உள்ளடக்கத்துக்குச் செல்

லுங்கி எங்கிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுங்கி எங்கிடி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லுங்கிசனி எங்கிடி
பிறப்பு29 மார்ச்சு 1996 (1996-03-29) (அகவை 28)
டர்பன், க்வாசுலு-நேட்டல், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை வேகம்
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 334)13 ஜனவரி 2018 எ. இந்தியா
கடைசித் தேர்வு19 அக்டோபர் 2019 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 126)7 பிப்ரவரி 2018 எ. இந்தியா
கடைசி ஒநாப23 ஜூன் 2019 எ. பாக்கித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 67)20 ஜனவரி 2017 எ. இலங்கை
கடைசி இ20ப17 நவம்பர் 2018 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போதுநார்த்தர்ன்ஸ்
2016–presentடைட்டன்ஸ்
2018சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 4 20 7 13
ஓட்டங்கள் 15 46 6 36
மட்டையாட்ட சராசரி 3.75 23.00 6.00 5.14
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 5 19* 4 12*
வீசிய பந்துகள் 619 912 120 1,826
வீழ்த்தல்கள் 15 37 11 46
பந்துவீச்சு சராசரி 19.53 22.59 11.63 20.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/39 4/51 4/19 6/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/– 1/– 7/–
மூலம்: ESPNcricinfo, 19 October 2019

லுங்கிசனி எங்கிடி (Lungisani Ngidi, பிறப்பு: மார்ச் 29, 1996) என்பவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர் ஆவார் இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாப்பிரிக்க நாட்டு துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.[1] 2018 தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட ஆண்டு விருதுகளில், அவர் ஆண்டின் ஐந்து துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். [2] [3]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

ஜனவரி 2017 இல் அவர் இலங்கைக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் சேர்க்கப்பட்டார். [4] 20 ஜனவரி 2017 அன்று இலங்கைக்கு எதிராக தனது முதல் இ20ப போட்டியில் விளையாடியதுடன்[5] ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.[6] இ20ப தொடரின் போது, இலங்கைக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுப் (ஒநாப) போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் எங்கிடி இடம் பெற்றார்.[7] இருப்பினும், காயம் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டார். [8]

2018 ஜனவரியில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது தேர்வுப் போட்டிக்கு முன்னதாக அவர் தென்னாப்பிரிக்காவின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[9] 13 ஜனவரி 2018 அன்று இந்தியாவுக்கு எதிராக தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார். தென்னாப்பிரிக்கா 135 ஓட்டங்களால் வென்றது. இரண்டாவது ஆட்டப்பகுதியில் 6/39 உட்பட, போட்டியில் 7/87 என்ற புள்ளிவிவரங்களை அவர் பதிவு செய்தார். [10] அதே மாதத்தின் பிற்பகுதியில், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் அவர் இடம் பெற்றார். [11] அவர் பிப்ரவரி 7, 2018 அன்று இந்தியாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். [12]

இவர் ஜனவரி 2018 இல் நடந்த 2018 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ₹ 50 லட்சம் ($ 78,650) விலைக்கு வாங்கப்பட்டார். [13]

மார்ச் 2018 இல், 2018–19 பருவத்துக்கு முன்னதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா எங்கிடிக்கு நாட்டு ஒப்பந்தத்தை வழங்கியது. [14] ஏப்ரல் 2019 இல், 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம்பெற்றார். [15] [16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lungi Ngidi". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
  2. "Markram, Ngidi named among SA Cricket Annual's Top Five". Cricket South Africa. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Markram, Ngidi among SA Cricket Annual's Cricketers of the Year". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  4. "Behardien to lead in T20 as SA ring changes". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  5. "Sri Lanka tour of South Africa, 1st T20I: South Africa v Sri Lanka at Centurion, Jan 20, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
  6. "Miller powers SA to victory in 10-over thrash". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
  7. "De Villiers, Ngidi included in SA one-day squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
  8. "Lungi Ngidi to miss ODIs against Sri Lanka with abdomen injury". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  9. "Olivier, Ngidi added to South Africa squad for second Test". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/south-africa-v-india-2018/content/story/1132261.html. பார்த்த நாள்: 8 January 2018. 
  10. "2nd Test, India tour of South Africa at Centurion, Jan 13-17 2018". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1122277.html. பார்த்த நாள்: 13 January 2018. 
  11. "South Africa pick Ngidi and Zondo for India ODIs". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/22206853/south-africa-pick-ngidi-zondo-india-odis. பார்த்த நாள்: 25 January 2018. 
  12. "3rd ODI (D/N), India tour of South Africa at Cape Town, Feb 7 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
  13. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  14. "Markram, Ngidi awarded CSA central contracts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2018.
  15. "Hashim Amla in World Cup squad; Reeza Hendricks, Chris Morris miss out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
  16. "Amla edges out Hendricks to make South Africa's World Cup squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுங்கி_எங்கிடி&oldid=3570279" இலிருந்து மீள்விக்கப்பட்டது