1684
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1684 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1684 MDCLXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1715 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2437 |
அர்மீனிய நாட்காட்டி | 1133 ԹՎ ՌՃԼԳ |
சீன நாட்காட்டி | 4380-4381 |
எபிரேய நாட்காட்டி | 5443-5444 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1739-1740 1606-1607 4785-4786 |
இரானிய நாட்காட்டி | 1062-1063 |
இசுலாமிய நாட்காட்டி | 1095 – 1096 |
சப்பானிய நாட்காட்டி | Tenna 4Jōkyō 1 (貞享元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1934 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4017 |
1684 (MDCLXXXIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் - பிரித்தானியாவில் டிசம்பரில் ஆரம்பமான கடுமையான பனிக்காலம் முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் இலண்டனில் தேம்சு ஆறு உறைந்திருந்தது. கடள் கிட்டத்தட்ட 2 மைல் தூரம் உறைந்திருந்தது. இவ்வாறான கடுமையான பனிக்காலம் வடக்கு ஐரோப்பா முழுவதும் தீவிரமாக இருந்தது.[1]
- சூலை 24 - மெக்சிகோ வளைகுடாவில் மிசிசிப்பி ஆற்றுப் பக்கமாக பிரெஞ்சுக் குடியேற்றத்தை ஆரம்பிக்கும் முகமாக ராபர்ட் டி லா சால் பிரான்சில் இருந்து மீண்டும் புறப்பட்டார்.
- அக்டோபர் 7 - சப்பானிய முதலமைச்சர் ஒட்டா மசத்தோசி படுகொலை செய்யப்பட்டார்.
- டிசம்பர் 10 - நியூட்டனின் கெப்லரின் இயக்க விதிகளுக்கான தீர்வுகள் எட்மண்டு ஏலியினால் அரச கழகத்தில் படிக்கப்பட்டது.
- டிசம்பர் - திபெத்து-லடாக்-முகலாயப் போர் (1679–84) முடிவுக்கு வந்தது.
- கான்டனில் தனது வணிக நிறுவனத்தை நிறுவ பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சீனாவின் அனுமதியைப் பெற்றது. ஐரோப்பாவில் தேநீர் ஒரு இறாத்தல் ஒரு சில்லிங்க்குக்கும் குறைவான விலையில் விற்கப்பட்டது.
- தென்னிந்தியாவில் இருந்த கிழக்கிந்தியக் கம்பனிப் பகுதிகள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.
பிறப்புகள்
[தொகு]- அக்டோபர் 10 - ஆண்ட்வான் வாட்டூ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1721)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stratton, J. M. (1969). Agricultural Records. John Baker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-212-97022-4.