உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசியக் கிண்ணம் 1986

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1986 ஆசியக் கிண்ணம்
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்ரொபின் வட்டச் சுற்று
நடத்துனர்(கள்) இலங்கை
வாகையாளர் இலங்கை (1வது-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்3
மொத்த போட்டிகள்4
தொடர் நாயகன்அர்ஜுன றணதுங்க
அதிக ஓட்டங்கள்?
அதிக வீழ்த்தல்கள்?

1986 ஆசியக் கிண்ணம் (1986 Asia Cup) இரண்டாவது ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இத்தொடர் ஜோன் பிளேயர் கோல்ட் லீஃப் கேடயம் எனவும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் 1986 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை இடம்பெற்ற இத்தொடரில் வங்காள தேசம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கு பற்றின. இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி இந்திய அணி இத்தொடரில் பங்குபற்றவில்லை.

இத்தொடரின் போட்டிகள் ரொபின் வட்டச் சுற்று முறையில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றைய இரு அணிகளுடனும் மோதின. அதிக புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் வந்த இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதியது. இலங்கை அணி வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.

ஆரம்பப் போட்டிகள்

[தொகு]
பாக்கிஸ்தான்
197 அனைவரையும் இழந்து(45 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
116 அனைவரையும் இழந்து (33.5 பந்துப் பரிமாற்றங்கள்)
மொஷின் கான் 39 (46)
ரவி ரட்நாயக்க 3/32 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரெண்டன் குருப்பு 34 (56)
மன்சூர் எலாஹி 3/22 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 81 ஓட்டங்களால் வெற்றி
சரவணமுத்து மைதானம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: மொஷின் கான்

வங்காளதேசம்
94 அனைவரையும் இழந்து (35.3 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
98/3 (32.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷஹீதுர் ரகுமான் 37 (60)
வசீம் அக்ரம் 4/19 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
முதாசர் நாசர் 47 (97)
ஜகாங்கிர் ஷா 2/23 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி
டிரோன் பெர்னாண்டோ மைதானம், மொரட்டுவை, இலங்கை
நடுவர்கள்: ஹேர்பி ஃபெல்சிங்கர், விதானகமகே
ஆட்ட நாயகன்: வசீம் அக்ரம்

வங்காளதேசம்
131/8 (45 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
132/3 (31.3 பந்துப் பரிமாற்றங்கள்)
மிஞ்சாகுல் அபெடீன் 40 (63)
கௌஷிக் அமலீன் 2/15 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
அசங்கா குருசிங்க 44 (91)
கோலம் பரூக் 1/22 (8.3 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி
அஸ்கிரிய மைதானம், கண்டி, இலங்கை
நடுவர்கள்: மஹ்பூப் ஷா, டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: அசங்கா குருசிங்க

இறுதிப் போட்டி

[தொகு]
பாக்கிஸ்தான்
191/9 (45 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
195/5 (42.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜாவெட் மியன்டாட் 67 (100)
கௌஷிக் அமலீன் 4/46 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
அர்ஜுன றணதுங்க 57 (55)
அப்துல் காதிர் 3/32 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 5 விக்கெட்டுகளால் வெற்றி
சிங்கள விளையாட்டுக் கழக மைதானம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ஜாவெட் மியன்டாட்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_1986&oldid=3289952" இலிருந்து மீள்விக்கப்பட்டது