வேலம்மாள் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேலம்மாள்
வகைகுடும்பம்
வரலாற்று நாடகம்
மூலம்வேலு நாச்சியார்
எழுத்துஆனந்த்
இயக்கம்சரவணன்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள்42
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்தீபக் தர்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பானிஜய் ஆசியா
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்12 ஏப்ரல் 2021 (2021-04-12) –
10 சூன் 2021 (2021-06-10)
Chronology
முன்னர்காற்றின் மொழி

வேலம்மாள் என்பது 12 ஏப்ரல் 2021[1] ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான வரலாற்று நாடகத் தொடர் ஆகும்.[2] இது பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலையான இராணி வேலு நாச்சியார்[3] என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'சரவணன்' என்பவர் இயக்க பானிஜய் ஆசியா என்ற நிறுவனம் மூலம் 'தீபக் தர்' என்பவர் தயாரித்துள்ளார்.[4]

இந்த தொடரில் வேலம்மாள் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திகா என்பவர் நடிக்க, இவருடன் முக்தா பானு, விக்னேஷ், அம்பிகா, ரேஷ்மா பசுபுலேட்டி, சம்பத் ராம், ஓ. ஏ. கே. சுந்தர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கதை சுருக்கம்[தொகு]

இது 1730 முதல் 1796 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி வேலு நாச்சியார் பற்றியது. தனக்கு ஆண் குழந்தை பிறந்து, தனக்கு பிறகு நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும் சேதுபதி என்ற அரசனுக்கு வேலம்மாள் என்ற பெண் குழந்தை பிறக்கிறது. பெண் என்பதால் தன்னை ஒதுக்குவது பற்றி அதிக வருத்தத்தில் இருக்கும் வேலம்மாள், வருங்காலத்தில் எப்படி நாட்டை ஆளும் அளவுக்கு வளர்கிறாள் என்பது தான் கதை. .

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • கார்த்திகா[5] - வேலம்மாள்
  • முக்தா பானு[6] - உமையாள்
  • விக்னேஷ் - ரகுபதி
  • அம்பிகா - அம்மத்தா

துணைக் கதாபாத்திரங்கள்[தொகு]

நடிகர்களின் தேர்வு[தொகு]

என்ற தொடரில் நடித்த 'கார்த்திகா' என்பவர் வேலம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவரின் தாய் கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை 'முக்தா பானு'[9] என்பவர் உமையாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவரின் கணவன் கதாபாத்திரத்தில் 'விக்னேஷ்' என்பவர் சேதுபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல தமிழ் நடிகை அம்பிகா, ரேஷ்மா பசுபுலேட்டி, ரம்யா ராமகிருஷ்ணா, ஷாமிலி சுகுமார், சம்பத் ராம், ஓ. ஏ. கே. சுந்தர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

தயாரிப்பு[தொகு]

2020 ஆம் ஆண்டு ஒரு வரலாற்று தொடர் தயாரிப்பதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்தது. ஆனால் கொரோனா வைரசு காரணத்தால் அது தடை பெற்று 2020 இறுதி மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் முன்னோட்டம் 28 டிசம்பர் 2020 அன்று ஒளிபரப்பப்பட்டு இருந்தது.[10] பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில் ஒளிபரப்பாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தயாரிப்பு சார்ந்த பணிகள் முடியாத காரணத்தால் வேலம்மாள் தொடரை சில மாதம் ஒத்திவைக்கப்ட்டு 12 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு மாலை 6 மணிக்கு காற்றின் மொழி என்ற தொடருக்கு பதிலாக ஒளிபரப்பட்டது.[11]

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 1.8% 2.9%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி வேலம்மாள் அடுத்த நிகழ்ச்சி
காற்றின் மொழி காற்றுக்கென்ன வேலி