பீசாங் கோரேங் (வாழைப்பழக் கொக்கோய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீசாங் கோரேங்
Goreng Pisang.jpg
வகைSnack
முக்கிய சேர்பொருட்கள்வாழைப்பழம், வெண்ணெய்
Cookbook: பீசாங் கோரேங்  Media: பீசாங் கோரேங்

பீசாங் கோரேங் (இந்தோனேசிய / மலேசிய மொழியில் வறுத்த வாழை என்று பொருள்.) பெரும்பாலும் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் (இது டகலொக் மொழியில் saging pritong என்று அழைக்கப்படுகிறது) மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு சிற்றுண்டி உணவாக அறியப்படுகின்றது. சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டின் சில பகுதிகளில் இது "கோரேங் பீசாங் என்றும் அழைக்கப்படுகின்றது. அதன் பொருள் பொறிக்கப்பட்ட வாழைப்பழம்" என்பதாகும். .[1] இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பீசாங் கோரேங் சாலையோர உணவுக்கடைகைகளில் விற்கபடுவதைதான் அதிகம் காணமுடியும்.உயர்விடுதிகளில் விற்கப்படும் பீசாங்க் கோரேங் விட ஒட்டுக்கடைகளில் விற்கப்படும் பீசாங் கோரேங் அதிக சுவை நிறைந்தது என்கின்ற ஒருக் கருத்து அந்நாடுகளில் உள்ள மக்களின் மதில் உள்ளது.[2]

வாழைப்பழங்களை நன்றாக பிசைந்து கோதுமை அல்லது சோள மாவு மற்றும் சீனி கலந்து பிறகு சூடான எண்ணெயில் பொறிக்கப்படுவதன் மூலம் பீசாங் கோரேங் தயாராகின்றது. பெரும்பாலான தெருக்கடைகளில் விற்கப்படும் பீசாங்க் கோரேங் இப்படிதான் செய்யப்படுகின்றது. அதேநேரத்தில் உயர்தர உணவகங்களில் விற்கப்படும் பீசாங்க் கொரேங் சீஸ், ஜாம், பாலாடை , சாக்லேட் என்று பல்வேறு இனிப்பு பொருட்கள் வைத்து பரிமாறப்படுகின்றது.

சூரினாம், மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் ஒரு சிற்றுண்டி உணவாக பாகாபானா என்கின்ற பெயரில் பீசாங் கோரேங் அறியப்படுகின்றது.(சூரினாம் மொழியில் சமைக்கப்பட்ட வாழைப்பழம் என்று பொருள்).[சான்று தேவை] வாழைப் பழங்களில் பலவகைகள் இருந்தாலும் ராஜா பீசாங் என்கின்ற வகைதான் பீசாங் கோரேங் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

தோற்றம்[தொகு]

பீசாங் கோரேங் 1511 ஆம் ஆண்டு காலை சிற்றுண்டியாக போர்த்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வருவதற்கு முன் , வாழைப்பழங்கள் சமைத்து சாப்பிடும் வழக்கம் கிடையாது. போர்த்துகீசியர்களே முதன்முதல் மலாய் வகை உணவுகளில் மாவுப் பொருட்களைக் கொண்டு குறிப்பாக பலகாரங்கள் செய்யும் முறையை அறிமுகப்படுத்தினர். ஜப்பான் நாட்டில், தேம்புரா என்கின்ற ஒரு வகை பலகாரம் தோன்றுவதற்கும் மேற்கூறிய நிகழ்வே ஒருக் காரணமாக அமைந்தது.

இந்தோனேசியாவும் பீசாங்க் கோரேங்கும்[தொகு]

இந்தோனேசியா நாட்டின் ஒவ்வொரு பகுதியில் வெவ்வேறு பெயர்களிலும் பல்வேறு சுவைகளிலும் பீசாங்க் கோராங் கிடைக்கின்றது. எடுத்துக்காட்டாக, பாலி மாநிலத்தில் பீசாங்க் கோரேங் கோடோக் கெடா என்றழைக்கப்படுகின்றது. அதேவேளையில் மேற்கு ஜாவாவில் காவ் கோரேங் என்று அழைக்கப்படுன்றது.

காண்க[தொகு]

  • Fried plantain, African version of fried bananas
  • Chuối chiên, Vietnamese version of fried bananas

பிற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:Indonesian cuisine வார்ப்புரு:Malaysian cuisine வார்ப்புரு:Banana


வார்ப்புரு:Indonesia-cuisine-stub வார்ப்புரு:Malaysia-cuisine-stub வார்ப்புரு:Philippines-cuisine-stub