புரோமோ மலை
புரோமோ மலை Mount Bromo | |
---|---|
சூரியன் உதிக்கும் வேளையில், புரோமோ மலையின் முன்புல பெரிய எரிமலைமுகடுத் தோற்றம். | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,329 m (7,641 அடி)[1] |
பட்டியல்கள் | ரிபு |
புவியியல் | |
நிலவியல் | |
மலையின் வகை | சோம்மா எரிமலை |
கடைசி வெடிப்பு | 2015 நவம்பர் - 2016 பிப்ரவரி |
புரோமோ மலை (ஆங்கிலம்: Mount Bromo; இந்தோனேசியம்: Gunung Bromo) இது, தென்கிழக்காசியாவில் உள்ள இந்தோனேசியாவின் கிழக்கு சாவகம் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இம்மலை, செயலாற்றும் எரிமலையாகவும், "டெங்கிர்" என்னும் (Tengger massif) மலைநாட்டு பகுதியாகவும் உள்ளது. 2,329 மீட்டர்கள் (7,641 அடி) உயரமுள்ள இது, சிகரம் அல்லாத மிக உயர்ந்த மலை முகட்டுத்திரள் கொண்டுள்ள ஆனால் மிகவும் பிரபலமாக நன்கு அறியப்பட்டதாகும்.[2] இந்தோனேசியாவின் கிழக்கு சாவகம் பகுதியிலுள்ள இந்த புரோமோ மலையின் முகட்டுதிரளைக் காண, பெருமளவு மக்கள் வருகைதரும் சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. "புரோமோ டெங்கெர் செமெரு தேசிய பூங்காவுக்கு" (Bromo Tengger Semeru National Park) சொந்தமான இந்த மலையின் புரோமோ என்னும் பெயர், இந்து சமய உருவாக்கும் கடவுளான பிரம்மாவின் பெயரை ஜாவானீஸ் மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். [3]
பின்புலம்
[தொகு]புரோமோ மலையின் மத்தியில் உள்ள ஒரு வெற்றிடப் பகுதியான, "மணல் கடல்" (Sea of Sand (Erg) இந்தோனேசியம்: "லாடன் பாசிர்" (Lautan Pasir) அல்லது சாவக மொழியில்: "செகரா வேடி" Segara Wedi ) எனப்படும் இப்பகுதி, 1919 ஆம் ஆண்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட இயற்கை இருப்புப் பகுதியாகும்.[4] கிழக்கு சாவகம் பிராந்தியத்தில், கடல் மட்டத்திலிருந்து 2,217 மீட்டர் உயரத்தில் வடக்கு-கிழக்காக அமைந்துள்ள "செமாரோ லாவாங்" (Cemoro Lawang) என்னும் மலை கிராமத்திலிருந்து புரோமோ மலைக்கு ஒரு பொதுவழி உள்ளது.[5] அக்கிராமத்தில் இருந்து சுமார் 45 நிமிட நடைப் பயணத்தில் புரோமோ எரிமலைப் பகுதியை சென்றடையலாம், ஆனாலும் "பொறி வண்டி" (Jeep) வசதியையும் ஏற்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம். பொறி வண்டிப் பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில், ஒரு நிறுத்தத்தில் (2,770 மீட்டர் அல்லது 9.088 அடி) உயரமுடைய "பெனஞ்சகன் மலை" (Mount Penanjakan, இந்தோனேசியம்: குனுங் பெனஞ்சகன்) என்னும் மலையைப் பார்த்துச் செல்லலாம்.[6] பெனஞ்சகன் மலைக்கு சுமார் 2 மணிநேரம் நடந்து சென்றால், அம்மலையை அடையலாம். எரிமலையின் செயல்பாட்டு அளவைப் பொறுத்து, இந்தோனிசியாவின் எரிமலை ஆய்வு மற்றும் பேரிடர் நடுவம், சில நேரங்களில் புரோமோ மலைப் பகுதியின் வருகைக்கு எதிராக எச்சரிக்கைகள் வெளியிடுகிறது.[7]
செயற்பாடு
[தொகு]2004 வெடிப்புகள்
[தொகு]புரோமோ எரிமலை, 2004 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அந்த வெடிப்பு அத்தியாயத்தில், வெடிப்பிலிருந்து பெரும்பகுதியில் பாறைகள் தூக்கியெறியப்பட்ட நிகழ்வில் இரண்டு பேர்கள் இறந்து போயினர் மற்றும் குறைந்தது ஐந்து பேர்கள் காயமடைந்தனர். மேலும், எந்நேரமும் நிகழக்கூடிய இந்த எரிமலை செயல்பாட்டு எச்சரிக்கைகளுக்கு இடையில், சுமார் 15,000 க்கும் மேற்பட்ட மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.[8]
2010 வெடிப்புகள்
[தொகு]2010 ஆம் ஆண்டு நவம்பர் 23, செவ்வாய்க்கிழமை, 16.30 மணிக்கு (மேற்கு இந்தோனேசிய நேரம், (WIB), இந்த மலையின் நடுக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் மேலோட்டமான எரிமலை பூகம்பங்கள் அதிகரித்ததன் காரணமாக, இந்தோனிசியாவின் "எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் நீக்க மையம்" (CVGHM), புரோமோ மலையின் செயல்பாட்டு நிலையை உறுதிப்படுத்தி எச்சரிக்கை விடுத்தது.[9] மேலும் இதுகுறித்து, எரிமலை வெடிப்பு நேரிட வாய்ப்பு இருக்கலாம் என்று கவலைகள் எழுப்பப்பட்டன.[9] அதைத்தொடர்ந்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் மற்றும் அகன்ற எரிமலைவாய் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், மற்றும் அகதிகள் முகாம்கள் இருந்து பகுதியென மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேறும்படி ஒரு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[10] புரோமோ, மற்றும் "டேக்கேரா" Teggera என்ற அகன்ற எரிமலைவாய் சுற்றியுள்ள எஞ்சிய பகுதி முழுவதும் பார்வையாளர்களை எல்லையில் இருந்தது அப்புறப்படுத்தப்பட்டனர்.[11]
புரோமோ எரிமலை, 2010, நவம்பர் 26 ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று சாம்பல் உமிழ்ந்தவாறு வெடிக்க தொடங்கியது.[12]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tengger Caldera". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
- ↑ "Bromo Mountain". ijen-bluefire.com (ஆங்கிலம்) - 19 Oktober 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Bromo-by Binu Octa". maptia.com (ஆங்கிலம்) - Binu Octa-2016. Archived from the original on 2020-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
- ↑ "Mount Bromo Tour". Archived from the original on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
- ↑ Cemoro Lawang, MT Bromo, Indonesia
- ↑ Moving stars / Mt Bromo Indonesia
- ↑ "Mount Bromo, Indonesia". travel.siliconindia.com (ஆங்கிலம்) - 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
- ↑ "Javan volcano eruption kills two". news.bbc.co.uk (ஆங்கிலம்) - 8 June, 2004. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
- ↑ 9.0 9.1 "Status Gunung Bromo menjadi Awas". www.bbc.com (ஆங்கிலம்) - 23 November 2010 - 15:34 GMT. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
- ↑ Mount Bromo eruptions
- ↑ "Mount Bromo - 2010 eruptions". dict.eudic.net (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
- ↑ "Bromo Volcano". www.volcanolive.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
{{cite web}}
: Text "2010-11 Eruption" ignored (help); Text "John Seach" ignored (help)