-ஆபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

-ஆபாத் (-abad) என்பது மேற்கு, மத்திய, தெற்காசிய நகரங்கள் சிலவற்றின் பெயர்களின் பின்னொட்டாக வரும் பாரசீக மொழிச் சொல்லாகும். இதற்கு ābād (آباد), "உழுது பண்படுத்திய இடம்" (ஊர், நகரம், பிராந்தியம்) எனப் பொருள். ஊர்களின் பெயர்கள் பொதுவாக அவ்வூரின் நிறுவனர் அல்லது புரவலரின் பெயருடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் -ஆபாதுகள் என்ற பின்னொட்டுகள் முகலாயர் போன்ற முசுலிம் ஆட்சியாளர்களின் காலத்தில் அவர்களின் பெயர்கள் இடங்களுக்கு சூட்டப்பட்டன.

ஈரானில் இப்பின்னொட்டு மிகவும் பொதுவானது, இங்கு பல்லாயிரக்கணக்கான -ஆபாதுகள் உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை சிறிய ஊர்கள். மார்க்காசி மாகாணத்தில் மட்டும் 44 ஒசைனாபாத், 31 அலியாபாத், 23 ஹஜ்ஜியாபாத், 22 அசனாபாத் என ஒரே பெயரில் பல ஊர்கள் உள்ளன.[1]

முக்கியமான -ஆபாதுகள்[தொகு]

இடம் நாடு பெயருக்குக் காரணமான நபர்
ஆப்டாபாத்  பாக்கித்தான் யேம்சு அபொட் (இந்திய இராணுவ அதிகாரி)
ஆக்ராபாத்  வங்காளதேசம்
அகமதாபாத்  இந்தியா முசாபரீத் சுல்தான் அகமது சா
அசுகாபாத்  துருக்மெனிஸ்தான் பார்த்தியாவின் முதலாம் அர்சாசெசு
அவுரங்காபாத்  இந்தியா ஔரங்கசீப்
சபாராபாத்  அசர்பைஜான்
பைசலாபாத்  பாக்கித்தான் சவூதி அரேபியாவின் மன்னர் பைசல்
பைசாபாத்  இந்தியா அவதின் சியா நவாப்
பரீதாபாது  இந்தியா சூபி புனிதர் பரித்துதின் கஞ்ச்சகர்
பிரோசாபாத்  இந்தியா பிரோசு சா மன்சாப் தார்
பைசாபாத்  டிரினிடாட் மற்றும் டொபாகோ பைசாபாத், இந்தியா
காசியாபாத்  இந்தியா வாசிர் காசி-உத்-தீன்
வாலாஜாபாத்  இந்தியா, தமிழ்நாடு
அஃபிசாபாத்  பாக்கித்தான் முகலாயப் பேரரசர் அக்பரின் அஃபீசு
ஒசாங்காபாத்  இந்தியா ஒசாங் சா
ஐதராபாது  இந்தியா அலீ (ஐதர்)
ஐதராபாத்  பாக்கித்தான் அலீ (ஐதர்)
இசுலாமாபாத்  பாக்கித்தான் இசுலாம்
யாக்கோபாபாத்  பாக்கித்தான் கிழக்கிந்தியக் கம்பனி அதிகாரி யோன் யாக்கோபு
ஜலாலாபாத்  ஆப்கானித்தான் பீர் ஜலாலா
யேம்சபாத்  பாக்கித்தான் எச். ஈ. எம். யேம்சு
யேம்சபாத் (இன்றைய கோட் குலாம் முகம்மது)  பாக்கித்தான் ஜேம்சு ஓற்றம்
யேம்சபாத் (இன்றைய சமாரோ)  பாக்கித்தான்
கொரமாபாத்  ஈரான்
லெனினாபாத் (இன்றைய குஜாந்த்)  தஜிகிஸ்தான் விளாதிமிர் லெனின்
ஓர்புபாத்  அசர்பைஜான் துருக்கிய ஓர்து, "இராணுவம்"
ரோசுனாபாத்  வங்காளதேசம்
சபீராபாத்  அசர்பைஜான் மீர்சா அலக்பார் சபீர்
சர்தாராபாத் (இன்ரைய ஆர்மாவீர்)  ஆர்மீனியா
சிக்கந்தராபாத்  இந்தியா நிசாம் சிக்காந்தர் ஜா
இசுத்தாலீனாபாத் (இன்றைய துசான்பே)  தஜிகிஸ்தான் ஜோசப் ஸ்டாலின்
துருக்மெனாபாத்  துருக்மெனிஸ்தான் துருக்மென்கள்
வாகர்சபாத்  ஆர்மீனியா இளவரசர் வார்ட்ஜெசு மானூக்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=-ஆபாத்&oldid=2954028" இலிருந்து மீள்விக்கப்பட்டது