர் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்துவிட்டனர். 1656ஆம் ஆண்டின் பின் இவர்களுக்கும் போர்த்துக்கலுக்குமான தொடர் இல்லாமலுள்ளது.