காயோங் மலை
காயோங் மலை Mount Gayong Gunung Gayong | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,173 m (7,129 அடி) |
பட்டியல்கள் | ரீபு மலைகள் |
ஆள்கூறு | 4°40′59″N 101°19′00″E / 4.68306°N 101.31667°E |
புவியியல் | |
அமைவிடம் | கிந்தா மாவட்டம் பேராக் மலேசியா |
மூலத் தொடர் | தித்திவாங்சா மலைத்தொடர் |
காயோங் மலை (Mount Gayong) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒரு மலையாகும். இது பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் தித்திவாங்சா மலைத்தொடருக்குள் அமைந்துள்ளது.
இது மலாய் தீபகற்பத்தில் நான்காவது உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2,173 மீட்டர். மலைத்தொடரின் மிக உயரமான மலை மற்றும் தீபகற்ப மலேசியாவின் இரண்டாவது உயரமான மலையான கொர்பு மலையின் உச்சியில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் அடையலாம்.
பொது
[தொகு]கொர்பு மலை; காயோங் மலை; ஆகிய இரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள நெருக்கம் காரணமாக, மலையேற்றம் மற்றும் மலையேறும் சமூகத்தில் அவை கூட்டாக கொர்கா என்று அழைக்கப்படுகின்றன.
கொர் என்றால் கொர்பு மலை; கா என்றால் காயோங் மலை. மலை ஏறுபவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான தளம் ஆகும்.[1] கொர்பு (G2) மற்றும் காயோங் (G4) ஆகியவை மலேசியாவில் உள்ள G7 மலைகளின் ஒரு பகுதியாகும். மலேசிய தீபகற்பத்தில் உள்ள ஏழு உயரமான மலைகள் ஜி7 என அழைக்கப்படுகின்றன.
- G1 தகான் மலை – 2187மீ
- G2 கொர்பு மலை – 2183மீ
- G3 யோங் பெலார் மலை – 2181மீ
- G4 காயோங் மலை – 2173மீ
- G5 சாமா மலை – 2171மீ
- G6 யோங் யாப் மலை – 2168மீ
- G7 உலு செப்பாட் மலை – 2161மீ
கினபாலு மலை (4095 மீ) போன்ற நன்கு அறியப்பட்ட மலைகளுடன் ஒப்பிடும்போது, மேற்காணும் ஜி7 மலைகளின் உயரம் மிகவும் குறைவாக இருக்கலாம். ஆனாலும் இந்த மலைகளின் உயரத்தைக் கொண்டு அவற்றைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. இவை ஒவ்வொன்றும் 4000 மீட்டர் கொண்ட மலைகளை விட கடினமான கரடுமுரடான மலைகளாகும். இவற்றை மலைகளின் விலங்குகள் என அழைப்பதும் உண்டு.
அதற்குக் காரணம், அந்த மலைகளின் புவியியல் அமைப்பு. மற்றும் இரத்தம் குடிக்கும் அட்டைகள் நிறைந்த ஆறுகள், அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான, வழுக்கும் முகங்களைக் கொண்ட பாறைகள் ஆகியவை இந்த மலைகளில் நிறைந்துள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mount Korbu and Gayong also well known as KORGA. Mount Korbu (G2) and Mount Gayong (G4) are two of the 7 highest mountain in Peninsula Malaysia". CORE Republic. பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.
- ↑ Luk, Siu Hoi (15 May 2022). "The terrain in Malaysian mountains are full of leech-infested rivers, dense jungles and steep, slippery faces to scale". Trying To Outdoors (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.