வாழைச் சீவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழைச் சீவல்கள்
Banana chips
Dried banana chips
உலர்ந்த வாழை சீவல்
ஊட்ட மதிப்பீடு - 100g
உணவாற்றல்2170 கிசூ (520 கலோரி)
58.40g
சீனி35.34g
நார்ப்பொருள்7.7g
33.60g
நிறைவுற்றது28.970g
ஒற்றைநிறைவுறாதது1.950g
பல்நிறைவுறாதது0.630g
2.30g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(1%)
4 மைகி
உயிர்ச்சத்து ஏ83 அஅ
தயமின் (B1)
(7%)
0.085 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(1%)
0.017 மிகி
நியாசின் (B3)
(5%)
0.710 மிகி
உயிர்ச்சத்து பி6
(20%)
0.260 மிகி
இலைக்காடி (B9)
(4%)
14 மைகி
உயிர்ச்சத்து சி
(8%)
6.3 மிகி
உயிர்ச்சத்து ஈ
(2%)
0.24 மிகி
உயிர்ச்சத்து கே
(1%)
1.3 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(2%)
18 மிகி
இரும்பு
(10%)
1.25 மிகி
மக்னீசியம்
(21%)
76 மிகி
பாசுபரசு
(8%)
56 மிகி
பொட்டாசியம்
(11%)
536 மிகி
சோடியம்
(0%)
6 மிகி
துத்தநாகம்
(8%)
0.75 மிகி
நீர்4.3 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

வாழைக்காய் சிப்சு எனப் பரவலாக அறியப்படும் வாழைச் சீவல் (Banana chips அல்லது banana crisps) என்பது இந்தியாவின் கேரளா, மற்றும் இந்தோனேசியாவில் தோன்றிய நொறுக்குத் தீனீயாகும். பொதுவாக உலர்ந்த வாழைப்பழங்களின் மிருதுவான துண்டுகள் (மென்மையான, இனிமையான "இனிப்பு வாழைப்பழ" வகையின் மூசா இனத்தின் தாவரங்களின் பழங்கள்) சர்க்கரை அல்லது தேனுடன் கலக்கப்பட்டிருக்கும். இதனால் இவை இனிப்புச் சுவையுடன் கூடியது. பொதுவாக இந்த உலர்த்தப்பட்ட சீவல்கள் சூடான எண்ணெய்யில் வறுத்தெடுக்கப்பட்டு மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இவை உப்பு அல்லது காரமான சுவை கொண்டவை.[1] வாழை சீவல்கள் போலவே சிபிள் எனப்படும் மூசா பேரினத்திலிருந்து வணிக ரீதியாகத் தயாரிக்கப்படுகிறது. இவை பொதுவாக வாழை அல்லது "வாழைப்பழ சமையல்" எனப்படுகிறது

வறுத்தல்[தொகு]

சூடான எண்ணெயில நன்கு வறுக்கப்படும் வாழை சீவல்கள்

வறுத்த வாழைப்பழ சீவல்கள் பொதுவாகச் சூரியகாந்தி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் நன்கு வறுக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன. இந்த சீவல்கள் உலர்ந்தவை (உருளைக்கிழங்கு சீவல்கள் போன்றவை), சுமார் 4% நீரினைக் (அட்டவணை) கொண்டிருக்கின்றன. மேலும் இவை உப்பு, மசாலா, சர்க்கரை பூசப்பட்ட அல்லது வெல்லம் பூசப்பட்டவை. சில நேரங்களில் வாழை சுவை சேர்க்கப்படுகிறது. பழுத்த வாழைப்பழங்கள் பயன்படுத்தப்பட்டால், இவற்றிலிருந்து எண்ணெய் வெளிப்படும். இவை இனிப்பு வகைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, உலர்ந்த சீவல்களுக்கு அல்ல.

உலர்த்துதல்[தொகு]

ஒரு சில வாழப்பழச் சீவல்கள் உலரவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. உலரவைக்கப்படும் வாழைப்பழத் துண்டுகள் அடர் மஞ்சள் மற்றும் மொறுமொறுப்பானவை அல்ல, மாறாகப் பழுப்பு, மற்றும் மெல்லக்கூடியவையாக உள்ளன. இவை மிகவும் இனிமையான வாழைப்பழ சுவை கொண்டவை. இவை முழுமையாகப் பழுத்த வாழைப்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மற்றொரு வகை அடுதல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் இம்முறையில் வாழைப்பழ சுவை காணப்படாது.

ஊட்டச்சத்து[தொகு]

உலர்ந்த வாழை சீவல்கள் 4% நீர், 58% கார்போவைதரேட்டு, 34% கொழுப்பு மற்றும் 2% புரதம் . 100 கிராம் அளவில் உள்ள உலர்ந்த வாழை சீவல்கள் 520 கலோரிகளை கொண்டுள்ளன. மேலும் அவை மக்னீசியம் (21% டி.வி) மற்றும் உயிர்ச்சத்து பி 6 (20% டி.வி) ஆகியவை அதிகமாகக் காணப்படும். இதில் மிதமான அளவில் இரும்பு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் (10% முதல் 11% டி.வி) உள்ளன. பிற நுண்ணூட்டச்சத்துக்களின் தினசரி மதிப்பு ஊட்டச்சத்து அட்டவணையில் கொடுக்கப்படும்.

பயன்கள் மற்றும் மாறுபாடுகள்[தொகு]

இந்தியா[தொகு]

கேரளாவில் வறுத்த வாழை சீவல்கள் நேந்திரங் காய ஒப்பேரி அல்லது வாழைக்கா உப்பேரி அல்லது உப்பேரி என அழைக்கப்படும். கேரளாவில் சீவல்களைப் பொறிக்கத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.[2] பழுத்த மற்றும் பழுக்காத வாழைப்பழங்கள் இரண்டும் இந்த வகை சீவல் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வறுத்தப்பின் சீவல்கள் மசாலா அல்லது வெல்லம் கலக்கப்பட்டு காரமாகவோ இனிப்பாகவோ பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பழம் மற்றும் வாழைப்பழ சீவல்கள் முறையே பச்சகாய் வறுத்தது மற்றும் காயா உப்பேரி என்று அழைக்கப்படுகின்றன. இனிப்பு வெல்லம்-வாழைப்பழ சீவல்கள் சர்க்கர உப்பேரி அல்லது சர்க்கர வரட்டி என்று அழைக்கப்படுகின்றன . சர்க்கர வரட்டி உப்பேரியினை விட விலை அதிகம். ஓணம், திருமணங்கள் மற்றும் பண்டிகைகளில் பரிமாறப்படும் சத்யா என்ற பாரம்பரிய கேரள உணவின் ஒருபகுதியாக வாழைக்காய் சீவல் பரிமாறப்படுகிறது.

இந்தோனேசியா[தொகு]

இந்தோனேசிய கிரிபிக் பிசாங் (வாழை சீவல்கள்)

வாழை கடல்சார் தென்கிழக்காசியாவின் பூர்வீக தாவரமாகும். மேலும் தீவு மக்கள் இதனைச் சிற்றுண்டியாகப் பல பயன்பாடுகளுக்குப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தோனேசியாவில், வாழைப்பழ சிப் கிரிபிக் பிசாங் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது மிருதுவான கிரிபிக் (பாரம்பரிய சிப் அல்லது மிருதுவான) மாறுபாடாகக் கருதப்படுகிறது. கிருபிக் பிசாங் ஒரு பிரபலமான மிருதுவான சிற்றுண்டாகும். ஜாவா மற்றும் சுமத்ராவில் அதிகம் காணப்படுகிறது.

பொதுவாகப் பழுக்காத பச்சை வாழைப்பழங்கள் மெல்லியதாக வெட்டப்பட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு நீர் கரைசலில் ஊறவைக்கப்படுகின்றன. பின்னர் சீவல்கள் சூடான எண்ணெய்யில் நன்றாக வறுத்தெடுக்கப்படுகின்றன.[3] பழுக்காத வாழைப்பழத்தில் உள்ள நீர் மற்றும் சர்க்கரையின் குறைவான அளவு காரணமாக நன்கு வறுக்க வேண்டும். அதிக மாவுச் சத்து அதிகமாகக் கொண்டுள்ளது. பீசாங் கோரெங் (வாழைப்பழக் கொக்கோய்) மற்றொரு வறுத்த வாழைப்பழ சிற்றுண்டி. இது மெல்லியதாக சீவல் சற்று பெரியதாக இருக்கும். இந்த இனிப்பினை சூடான சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்கா[தொகு]

சீவல்கள் பெரும்பாலும் மியூஸ்லி மற்றும் கொட்டைக் கலவைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. படகோன்கள் போன்ற பிற சீவல்கள் உப்பு நிறைந்தவை. இதே சீவல்கள் சிப்ளி செய்யப்படுகின்றன. நன்கு வறுத்த வாழைப்பழ சீவல்கள் மெக்சிக்கோவின் தென்கிழக்கு பகுதியில், குறிப்பாக தபாஸ்கோ மாநிலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Food processing, EPa. "How to Make Sweet and Salted Banana Chips". Archived from the original on 28 December 2011. பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
  2. "Banana Chips from Kerala, india". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-04-13.
  3. "banana chips (keripik pisang)". Indonesian original recipe.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைச்_சீவல்&oldid=3505000" இலிருந்து மீள்விக்கப்பட்டது