இலங்கையின் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கையின் மொழிகள்
ஆட்சி மொழி(கள்) சிங்களம், தமிழ்
பிரதான அந்நிய மொழி(கள்) ஆங்கிலம்

இலங்கையின் மொழிகள் எனப்படுபவை இந்திய-ஆரிய, திராவிட, ஆத்திரனேசிய ஆகிய மொழிக் குடும்பங்களிலிருந்து இலங்கையில் பேசப்படும் சில மொழிகளாகும். இலங்கையில் சிங்களம், தமிழ் மொழிகள் என்பன அரசகரும மொழிகளாகும். இலங்கையில் பேசப்படும் மொழிகள் இந்தியா, மாலைதீவுகள், மலேசியா ஆகிய நாட்டு மொழிகளின் ஆழமான தாக்கத்தைக் கொண்டவை. அராபிய குடியேற்றக்காரர்கள் மற்றும் காலனித்துவ சக்திகளாக விளங்கிய போர்த்துக்கல், டச்சு, பிரித்தானியா ஆகியோரும் இலங்கையின் தற்போதைய மொழிகளின் வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளனர்.

சுதேச மொழிகள்[தொகு]

சிங்கள மொழி கிட்டத்தட்ட 74% உடைய 13 மில்லியன் சிங்கள மக்களால் பேசப்படுகின்றது. சிங்களம் புராதன பிராமி எழுத்துமுறையிலிருந்து உருவாகிய சிங்கள எழுத்துமுறையைக் கொண்டது. பேச்சு வழக்கான உரொடியா மொழி கீழ் வகுப்பு உரொடியா சமூகத்தினால் பேசப்படுகின்றது. வேடுவர் ஆரம்ப காலத்திலிருந்து உருவாகியிருக்கக்கூடிய திரிவடைந்த வேறுபட்ட மொழியைப் பேசுகின்றனர். தமிழ் மொழியை இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், இலங்கைச் சோனகர் ஆகியோர் பேசுகின்றனர். தமிழைப் பேசுவோர் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமாகும். 50,000 பேர் மலாய் மொழியினைப் பேசுகின்றனர்.

1981 கணக்கெடுப்பின்படி பிரதேச செயலாளர் மட்டத்திலான இலங்கையின் மொழி மற்றும் சமயக் குழுக்கள்.

மொழியில் வெளி நாட்டுத் தாக்கம்[தொகு]

ஆங்கிலம் சுமார் 10% சனத்தொகையினரால் சரளமாகப் பேச முடியும். இது வாணிகத் தொடர்பினால் பரவலாகப் பேசப்படுகின்றது. இது சுமார் 74,000 மக்களின் தாய் மொழியாகவுள்ளது. கிட்டத்தட்ட 3,400 போர்த்துக்கல் பரங்கியர் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழியினைப் பேசுகின்றனர். இலங்கைச் சோனகர் அரபு மொழியினை சமய தேவைகளுக்காககப் பாவிக்கின்றனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_மொழிகள்&oldid=1721784" இருந்து மீள்விக்கப்பட்டது