உள்ளடக்கத்துக்குச் செல்

யோங் யாப் மலை

ஆள்கூறுகள்: 4°45′00″N 101°22′59″E / 4.750128°N 101.383178°E / 4.750128; 101.383178
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோங் யாப் மலை
Mount Yong Yap
Gunung Yong Yap
யோங் பெலார் மலைக்கு வடக்கே உள்ள குவாலி முகாமிலிருந்து காட்சி; இடமிருந்து வலமாக: யோங் யாப் மலை, புபூ மலை மற்றும் தோக் நேனேக் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்2,168 m (7,113 அடி)
புடைப்பு615 m (2,018 அடி)
பட்டியல்கள்ரீபு மலைகள்
ஆள்கூறு4°45′00″N 101°22′59″E / 4.750128°N 101.383178°E / 4.750128; 101.383178
புவியியல்
யோங் யாப் மலை is located in மலேசியா
யோங் யாப் மலை
யோங் யாப் மலை
மலேசியா
அமைவிடம்லோஜிங், கிளாந்தான்,
கோலாகங்சார் மாவட்டம், பேராக் மலேசியா
மூலத் தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்
தெனாசிரிம் மலைத்தொடர்
ஏறுதல்
எளிய வழிகோலா மு (மேற்கு) அல்லது ரெங்கில் குடியிருப்பு (கிழக்கு) வழியாக நடைப்பயணம்

யோங் யாப் மலை (மலாய் மொழி: Gunung Yong Yap; ஆங்கிலம்: Mount Yong Yap) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றாகும். யோங் யாப் மலையின் உயரம் 2,168 மீட்டர் (7,113 அடி). இந்த மலை கிளாந்தான் - பேராக் மாநிலங்களின் எல்லையில் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ளது.[1]

இந்த மலை கிளாந்தான் மாநிலத்தில் மூன்றாவது உயரமான மலை; மற்றும் தீபகற்ப மலேசியாவில் ஆறாவது உயரமான மலையாகும்.[2] ஜி7 மலைகளில் ஒன்றான யோங் யாப் மலையில் ஏறுவது என்பது மிகக் கடினமானது; தீபகற்ப மலேசியாவில் உள்ள மிகவும் கடினமான மலைப் பயணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3]

செங்குத்தான பாறைகள்

[தொகு]

ஒரு மீட்டர் உயரத்திற்கு மக்கிய மரங்களின் அடித்தண்டுகள், கூர்மையான முனைகளைக் கொண்ட மூங்கில்கள் மற்றும் முட்கள் நிறைந்த செடி கொடிகள், மரங்கள் இருப்பதால் யோங் யாப் மலைப் பாதை மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இவை மலை உச்சியை அடைவதற்குப் பெரும் சவாலாக உள்ளன.

மலையின் உச்சி கூம்பு வடிவத்தில் உள்ளதால் மிகவும் செங்குத்தான பாறைச் சுவர்களில் ஏறுவது மிகவும் கடினம். வெப்பமண்டல மழைக்காடுகளில் மலை ஏறும் அனுபவமில்லாதவர்களுக்கு இந்த மலை கண்டிப்பாக பரிந்துரைக்கப்படுவதில்லை.

யோங் யாப் மலையேற்றம்

[தொகு]

யோங் யாப் மலையை மேற்கில் கம்போங் கெப்பே ஈலிர் (Kampung Gepeh Hilir) கோலா மு மலை (640 மீட்டர்) வழியாகவும்; கிழக்கில் கேமரன் மலை ரெகில் மலை (660 மீட்டர்) வழியாகவும் அணுகலாம். மலைக்கு இட்டுச் செல்லும் பல பயணப் பாதைகள் உள்ளன. மேலும் அவை 4WD எனும் கூடுதல் உந்து கொண்ட வாகனங்கள் வழியாக மட்டுமே அணுக முடியும்.[4][5]

மலையேறுபவர்கள் பலருக்கு குறைந்தபட்சம் 2 முழு நாட்கள் மற்றும் 1 இரவு தேவைப்படுகிறது. மற்றும் பெரும்பாலானவர்கள் யோங் யாப் மலையேற்றத்தை 3 நாட்கள் வரை நீடித்துக் கொள்வார்கள்.

பொது

[தொகு]

480 கிமீ நீளமுள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் யோங் யாப் மலை உள்ளது. தித்திவாங்சா மலைத்தொடர் என்பது தெனாசிரிம் மலைத்தொடரில் ஒரு பகுதியாகும். தெனாசிரிம் மலைத்தொடர் என்பது தென்கிழக்காசியாவில் 1,700 கி.மீ. நீளத்திற்கு பர்மா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா நாடுகளில் படர்ந்து இருக்கும் ஒரு மலைத்தொடராகும்.[6]

மலையில் ஏறுவதற்கு முன்னர், பேராக் மாநில வனத்துறையின் அனுமதி தேவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வழிகாட்டிகள் கட்டாயமில்லை. இருப்பினும் பாதுகாப்பான அனுபவத்திற்காக ஒருவரைப் பணியில் அமர்த்த பரிந்துரைக்கப்படுகிறது.

வனவிலங்கு ஆபத்துகள்

[தொகு]

கடந்த காலங்களில் இந்தப் பகுதியைச் சுற்றி புலிகளின் தாக்குதல்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அண்மையில்மலேசியப் புலியால் தாக்கப்பட்டு மலேசியப் பழங்குடியினர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

மலை முழுவதும் இரத்தம் குடிக்கம் அட்டைகளும்; மணல் ஈக்களும் மிக அதிகமாக உள்ளன.

ஏழு மலைகள்

[தொகு]

தீபகற்ப மலேசியாவின் G7 எனும் (G என்பது Gunung எனும் மலாய்ச் சொல்: மலை என பொருள்படும்) மலைகளில் இதுவும் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த 7 மலைகளை ஜி7 மலைகள் என அழைக்கிறார்கள்.

மலேசிய தீபகற்பத்தில் உள்ள ஏழு உயரமான மலைகள் ஜி7 என அழைக்கப்படுகின்றன.[7]

  1. G1 தகான் மலை – 2187மீ
  2. G2 கொர்பு மலை – 2183மீ
  3. G3 யோங் பெலார் மலை – 2181மீ
  4. G4 காயோங் மலை – 2173மீ
  5. G5 சாமா மலை – 2171மீ
  6. G6 யோங் யாப் மலை – 2168மீ
  7. G7 உலு செப்பாட் மலை – 2161மீ

கினபாலு மலை (4095 மீ) போன்ற நன்கு அறியப்பட்ட மலைகளுடன் ஒப்பிடும்போது, மேற்காணும் ஜி7 மலைகளின் உயரம் மிகவும் குறைவாக இருக்கலாம். ஆனாலும் இந்த மலைகளின் உயரத்தைக் கொண்டு அவற்றைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. இவை ஒவ்வொன்றும் 4000 மீட்டர் கொண்ட மலைகளை விட கடினமான கரடுமுரடான மலைகளாகும். இவற்றை மலைகளின் விலங்குகள் என அழைப்பதும் உண்டு.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Theory and Practice in Hospitality and Tourism Research, edited by Salleh Mohd Radzi, Mohd Faeez Saiful Bakhtiar, Zurinawati Mohi, Mohd Salehuddin Mohd Zahari, Norzuwana Sumarjan, C.T. Chik, Faiz Izwan Anuar
  2. Member Countries of Asian Pacific Parliamentarians' Union: 1990, Asian-Pacific Parliamentarians' Union, The Center, 1990 - Asia - 560 pages
  3. "Gunung Yong Yap is considered to be one of the tougher treks in Peninsular Malaysia, with leeches, sandflies and even the vague possibility of Malayan tigers! There are also several river crossings". 25 July 2018. பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.
  4. "Best Trails near Yong Yap Mountain. The journey begins at Pos Renggil". AllTrails.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.
  5. "Gunung Yong Yap located within a stretch of Perak and Kelantan border with the height of 2168 meter and 17.2km in distance (one way). Gunung Yong Yap is also located in a series of two other mountains on its path i.e Gunung Bubu and Gunung Tok Nenek". R U N N I N G. 27 May 2018. பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.
  6. Tenasserim Hills or Tenasserim Range is the geographical name of a roughly 1,700 km long mountain chain, part of the Indo-Malayan mountain system in Southeast Asia.
  7. "G7 or the seven mountains above 7,000 feet are Tahan (7,186 feet), Korbu (7,162 feet), Yong Belar (7,156 feet), Gayong (7,129 feet), Chamah (7,210 feet), Yong Yap (7,110 feet) and Ulu Sepat (7,089 feet)". Medium (in ஆங்கிலம்). 14 November 2015. பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • John Briggs, 'Mountains of Malaysia - a Practical Guide and Manual ' , Longman Malaysia Sdn Bhd , 1985.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோங்_யாப்_மலை&oldid=3933167" இலிருந்து மீள்விக்கப்பட்டது