பத்து பூத்தே மலை
பத்து பூத்தே மலை Mount Batu Putih![]() | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,132 m (6,995 அடி)[1] |
புடைப்பு | 992 m (3,255 அடி)[1] |
பட்டியல்கள் | ரீபு மலைகள் |
ஆள்கூறு | 4°13′23″N 101°26′28″E / 4.22304°N 101.44114°E[1] |
புவியியல் | |
அமைவிடம் | ![]() |
நாடு | ![]() |
மூலத் தொடர் | தித்திவாங்சா மலைத்தொடர் |
பத்து பூத்தே மலை (மலாய்: Gunung Batu Putih; ஆங்கிலம்: Mount Batu Putih) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தின் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும்.[2]
இந்த மலை தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ளது. தித்திவாங்சா மலைத்தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது. தித்திவாங்சா மலைத்தொடரின் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது.[3]
பொது
[தொகு]பத்து பூத்தே மலையின் மலை முகடு 2,132 மீ ஆகும். தீபகற்ப மலேசியாவின் 8-ஆவது உயரமான மலையாகவும் உள்ளது. பத்து பூத்தே மலையில் மருத்துவ குணம் கொண்ட ஏராளமான தாவரங்கள் உள்ளன.[4]
ரீபு மலைகள் பட்டியலில் இந்த மலையும் இடம்பெறுகிறது. ரீபு மலைகள் என்பது 1,000 மீ (3,300 அடி) அல்லது அதற்கும் மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளை வரையறுக்கும் சொல் ஆகும். [5] தற்போது, மலேசியா மற்றும் கிழக்கு திமோர் உட்பட இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முழுவதும் மொத்தம் 270 ரீபு மலைகள் இருப்பதாக அறியப்படுகிறது.
2022-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள சுமார் 7,000 ரீபு மலைகள் அனைத்தையும் அடையாளம் காண ஒரு பன்னாட்டுத் திட்டம் நடந்து வருகிறது.[6][7]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. Retrieved 2015-01-03.
- ↑ "Bukit Batu Putih (Gopeng) hike". POKOK KELAPA (in ஆங்கிலம்). 23 January 2019. Retrieved 2 September 2024.
- ↑ Titiwangsa mountain range (Banjaran Titiwangsa in Malay). It extends from Phuket, Thailand and ends in Negeri Sembilan, southwest of Peninsula.
- ↑ "Gunung Batu Putih". AllTrails.com (in ஆங்கிலம்). Retrieved 2 September 2024.
- ↑ Jardine, David (2009). "The Ascents of Dan". Tempo: (1007) p.63.
- ↑ "Worldwide Ribus Project page". Retrieved 10 January 2022.
- ↑ "Ribus Project map". Retrieved 10 January 2022.