கிந்தா ஆறு

ஆள்கூறுகள்: 4°05′40″N 101°00′45″E / 4.09444°N 101.01250°E / 4.09444; 101.01250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிந்தா ஆறு
Kinta River
கிந்தா ஆறு is located in மலேசியா
கிந்தா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுதித்திவாங்சா மலைத்தொடர்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தெலுக் இந்தான்
பேராக் ஆற்றுடன் கலக்கிறது
 ⁃ ஆள்கூறுகள்
4°05′40″N 101°00′45″E / 4.09444°N 101.01250°E / 4.09444; 101.01250
நீளம்100 km (62 mi)
வடிநில அளவு2,540 km2 (980 sq mi)[1]
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுபேராக் ஆறு
நகரங்கள்
குடியிருப்புகள்
சுங்கை சிப்புட்
ஈப்போ
பூசிங்
பத்து காஜா
கோப்பேங்
துரோனோ
கம்பார்
தஞ்சோங் துவாலாங்

கிந்தா ஆறு என்பது (மலாய்: Sungai Kinta; ஆங்கிலம்: Kinta River); மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் முக்கியமான ஓர் ஆறு ஆகும். ஏறக்குறைய 100 கி.மீ. நீளம் கொண்டது.

பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவைச் சுற்றி உள்ள கிந்தா பள்ளத்தாக்கின் (Kinta Valley) பெயரில் இருந்து இந்த ஆறும் அதன் பெயரைப் பெற்றது. ஈப்போ நகரை இந்த ஆறு இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது.[2]

பொது[தொகு]

பேராக் ஆற்றின் துணை ஆறான கிந்தா ஆறு; கிளேடாங் மலைத் தொடருக்கு இடையில் பாய்ந்து செல்கிறது. இந்த இடத்தில் தான் இந்தக் கிந்தா பள்ளத்தாக்கு உள்ளது.

கிந்தா பள்ளத்தாக்கு என்பது கிந்தா மாவட்டம்; கம்பார் மாவட்டம்; கோலாகங்சார் மாவட்டம்; பேராக் தெங்ஙா மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்து உள்ள ஒரு பள்ளத்தாக்குப் பகுதி ஆகும்.

சுண்ணாம்பு மலைகள்[தொகு]

ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது. நகரத்தைக் கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. இந்தக் கிந்தா ஆற்றுடன் சுங்கை பிஞ்சி, சுங்கை பாரி எனும் இரு துணை ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.[3]

ஈப்போ நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் நிறைய உள்ளன. சுண்ணாம்பு மலைகள் குடையப்பட்டு அங்கிருந்து சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. அவை சிமெண்டு தயாரிக்க உதவுகின்றன. ஈப்போவைச் சுற்றிலும் சிமெண்டு ஆலைகள் உள்ளன.[3][4]

கிந்தா பள்ளத்தாக்கு[தொகு]

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை அங்கே திரும்பியது.

1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது.[5]

கிந்தா ஆற்றை ஒட்டிய குடியிருப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Revised equations for Manning’s coefficient for sand-bed rivers. URL assessed on 6 October 2012
  2. Jacq-Hergoualc'h, Michel; Victoria Hobson (September 2002). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk Road (100 BC - 1300 AD). BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-11973-6. 
  3. 3.0 3.1 Ipohworld’s World » Yau Tet Shin’s New Town Under Construction 1908. Ipohworld.org. Retrieved on 10 December 2015.
  4. "Home". Cavesofmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 10 December 2015.
  5. Malaysia was the world’s largest tin producer and supplied more than half of the world’s tin until the mid-1980s when prices fell. By late 1980s, more than 300 tin mines ceased operations.

மேலும் காண்க[தொகு]

மலேசிய ஆறுகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிந்தா_ஆறு&oldid=3496310" இலிருந்து மீள்விக்கப்பட்டது