உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:2013 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்விக்கி10 சென்னை கூடல்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டுகள் கொண்டாட்டம் சென்னையில் செப்டம்பர் 30, 2013 அன்று நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டுக் கொண்டாட்டங்களின் படக்காட்சிகள்.

2013 தொடர் கட்டுரைப் போட்டி

[தொகு]

2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கமாக கருதப்பட்டது. போட்டி விதிகள், தலைப்புகள், முடிவுகள் போன்றவை ஒழுங்கே அறியப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 போட்டிப்பரிசாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 16 வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆண்டு முழுதான சிறப்பான ஊடகக் கவனிப்பு

[தொகு]
  • தமிழ் இந்தியா டுடே இதழில் "விரைந்து வளரும் தமிழ் விக்கிப்பீடியா" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை - ஆகத்து 28, 2013 - பக்கம் 1, பக்கம் 2.

புதிய நிருவாகிகள்

[தொகு]
  1. அன்டன்
  2. தென்காசி சுப்பிரமணியன்
  3. மதனாஹரன்
  4. செல்வசிவகுருநாதன்

புள்ளிவிவரங்கள்

[தொகு]

பிற நிறுவனங்களுடன் தமிழ் வளர்ச்சி

[தொகு]

தமிழ் ஆவண மாநாடு 2013

[தொகு]

'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' என்ற தலைப்பில் ஏப்பிரல் 27-28, 2013 திகதிகளில் கொழும்பு, இலங்கையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.மயூரநாதன், சஞ்சீவி சிவகுமார் உள்ளிட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பங்குபெற்றனர்.

தமிழ் வளர்ச்சிக் கழகம்

[தொகு]

தமிழ் வளர்ச்சிக்கழகம், தங்களுடைய கலைக்களஞ்சியங்களை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கொடையளித்தனர்.

தமிழ் இணையக் கல்விக்கழகம்

[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகம் தன்னுடைய அக்கங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்திக்கொள்ள முன்வந்ததோடு மட்டுமில்லாமல் ஒரு கணினி, தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பங்களிக்க தங்களுடைய அலுவலகத்தில் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

விக்கிமேனியா பங்கேற்புகள்

[தொகு]

2013-ம் ஆண்டு, ஆங்காங்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக செங்கை பொதுவன் அவரது துணைவியார் செங்கைச் செல்வி, பார்வதிஸ்ரீ ஆகியோர் பங்குபெற்றனர்.

தமிழ் விக்கிப்பீடியர்கள் சீன மொழி விக்கிப்பயனருடன்

விக்கிமேனியா குறித்து இந்து நாளிதழில் வெளியான செய்தி. பயனர்:HK Arunஆல் எடுக்கப்பட்ட படங்கள்.

தொடர் பட்டறைகள்

[தொகு]

இந்தியா

[தொகு]

இலங்கை

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர் நேர்காணல்கள் கொண்ட ஒளிப்பதிவுகள்

[தொகு]

தமிழ் விக்கிமீடியா காணொளி காட்சிகள்