உலு செப்பாட் மலை

ஆள்கூறுகள்: 5°18′36″N 101°12′1″E / 5.31000°N 101.20028°E / 5.31000; 101.20028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலு செப்பாட் மலை
Mount Ulu Sepat
Gunung Ulu Sepat
உலு செப்பாட் மலை is located in மலேசியா
உலு செப்பாட் மலை
உலு செப்பாட் மலை
மலேசியா
உயர்ந்த இடம்
உயரம்2,161 m (7,090 அடி)
பட்டியல்கள்ரீபு மலைகள்
ஆள்கூறு5°18′36″N 101°12′1″E / 5.31000°N 101.20028°E / 5.31000; 101.20028
புவியியல்
அமைவிடம்உலு பேராக் மாவட்டம், பேராக் மலேசியா
மூலத் தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்
தெனாசிரிம் மலைத்தொடர்

உலு செப்பாட் மலை (மலாய் மொழி: Gunung Ulu Sepat; ஆங்கிலம்: Mount Ulu Sepat) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றாகும். உலு செப்பாட் மலையின் உயரம் 2,161 மீட்டர் (7,089 அடி). இந்த மலை கிளாந்தான் - பேராக் மாநிலங்களின் எல்லையில் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ளது.[1] [2]

இந்த மலை கிளாந்தான் மாநிலத்தில் நான்காவது உயரமான மலை; மற்றும் தீபகற்ப மலேசியாவில் 12-ஆவது உயரமான மலையாகும்.[3] ஜி7 மலைகளில் ஒன்றான உலு செப்பாட் மலையில் ஏறுவது என்பது மிகக் கடினமானது; தீபகற்ப மலேசியாவில் உள்ள மிகவும் கடினமான மலைப் பயணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[4] இந்த மலையில் மருத்துவ குணம் கொண்ட ஏராளமான தாவரங்கள் உள்ளன.

பொது[தொகு]

பல அடிகள் உயரத்திற்கு மக்கி அழுகிய மரங்களின் அடித்தண்டுகள், கூர்மையான முனைகளைக் கொண்ட மூங்கில்கள் மற்றும் முட்கள் நிறைந்த செடி கொடிகள், மரங்கள் இருப்பதால் உலு செப்பாட் மலைப் பாதை கடினமான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவை மலை உச்சியை அடைவதற்குப் பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன.

480 கிமீ நீளமுள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் உலு செப்பாட் மலை உள்ளது. தித்திவாங்சா மலைத்தொடர் என்பது தெனாசிரிம் மலைத்தொடரில் ஒரு பகுதியாகும். தெனாசிரிம் மலைத்தொடர் என்பது தென்கிழக்காசியாவில் 1,700 கி.மீ. நீளத்திற்கு பர்மா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா நாடுகளில் படர்ந்து இருக்கும் ஒரு மலைத்தொடராகும்.[5]

ஏழு மலைகள்[தொகு]

தீபகற்ப மலேசியாவின் G7 எனும் (G என்பது Gunung எனும் மலாய்ச் சொல்: மலை என பொருள்படும்) மலைகளில் இதுவும் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த 7 மலைகளை ஜி7 மலைகள் என அழைக்கிறார்கள்.

தீபகற்ப மலேசியாவில் உள்ள ஏழு உயரமான மலைகள் ஜி7 என அழைக்கப்படுகின்றன.[6]

  1. G1 தகான் மலை – 2187மீ
  2. G2 கொர்பு மலை – 2183மீ
  3. G3 யோங் பெலார் மலை – 2181மீ
  4. G4 காயோங் மலை – 2173மீ
  5. G5 சாமா மலை – 2171மீ
  6. G6 யோங் யாப் மலை – 2168மீ
  7. G7 உலு செப்பாட் மலை – 2161மீ

மலேசியாவின் கினபாலு மலை (4095 மீ); இந்தோனேசியாவின் ஆகூங்க் மலை, புரோமோ மலை, ரிஞ்சனி மலை போன்ற நன்கு அறியப்பட்ட மலைகளுடன் ஒப்பிடும்போது, மேற்காணும் ஜி7 மலைகளின் உயரம் மிகவும் குறைவாக இருக்கலாம்.

ஆனாலும் இந்த மலைகளின் உயரத்தைக் கொண்டு அவற்றைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. இவை ஒவ்வொன்றும் 4000 மீட்டர் கொண்ட மலைகளை விட கடினமான கரடுமுரடான மலைகளாகும். இவற்றை மலைகளின் இராட்சச விலங்குகள் என அழைப்பதும் உண்டு.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Theory and Practice in Hospitality and Tourism Research, edited by Salleh Mohd Radzi, Mohd Faeez Saiful Bakhtiar, Zurinawati Mohi, Mohd Salehuddin Mohd Zahari, Norzuwana Sumarjan, C.T. Chik, Faiz Izwan Anuar
  2. UTM tawan gunung.
  3. Member Countries of Asian Pacific Parliamentarians' Union: 1990, Asian-Pacific Parliamentarians' Union, The Center, 1990 - Asia - 560 pages
  4. "Gunung Yong Yap is considered to be one of the tougher treks in Peninsular Malaysia, with leeches, sandflies and even the vague possibility of Malayan tigers! There are also several river crossings". 25 July 2018. பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.
  5. Tenasserim Hills or Tenasserim Range is the geographical name of a roughly 1,700 km long mountain chain, part of the Indo-Malayan mountain system in Southeast Asia.
  6. "G7 or the seven mountains above 7,000 feet are Tahan (7,186 feet), Korbu (7,162 feet), Yong Belar (7,156 feet), Gayong (7,129 feet), Chamah (7,210 feet), Yong Yap (7,110 feet) and Ulu Sepat (7,089 feet)". Medium (in ஆங்கிலம்). 14 November 2015. பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலு_செப்பாட்_மலை&oldid=3933364" இலிருந்து மீள்விக்கப்பட்டது