ரீபு மலைகள்
ரீபு மலைகள் (மலாய் மொழி: Gunung Ribu; ஆங்கிலம்: Ribu) என்பது 1,000 மீ (3,300 அடி) அல்லது அதற்கும் மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளை வரையறுக்கும் சொல் ஆகும். [1]
"ரீபு" என்பது ஒருமலாய் மற்றும் ஓர் இந்தோனேசியச் சொல்லாகும்; அதாவது "ஆயிரம்" என பொருள்படும்.[2]இருப்பினும் இந்தச் சொல் இந்தோனேசிய அசல் சொல்லான "ரீபு" என்பதிலிருந்து வந்தது,
மேலும், ரீபு சிகரம் எனும் தகுதியைப் பெறுவதற்கு, ஒரு மலைக்கு ஆயிரம் மீட்டர் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.
பொது
[தொகு]இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில், சிகரத்தின் முழுமையான உயரத்திற்கு ஏற்ப ரீபு மலைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன.
- மிக உயர்ந்தது (இந்தோனேசியம்: Sangat Tinggi) - 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தைக் கொண்ட மலைகள்;
- நடுத்தர உயரம் (இந்தோனேசியம்: Tinggi Sedang) - 2,000 முதல் 3,000 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்ட மலைகள்;
- குறைவான உயரம் (இந்தோனேசியம்: Kurang Tinggi) - 1,000 முதல் 2,000 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்ட மலைகள்;
7,000 ரீபு மலைகள்
[தொகு]தற்போது, மலேசியா மற்றும் கிழக்கு திமோர் உட்பட இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முழுவதும் மொத்தம் 270 ரீபு மலைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இந்தோனேசியாவைப் பொருத்த வரையில் ரிஞ்சனி மலை; புரோமோ மலை; ஆகூங்க் மலை; புன்சாக் ஜெயா போன்றவை மிக உயர்ந்த மலைகளின் பட்டியலில் உள்ளன.
கினபாலு மலை
[தொகு]மலேசியாவில் கினபாலு மலை மட்டும் மிக உயர்ந்த மலைகளின் பட்டியலில் உள்ளது.[3]
2022-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள சுமார் 7,000 ரீபு மலைகள் அனைத்தையும் அடையாளம் காண ஒரு பன்னாட்டுத் திட்டம் நடந்து வருகிறது.[4][5]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jardine, David (2009). "The Ascents of Dan". Tempo: (1007) p.63.
- ↑ "Google Translate". translate.google.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-12.
- ↑ "List of Indonesian and Malaysian mountains by Prominence - Gunung Bagging". gunungbagging.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
- ↑ "Worldwide Ribus Project page". பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
- ↑ "Ribus Project map". பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.