இந்திய வருவாய்ப் பணி
Appearance
| |
Service overview | |
---|---|
நிறுவிய ஆண்டு | 1919 (பிரித்தானிய அரச சுங்கச் சேவை) 1944 (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 1953 (இந்திய வருவாய் பணி) |
தலைமையிடம் | தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி |
நாடு | இந்தியா |
பணியாளர்கள் கல்லூரிகள் |
|
கட்டுப்படுத்தும் நிறுவனம் | இந்திய அரசின் வருவாய்த் துறை, நிதி அமைச்சகம் |
பொறுப்பான அமைச்சர் | நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் |
Legal personaliity | இந்திய அரசு குடிமைப் பணிகள் |
கடமைகள் |
|
அதிகாரிகள் & பணியாளர்கள் | 9,775 அதிகாரிகளும், பணியாளர்களும் (2018) 4192 (வருமான வரி அதிகாரிகள்)[1] and 5583 (சுங்கம் மற்றும் மறைமுக வரி அதிகாரிகள்)[2] |
தேர்வு முறை | இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு |
சங்கங்கள் |
|
இந்திய அளவில் தலைமை அதிகாரிகள் | |
சேர்மன், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) | புரமோத் சந்திர மோடி IRS-IT |
சேர்மன், மத்திய சுங்கம் & மறைமுக வரிகள் வாரியம் (CBIC) | எம். அஜித் குமார், IRS–C&IT[3] |
சேவைகளின் தலைமை | |
மத்திய அமைச்சரவை செயலாளர் | இராஜிவ் கௌபா, ஐ ஏ எஸ் |
இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) (சுருக்கமாக IRS), இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகளைப் போன்றே இப்பணிக்கான அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுகள் (குரூப் A) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.[4][5] தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் நேரடியாக இந்திய அரசின் வருமான வரித் துறை அல்லது மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துறையில் உதவி ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
பயிற்சி
[தொகு]- இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுகள் மூலம் இந்திய வருவாய்ப் பணிக்கு சேர்ந்த அதிகாரிகளுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி மையத்தில் மூன்று மாத அடிப்படை பயிற்சி வழகப்படுகிறது.[6]
- நேரடி வரியான, வருமான வரி அதிகாரிகளுக்கு, நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரிகள் கழகத்தில் 16 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது[7]
- மறைமுக வரிகளான சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் போதை பொருட்கள் தடுப்பு அதிகாரிகளுக்கு பரிதாபாத்தில் உள்ள தேசிய அகாதமியில் 16 மாத பயிற்சி வழங்கப்படுகிறது.[8]
இந்திய வருவாய்ப் பணியின் கடமைகள்
[தொகு]- நேரடி வரிகளான வருமான வரியை வசூலித்தல். வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை மீது நடவடிக்கை எடுத்தல், வழக்கு பதிவு செய்தல், சொத்துக்களை ஜப்தி செய்தல்.
- மறைமுக வரிகளான் சுங்க வரியை துறைமுகம், வானூர்தி நிலையம் மற்றும் எல்லைச் சாவடிகளிலிருந்து வசூலித்தல், கடத்தல் பொருட்களை கைப்பற்றல், சரக்கு மற்றும் சேவை வரிகள் வசூலித்தல் மற்றும் நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது மற்றும் கடத்தல்கார்களை பிடித்து வழக்கு பதிவு செய்தல்.
பதவி நிலைகள்
[தொகு]இந்திய வருவாய் பணி அதிகாரிகளின் பதவி நிலைகளும், ஊதியங்களும்:[9]
தர ஊதியம் | பதவி | அரசுச் செயலர்களுக்கு இணையான பதவி | |
---|---|---|---|
1 | இளநிலை ஊதிய விகிதம் | உதவி ஆணையாளர் (நேரடி நியமனம்) (சுங்கம் & மறைமுக வரிகள் வாரியம்) | உதவிச் செயலர் |
2 | முதுநிலை ஊதிய விகிதம் | துணை ஆணையர் (சுங்கம் & மறைமுக வரிகள் வாரியம்) | சார்புச் செயலர் |
3 | இளநிலை நிர்வாக அதிகாரி தரம் | இணை ஆணையர் (சுங்கம் & மறைமுக வரிகள்) | துணைச் செயலர் |
4 | தேர்வு நிலை அதிகாரி தரம் | கூடுதல் ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) | இயக்குநர் |
5 | முதுநிலை நிர்வாக அதிகாரி தரம் | ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) | இணைச் செயலர் |
6 | மேல்நிலை நிர்வாக அதிகாரி தரம் | முதன்மை ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) | கூடுதல் செயலர் |
7 | மேல்நிலை நிர்வாக அதிகாரி தரம் + | தலைமை ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) | சிறப்புச் செயலர் |
8 | அதியுயர் ஊதிய தரம் | முதன்மை தலைமை ஆணையாளர்/ சுங்கம் & மறைமுக வாரியத்தின் சேர்மன், தலைமை இயக்குநர் & உறுப்பினர்கள் | செயலர் |
தர ஊதியம் | பதவி நிலை | அரசுச் செயலர்களுக்கு இணையான பதவி[10] | |
---|---|---|---|
1 | இளநிலை ஊதிய தரத்தில் | உதவி ஆணையாளர் (நேரடி நியமனம்) (வருமான வரித் துறை) | அரசு உதவிச் செயலளர் |
2 | முதுநிலை ஊதியத் தரம் | துணை ஆணையாளர் (வருமான வரித் துறை) | சார்புச் செயலர் |
3 | இளநிலை நிர்வாகத் தரம் | இணை ஆணையாளர் (வருமான வரித் துறை) | துணைச் செயலர் |
4 | தேர்வு நிலை | கூடுதல் ஆணையாளர் (வருமான வரித் துறை) | இயக்குநர் |
5 | முதுநிலை நிர்வாக தரம் | ஆணையாளர்/கூடுதல் தலைமை இயக்குநர் (வருமான வரித் துறை) | இணைச் செயலர் |
6 | மேல்நிலை நிர்வாகத் தரம் | முதன்மை ஆணையாளர் (வருமான வரித் துறை) | கூடுதல் செயலர் |
7 | மேல்நிலை நிர்வாகத் தரம் + | தலைமை ஆணையாளர்/ தலைமை இயக்குநர் (வருமான வரித் துறை) | சிறப்புச் செயலாளர் |
8 | அதியுயர் ஊதிய தரம் | முதன்மை தலைமை ஆணையாளர்/ நேரடி வரிகள் வாரியத்தின் சேர்மன், தலைமை இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் நேரடி வரிகள் வாரியம் | அரசுச் செயலாளர் |
இதனையும் காண்க
[தொகு]- இந்திய ஆட்சிப் பணி
- இந்தியக் காவல் பணி
- இந்திய வெளியுறவுப் பணி
- இந்திய வனப் பணி
- இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information to be published under Section 4(1)(b) of the Right to Information Act, 2005., Central Board of Direct Taxes, 2014" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ "Allocation of Revised Cadre Strength, Central Board of Direct Taxes, 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ https://timesofindia.indiatimes.com/business/india-business/pranab-k-das-is-new-cbic-chairman/articleshow/67154234.cms
- ↑ https://www.legitquest.com/legal-guide/income-tax-act
- ↑ "Service Profile for the Indian Revenue Service" (PDF) (in ஆங்கிலம்). Department of Personnel and Training, Government of India. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
- ↑ "Batch Profile, 92nd Foundation Course" (PDF). LBSNAA. Lal Bahadur Shastri National Academy of Administration. Archived from the original (PDF) on 16 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
- ↑ "Overview of National Academy of Direct Taxes". NADT. National Academy of Direct Taxes. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
- ↑ "About US". NACIN. National Academy fo Indirect Taxes, Customs, and Narcotics. Archived from the original on 28 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Cabinet approves revamp of the income-tax department – Economic Times. Articles.economictimes.indiatimes.com (24 May 2013). Retrieved on 2013-07-19.
- ↑ "Profile of the Indian Revenue Service" (PDF). பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.